Published:Updated:

ஐ.நா சபை பொதுச்செயலாளாின் தொழில்நுட்பத் தூதராக இந்திய அதிகாரி அமன்தீப் சிங் கில் நியமனம்!

அமன்தீப் சிங் கில் ( ட்விட்டர் )

இந்திய அதிகாரியான அமன்தீப் சிங் கில், ஐ.நா சபை பொதுச்செயலாளாின் தொழில்நுட்பத் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஐ.நா சபை பொதுச்செயலாளாின் தொழில்நுட்பத் தூதராக இந்திய அதிகாரி அமன்தீப் சிங் கில் நியமனம்!

இந்திய அதிகாரியான அமன்தீப் சிங் கில், ஐ.நா சபை பொதுச்செயலாளாின் தொழில்நுட்பத் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
அமன்தீப் சிங் கில் ( ட்விட்டர் )

ஐ.நா சபையின் பொதுச்செயலாளராக அன்டோனியோ குட்டரெஸ் செயல்பட்டுவருகிறாா். இவாின் தொழில்நுட்பத் தூதராக இந்தியாவைச் சோந்த அமன்தீப் சிங் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவா் சர்வதேச டிஜிட்டல் ஒத்துழைப்புக்கான திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான தொழில்நுட்பத்தின் தூதராகச் செயல்படுவாா் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அன்டோனியோ குட்டரெஸ்
அன்டோனியோ குட்டரெஸ்

அமன்தீப் சிங் கில், சண்டிகரிலுள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் எலெக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன்ஸ்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பிறகு, அமன்தீப் சிங் கில், கடந்த 1992-ம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறையில் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து, ஜெனீவா ஆயுதக் குறைப்பு மாநாட்டில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்திருக்கிறார். அமன்தீப் சிங் கில் 2018 முதல் 2019 வரை டிஜிட்டல் ஒத்துழைப்புக்கான ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரின் உயர்மட்டக்குழுவின் நிர்வாக இயக்குநராகவும், இணைத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

அவர் தற்போது ஜெனிவாவில் உள்ள சர்வதேச மற்றும் மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் சர்வதேச டிஜிட்டல் உடல்நலம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக் கூட்டு (I-DAIR) திட்டத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார். மேலும் ஆங்கிலம், பிரெஞ்ச், இந்தி, பஞ்சாபி மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர் எனக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism