Published:Updated:

`அமேசான் ஒன்றும் புவியின் நுரையீரல் கிடையாது!’- ஐ.நா-வை அதிரவைத்த பிரேசில் அதிபர்

’' அமேசான் காடுகள், புவியின் நுரையீரல்' என மக்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர்’' என்று பிரேசில் அதிபர் ஐ.நா-வில் பேசியுள்ளார்.

அமேசான் மழைக் காடுகளில், கடந்த ஒரு மாதமாக தீ பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. புவியின் நுரையீரல் என அழைக்கப்படும் இந்தக் காடுகளிலிருந்துதான் உலகத்துக்குத் தேவையான 20 சதவிகித ஆக்ஸிஜன் கிடைக்கிறது. இங்கு ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, மொத்த உலகத்துக்கும் தீங்கு விளைவிக்கும். எனவே, அமேசான் காட்டைக் காப்பாற்ற வேண்டும் என உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் பலத்த குரல்கள் ஒலித்தன.

 Brazil President
Brazil President
AP

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள், இளைஞர்கள் எனப் பலரும் அமேசான் காடுகளைக் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் பிரேசில் அரசு, காட்டுத் தீயை அணைக்க எந்தவிதப் பெரிய நடவடிக்கையும் எடுக்காததால், உலக நாடுகளின் கண்டனங்களைப் பெற்றது.

இந்நிலையில், நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற ஐ.நா பொதுக் கூட்டத்தில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவும் (Jair Bolsonaro) கலந்துகொண்டார். அப்போது அவர், அமேசான் காடுகளைப் பற்றியும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பற்றியும் பேசினார். தனக்கு வழங்கப்பட்ட நேரத்தைவிட இரண்டு மடங்கு அதிகம் எடுத்துக்கொண்ட அவர், 32 நிமிடங்கள் ஐ.நா-வில் உரையாற்றியுள்ளார்.

Amazon forests
Amazon forests
AP

அமேசான் காடுகள் ஒன்றும் தீக்கிரையாக்கப்படவில்லை. வேண்டுமென்றால், சர்வதேச சமூகம் நேரில் வந்து பார்வையிடலாம். அமேசான், மனித குலத்தின் பாரம்பர்யம், அதுதான் புவியின் நுரையீரல் போன்ற தவறான கருத்துகள் மக்கள் மத்தியில் உள்ளன. இவை எதிலுமே உண்மை இல்லை.

`இது பிரேசிலுக்கான பிரச்னை மட்டும் கிடையாது!' - அமேசான் தீயால் ஏற்படப் போகும் அழிவுகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பரபரப்பான செய்திகளைத் தருவதாகக் கூறி, சர்வதேச ஊடகங்கள் தவறான தகவல்களைத் தெரிவித்துவருகின்றன. இதை நம்பி, உதவவேண்டிய நாடுகளும் எங்களுக்கு எதிராகக் கருத்து தெரிவித்து, காலனித்துவத் தன்மையோடு நடந்துகொண்டன. போல்சனாரோ ஆட்சியில், அமேசான் காடுகள் பாதுகாக்கப்படவில்லை. அவர், காட்டழிப்பை ஊக்குவிக்கிறார் போன்ற பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. நாங்கள் மிகவும் புனிதமாகக் கருதும் எங்கள் நாட்டின் இறையாண்மை கேள்விக்குறியாக்கப்பட்டுவிட்டது.

UN
UN
AP

சமீபத்தில் நடந்த ஜி7 நாடுகள் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு நாடுகூட, பிரேசிலின் நிலையைப் பற்றிக் கேட்கவில்லை. மாறாக அவை எங்கள்மீது பொருளாதாரத் தடையை விதித்தன. பிரான்ஸ், அயர்லாந்து போன்ற நாடுகள் எங்களிடம் செய்திருக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள உள்ளதாக மிரட்டின. அமேசானில் உள்ள பூர்வகுடிகளை நாங்கள் முறையாகவே நடத்துகிறோம். ஆனால், சில அந்நிய சக்திகள் தங்கள் சொந்த நலனுக்காகப் பூர்வக்குடி தலைவர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 `கடைசி துளி ரத்தத்தைக் கொடுத்தாவது மீட்டெடுப்போம்!’  - அமேசானைக் காக்க களமிறங்கும் பழங்குடிகள்

அதே ஐ.நா சபையில், இவர் பேசுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், காலநிலை ஆர்வலரான 16 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க், காலநிலை மாற்றம் குறித்து உலகத் தலைவர்கள்மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். இவரைத் தொடர்ந்தே பிரேசில் அதிபர் பேசினார்.

Emmanuel Macron
Emmanuel Macron
AP

இவருக்குப் பிறகு பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரேஸில் அதிபர் போல்சனாரோவின் பேச்சைக் கடுமையாக விமர்சித்தார். ”அமேசான் காடுகளின் காலநிலை மீது அனைத்து நாடுகளும் ஆர்வம் கொண்டுள்ளன. அது, இயற்கை சார்ந்தது” என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு