Published:Updated:

``உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கக் காரணம் இதுதான்!" - அமெரிக்க அரசு அதிகாரி விளக்கம்

டொனால்டு லூ
News
டொனால்டு லூ

``உக்ரைனில் இன்னும் இந்திய மாணவர்கள் இருப்பதால்தான், ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கிறது" - டொனால்டு லூ.

Published:Updated:

``உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கக் காரணம் இதுதான்!" - அமெரிக்க அரசு அதிகாரி விளக்கம்

``உக்ரைனில் இன்னும் இந்திய மாணவர்கள் இருப்பதால்தான், ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கிறது" - டொனால்டு லூ.

டொனால்டு லூ
News
டொனால்டு லூ

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 7 நாள்களாகப் போர் நடந்துவருகிறது. இந்த விவகாரத்தில், ரஷ்யாவின் செயல்பாடுகளுக்குத் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து உக்ரைனுக்கு ஆதரவளித்துவரும் அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இதுமட்டுமல்லாமல், உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு எதிராக 11 நாடுகள் வாக்களித்த போதிலும், ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு எதிரான தீர்மானத்தை வீழ்த்தியது.

இந்திய மாணவர்கள்
இந்திய மாணவர்கள்

மேலும் அந்த வாக்கெடுப்பில் இந்தியா உட்பட மூன்று நாடுகள் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன. இந்த நிலையில், உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தில் இந்தியா ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க அமெரிக்கா வலியுறுத்திவருகிறது என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரத்துறை உதவிச் செயலாளர் டொனால்டு லூ நேற்று கூறியுள்ளார். ``உக்ரைன் விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை விளக்க இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. ஒன்று பேச்சுவார்த்தை. ஏனென்றால் அது மட்டுமே பேரழிவுக்கு நிரந்தரத் தீர்வு. மற்றொன்று இன்னும் உக்ரைனில் மீட்கப்படாமல் இருக்கும் 18,000 இந்திய மாணவர்கள்" என டொனால்ட் லூ கூறியுள்ளார்.