Published:Updated:

அமெரிக்கத் தேர்தல் இந்தியாவின் பார்வையிலிருந்து...

அமெரிக்கத் தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
அமெரிக்கத் தேர்தல்

சக்திவாய்ந்த அதிபர் பதவிக்கான தேர்தல் காலம்... உலகமே அதைத்தான் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்கத் தேர்தல் இந்தியாவின் பார்வையிலிருந்து...

சக்திவாய்ந்த அதிபர் பதவிக்கான தேர்தல் காலம்... உலகமே அதைத்தான் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.

Published:Updated:
அமெரிக்கத் தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
அமெரிக்கத் தேர்தல்

லகின் ஏழரை பில்லியன் மக்களின் மீதும் ஏதோவொரு வகையில் தாக்கம் செலுத்திவரும் வல்லரசு அமெரிக்கா. அந்நாட்டு அதிபரின் சின்னச்சின்ன முடிவுகள்கூட உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தும். மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதில் தொடங்கி, உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதியை நிறுத்தியது வரை கடந்த நான்காண்டுகளில் மட்டும் அமெரிக்கா தன் பலத்தினால் பல நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போது அந்த சக்திவாய்ந்த அதிபர் பதவிக்கான தேர்தல் காலம்... உலகமே அதைத்தான் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்கத் தேர்தல் இந்தியாவின் பார்வையிலிருந்து...

குடியரசுக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பிடென்னும் போட்டியிடுகிறார்கள். இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் இந்திய அமெரிக்கர்களின் வாக்குகளுக்கு முக்கியமாக இருதரப்பிலிருந்தும் குறிவைக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தத் தேர்தலில் இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் சற்றுக் கூடுதல் ஆர்வம் இருக்கலாம். ஆனால் இவைமட்டுமன்றி அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள் இந்தியாவிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தும்.

அமெரிக்கத் தேர்தல் இந்தியாவின் பார்வையிலிருந்து...

அமெரிக்காவின் அரசியல் கொள்கை களைப் பொறுத்தவரை, இரு கட்சியினரும் ஆதரிக்கும் மிகச் சில கொள்கைகளில் ஒன்று அமெரிக்க - இந்திய வெளியுறவுக் கொள்கை. ஆசிய நாடுகளில் பலம் பெருக்கும் சீனாவிற்குச் சரியான போட்டியாக இந்தியாவை முன்னிறுத்தவே இரு கட்சிகளும் விரும்பும். எனவே மேலோட்டமாகப் பார்க்கும்போது இருகட்சிகளில் எது வெற்றிபெற்றாலும் இந்திய உறவில் தலைகீழ் மாற்றமெல்லாம் இருக்காது.

அமெரிக்கத் தேர்தல் இந்தியாவின் பார்வையிலிருந்து...

ஆனால், அமெரிக்கா இந்தியாவின் அண்டை நாடுகளுடன் கொண்டிருக்கும் உறவு இந்தியா மீது மறைமுகமாகப் பல அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடியவை. இரு கட்சிகளின் மாறுபட்ட சீனக் கொள்கைகளினால் இந்தியாவிற்கு பாதிப்புகள் இருக்கும். ட்ரம்ப் சீனாவிற்கு எதிராகத் தனித்து இயங்கக் கூடியவர். ஆனால், ஜோ பிடென் அப்படியில்லை. இந்தியாவுடன் கூட்டு வைத்து, பேச்சுவார்த்தைகளின் மூலம் சீனாவை எதிர்கொள்ளக் கூடியவர். அந்த வகையில் ஜோ பிடென் இந்தியாவிற்கு அதிக நன்மையைச் செய்வார். அதேசமயம், இந்தியா - சீனா எல்லை விஷயத்திலும் தேர்தல் முடிவுகள் சில அழுத்தங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள் நிபுணர்கள். சீனா, இந்தியாவின் எல்லைகளில் ஏற்கெனவே கொடுத்துக்கொண்டிருக்கும் குடைச்சல்கள், ட்ரம்ப் அரசின் தலையீடும் அழுத்தமும் இல்லாதபட்சத்தில் மேலும் அதிகரிக்கும் என்பதே இவர்களின் கருத்து.

அமெரிக்கத் தேர்தல் இந்தியாவின் பார்வையிலிருந்து...

சீனா மட்டுமல்ல பாகிஸ்தான் விவகாரத்திலும் இந்த பாதிப்புகள் தொடரும். நீண்ட காலமாகவே இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் தனித்தனியாக மட்டுமே கையாண்டு வந்தது அமெரிக்கா. அதாவது ஒரு நாட்டின் உறவு, இன்னொரு நாட்டை பாதிக்காத வகையில் அமெரிக்கா பார்த்துக்கொள்ளும். ஆனால், காஷ்மீர்ப் பிரச்னையில் சமாதானப் பேச்சுவார்த்தை செய்கிறேன் என ட்ரம்ப் முன்வந்ததையடுத்து அமெரிக்காவின் நிலைப்பாடு சற்றுத் தடுமாறியது. ஜோ பிடென் அதிபராகும் பட்சத்தில் மீண்டும் எப்போதும் போலவே அமெரிக்கா, இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளின் உறவையும் ஒன்றையொன்று பாதிக்காமல் கையாளும். பாகிஸ்தான் விஷயத்தில் அமெரிக்கா தலையிடாமல் இருப்பதே இந்தியாவிற்கு உகந்தது.

இவை தவிர்த்து, ட்ரம்ப் அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகளில் மிகவும் தீவிரக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். அமெரிக்காவில் இந்தியர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு எனப் பலவற்றிற்கு இது பாதிப்பை ஏற்படுத்தியது. ஜோ பிடென் வெற்றிபெறும்பட்சத்தில் அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகளில் சற்றுத் தளர்வு ஏற்படும். எனவே அது இந்தியர்களுக்கு நேரடியாக நன்மையை அளிக்கும்.

அமெரிக்கத் தேர்தல் இந்தியாவின் பார்வையிலிருந்து...

வர்த்தகத்தைப் பொறுத்தவரையில், ட்ரம்ப்பின் இறக்குமதிக்கு எதிரான மனநிலையும் இந்தியாவுக்கு ஏதுவானதாக இல்லை. இந்தியா அமெரிக்கா இடையே கடந்த நான்கு ஆண்டுகளில் பத்து சதவிகிதம் வர்த்தக உறவு அதிகரித்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. ஆனால் அவையெல்லாம் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கும் ராணுவத் தளவாடங்கள், எரிபொருள் சார்பு ஆகியவை அதிகரித்ததன் விளைவே. இந்தியப் பொருள்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதில் ட்ரம்ப் அரசு இந்தியாவிற்குச் சிரமம் கொடுத்துவந்ததே உண்மை.

வர்த்தக பாதிப்புகள் மட்டுமன்றி, அமெரிக்கத் தேர்தல் உலக அளவில் காலநிலை மாற்றம் சார்ந்த கொள்கைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து ட்ரம்ப் விலகியதை அடுத்து உலகளவில் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் போரில் ஒரு தொய்வு ஏற்பட்டிருக்கிறது. ஜோ பிடென் ஆட்சிக்கு வரும்பட்சத்தில் இந்தியாவுடன் காலநிலை மாற்றங்கள் குறித்தான கொள்கைகளும் கூட்டு முயற்சிகளும் மீண்டும் புத்துயிர் பெறும்.

அமெரிக்கத் தேர்தல் இந்தியாவின் பார்வையிலிருந்து...

இந்தியா - அமெரிக்கா இரு நாடுகளுக்கிடையே சார்பு நிலை அதிகம். வர்த்தகம் சார்ந்த சார்பு நிலையாக இருந்தது தற்போது மாற்றம் கண்டிருக்கிறது. இரு நாடுகளின் இடையே அரசியல் கொள்கைகள் ரீதியாகச் சார்பு நிலை என்பது சமீபத்தில் நாம் கவனிக்க வேண்டியதாக மாறியிருக்கிறது. பா.ஜ.க-வின் கொள்கை முடிவுகளுக்கு ட்ரம்ப் அளித்த ஆதரவை ஜோ பிடென்னிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. எனவேதான் இந்தத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து இரு நாடுகளின் உறவு சார்ந்து பல்வேறு மாற்றங்களை நாம் எதிர்நோக்கியிருக்கிறோம்.

அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் ட்ரம்ப் - மோடி என இரு தனி நபர்களுக்கு இடையேயும் நிறைய ஒற்றுமை உண்டு. இருவரும் வலதுசாரிக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள். கொரோனா காலத்திலேயே ‘நமஸ்தே ட்ரம்ப்’ என்று ஊரைக்கூட்டி ஆரவாரமாக வரவேற்றவர் மோடி. அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் குறித்து யாருக்கு ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக மோடிக்கு இருக்கும்.