ஈரான் பாதுகாப்புப் படைகளின் தளபதியான காசிம் சுலைமானி அமெரிக்க ட்ரோன் தாக்குதலால் கொல்லப்பட்டதையடுத்து, மூன்றாம் உலகப்போருக்கான அபாயம் சூழ்ந்துள்ளதாக உலக நாடுகள் பதைபதைக்கின்றன. அதற்கேற்றாற்போல், ‘சுலைமானியின் கொலைக்கு பழிதீர்க்காமல் விட மாட்டோம்’ என்று முழங்கிய ஈரான், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களின்மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.

மீண்டும் ஓர் உலகப்போர் ஏற்பட்டால், அது மீட்டுருவாக்கம் செய்ய முடியாத மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உலகறிந்த செய்தி. இதை, எல்லா நாடுகளும் அறிந்துள்ளன. எந்த நாடும் போரை விரும்புவதில்லை. ஆனால், தேர்தல் அரசியல், ஆயுத வியாபாரம் போன்றவற்றுக்காக இப்போது போரை விரும்பும் நாட்டுத் தலைவர்கள் அதிகம் தோன்றியிருக்கின்றனர்.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான 70 ஆண்டுகளில் நாடுகளின் ராணுவ பலம், ஆயுதங்கள், தொழில்நுட்பம் போன்றவை பல மடங்கு வளர்ந்திருக்கின்றன. அணு ஆயுதங்களின் இருப்பு, போரின் வடிவத்தையே மாற்றியிருக்கிறது. அணு ஆயுதத் தாக்குதல் நிகழ்ந்தால், அதுவே உலக அழிவின் தொடக்கப்புள்ளியாக இருக்கும்.

இரண்டாம் உலகப்போரால் ஏற்பட்ட இழப்புகள், அதிலிருந்து கற்ற படிப்பினைகளின் அடிப்படையில்தான் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. மீண்டும் ஓர் உலகப்போர் ஏற்பட்டு விடக் கூடாது என்பதுதான் ஐ.நா தோற்றுவிக்கப்பட்டதன் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால், அதையும் தாண்டி 2020-ன் தொடக்கத்திலேயே போர் மேகங்கள் பூமியைச் சூழத் தொடங்கியுள்ளன.

உலகப்போர்ப் பதற்றங்களை உருவாக்குவதில், உலக வல்லரசுகள் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. வடகொரியாவை அமெரிக்கா தாக்கும், மூன்றாம் உலகப்போர் உருவாகும் என்று சில காலம் சொல்லப்பட்டுவந்தது. வர்த்தகப் போட்டியால் சீனாவுடன் அமெரிக்கா போரில் இறங்கும் என மற்றொரு கருத்தும் பரவியது. இப்போது எதிர்பாராதவிதமாக ஈரான் - அமெரிக்கா மோதலால் மூன்றாம் உலகப்போர் உருவாகும் என்ற பதற்றம் நிலவுகிறது.

அதிகாரத்தில் ஈரானின் முதுபெரும் தலைவர் அயத்துல்லா அலி கொமேனிக்கு அடுத்த நிலையில் இருந்தவர், காசிம் சுலைமானி. ஈரான் பாதுகாப்புப் படைகளின் தளபதியான சுலைமானி, மத்திய கிழக்கின் ஈரானின் இருப்புக்கும் ஈராக்கில் ஐ.எஸ் படைகள்மீதான வெற்றிக்கும் மிக முக்கியப் பங்காற்றியவர். ‘அமெரிக்க இலக்குகளைத் தாக்க சுலைமானி திட்டமிட்டுக்கொண்டிருந்தார். அதனால், தற்காப்புக்காக அமெரிக்கா முதலில் தாக்கியது. சுலைமானி, பல அமெரிக்க உயிர்கள் பலியானதற்குக் காரண மானவர். அவர் எப்போதோ கொல்லப்பட்டிருக்க வேண்டும்’ என்று சுலைமானியின் கொலைக்கு நியாயம் கற்பித்தார் ட்ரம்ப்.

‘ஈரானில் 52 இடங்களைக் குறிவைத்திருக்கிறோம். ஈரானின் கலாசாரச் சின்னங்களைத் தாக்குவோம்’ என ட்விட்டரில் மீண்டும் ஒரு போர்ப்பிரகடனத்தை அறிவித்தார் ட்ரம்ப். இதற்கு, அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனி லிருந்தே எதிர்ப்பு வந்தது. கலாசார, மதத்தலங்களைத் தாக்குவது சர்வதேச போர்விதிகளுக்கு எதிரானது என்று கண்டனங்கள் எழவே, ட்ரம்ப்பும் அதிலிருந்து பின்வாங்கினார்.

சுலைமானி படுகொலையைத் தொடர்ந்து, ‘ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும்’ என ஈராக் நாடாளு மன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், ஈராக்கிலிருந்து வெளியேறப்போவதில்லை என அந்தத் தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்துவிட்டது.

சுலைமானியின் படுகொலைக்குப் பதிலடி தரும்விதமாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களையும், போர்க்கப்பல் களையும் ஈரான் தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்க ராணுவத்தை, தீவிரவாத இயக்கமாக ஈரான் அறிவித்தது. இது, இரு நாடுகளுக்குமிடையே பதற்றத்தை மேலும் அதிகரிக்கவே செய்தது. `இரண்டு தரப்பும் பதற்றங்களைத் தணித்து அமைதி காக்க வேண்டும்’ என ஐ.நா உட்பட பல உலக நாடுகளும் கோரிக்கைவிடுத்தன.

இந்தச் சூழ்நிலையில், ஜனவரி 8-ம் தேதி பின்னிரவு 1 மணியளவில் (இந்திய நேரப்படி), ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள்மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் நடத்தியது. இந்தச் சமயத்தில், எதிர்பாராதவிதமாக ஈரானின் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 169 பயணிகளும் 7 ஊழியர்களும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பயணிகள் விமானம் எவ்வாறு விபத்துக்குள்ளானது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்தான் விமான விபத்துக்கும் காரணம் என்று அமெரிக்க ஊடகங்களால் சொல்லப்பட்டது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஈரான் ஏற்கவில்லை. விமான விபத்துகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ள ஈரான், விசாரணையில் அமெரிக்காவைச் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்றும், விமானத்தின் கறுப்புப்பெட்டி அமெரிக்காவுக்கு வழங்கப்படாது என்றும் அறிவித்துள்ளது. ‘விமான விபத்துக்கான சரியான காரணம் கண்டறியப்படும் வரை யூகங்களுக்கு பதிலளிக்கப்போவதில்லை’ என உக்ரைன் அரசு சொல்கிறது.

அமெரிக்க ராணுவத் தளங்களின் மீதான ஈரான் ஏவுகணைத் தாக்குதல் ‘அமெரிக்காவின் முகத்தில் விழுந்த அறை’ என்கிறது ஈரான். ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் தரப்பில் சொல்லப்பட்டாலும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று மறுத்திருக்கிறது அமெரிக்கா.

ஐ.நா சபைக் கூட்டத்தில் பங்கேற்க வரவிருந்த ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, அமெரிக்கா அனுமதி மறுத்துள்ளது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் நடவடிக்கை ஐ.நா விதிகளுக்கு எதிரானது என ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் நடவடிக்கை பற்றி வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப், ‘‘நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை ஈரானால் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது. ஈரான் நடவடிக்கைகளை உலகம் பொறுத்துக்கொண்ட காலம் முடிந்துவிட்டது. தீவிரவாதத்துக்கு ஈரான் தொடர்ந்து நிதியளித்து வருகிறது. அமெரிக்காவை அச்சுறுத்திய தீவிரவாதியை நாங்கள் அழித்திருக்கிறோம்.

மத்திய கிழக்கில் தொடர்ந்து போர்களை ஊக்குவித்தவர் காசிம் சுலைமானி. அமெரிக்கர்களுக்கு எதிராக தொடர்தாக்குதல்களை நடத்தியுள்ளார். சுலைமானியின் கைகள் அமெரிக்கர்கள், ஈராக்கிகளின் ரத்தத்தால் நனைந்துள்ளன. கடந்த அரசாங்கத்தால் கையெழுத்திடப்பட்ட ஈரான் அணு ஒப்பந்தம் மிகவும் பிழையானது. மற்ற நாடுகளும் அதிலிருந்து வெளியேற வேண்டும். எனது நிர்வாகத்தின்கீழ் ஐ.எஸ் தளபதி அல் பாக்தாதி கொல்லப்பட்டார். ஈரான் தீவிரவாதத்தை வளர்ப்பதைத் தவிர்த்து வளர்ச்சியில் கவனம் செலுத்தினால், அமெரிக்கா உதவத் தயாராக இருக்கிறது. அமெரிக்கா, எரிசக்தியில் தன்னிறைவு அடைந்து விட்டது. அமெரிக்காவுக்கு மத்திய கிழக்கின் எண்ணெய் தேவையில்லை. அமைதியையே அமெரிக்கா விரும்புகிறது’’ என்றார்.

‘மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்துக்கான போட்டி இது’ என ஒரு தரப்பில் சொல்லப்படும் நிலையில், ‘எண்ணெய் வளத்தின்மீது அமெரிக்காவுக்கு ஆர்வமில்லை’ என ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். ‘ஈரானுடனான ட்ரம்ப்பின் இந்த மோதல், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்புக்கு எதிராக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிற பதவிநீக்கத் தீர்மானத்திலிருந்து திசை திருப்பவும், அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் தன் செல்வாக்கை அதிகரித்துக்கொள்ளவும் மேற்கொள்ளப்பட்ட செயல்’ என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேற்குலத்துக்கும் மத்திய கிழக்குக்குமான மோதல்போக்கு, சிலுவை யுத்தக் காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிற ஒன்று. 2003-ம் ஆண்டு ஈராக்கில் சட்டவிரோதமாக அமெரிக்கா ஊடுருவியதே மத்திய கிழக்கில் சமீபகாலங்களில் ஏற்பட்ட பதற்றங்களின் தொடக்கப்புள்ளி.

ஈராக்கில் அமெரிக்கா கால் வைப்பதற்கு முன்பாக பேரழிவுக்கான ஆயுதங்களை சதாம் உசேன் வைத்திருப்பதாகப் பரப்புரை செய்யப்பட்டது. அதை வைத்துதான் ஈராக்கில் ஊடுருவியதை அமெரிக்க நாடாளுமன்றத்திலும் ஐ.நா சபையிலும் அமெரிக்கா நியாயப்படுத்தி வாதிட்டது. ஆனால், ‘ஜார்ஜ் புஷ் அரசு கூறியது தவறானது’ என, ஓய்வுபெற்ற அமெரிக்க ராணுவ அதிகாரி வில்கெர்சன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பொய்களின்மீது பயணித்துதான் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ஈராக்கில் நுழைந்தன. ஈராக் அரசு தூக்கியெறியப்பட்டு, சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார். அன்று மத்திய கிழக்கில் பற்றவைக்கப்பட்ட தீ, தற்போதுவரை எரிந்துகொண்டிருக்கிறது. ‘ஈராக்கில் அமெரிக்கா ஊடுருவியது சட்டவிரோதமானது’ என, மறைந்த முன்னாள் ஐ.நா பொதுச்செயலாளர் கோஃபி அன்னானும் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில்தான் சுலைமானியை அமெரிக்கா கொன்று, போருக்கு விதை போட்டிருக்கிறது. ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவுக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவருமே ட்ரம்ப்பின் நடவடிக்கையைக் கண்டித்துள்ளனர். ‘மத்திய கிழக்கில் இது பதற்றத்தை மேலும் அதிகரிக்கும்’ என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதி போட்டியில் முன்னணியில் உள்ள பெர்னி சாண்டர்ஸ், “ஈராக் யுத்தத்தில் அமெரிக்கா செய்த தவற்றை மீண்டும் செய்ய அனுமதிக்க மாட்டேன். போர் என வந்தால், கோடீஸ்வரர்களின் பிள்ளைகள் அல்ல... உழைக்கும் வர்க்கத்தின் பிள்ளைகள்தான் உயிர்விட நேரிடும். பருவநிலை நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் போருக்கு நாம் முக்கியத்துவம் செலுத்தக் கூடாது’’ எனக் கூறியிருக்கிறார்.

ஈரானின் தற்போதைய நிலைப்பாடு பற்றி இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகேனி சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அதில், ‘முழு வீச்சிலான போரை விரும்பவில்லை. எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டு பதிலடி மட்டுமே கொடுத் துள்ளோம். இரு நாடுகளுக்குமிடையே அமைதிக்கான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்தால் நாங்கள் நிச்சயம் வரவேற்போம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனாலும் ஈராக், ஈரானில் வசிக்கும் இந்தியர்கள், பதற்றங்கள் தணியும் வரை வெளியில் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், புதிதாக யாரும் இரண்டு நாடுகளுக்கும் பயணிக்க வேண்டாம் என்றும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஈராக், ஈரான் வான் பரப்பில் பயணிக்க வேண்டாம் என, பயணிகள் விமானங்களுக்கும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளது.

போருக்கான சூழல் இருப்பதை உணர்ந்தே இந்தியா இப்படியோர் அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக உலகம் முழுவதிலும் உள்ள இந்தியர்கள் மத்தியில் தகவல் பரவியுள்ளது. ஈரான் வெளியிட்ட ஓர் அறிவிப்பும் போர் வரும் என்ற வாதத்துக்கு வலு சேர்க்கிறது. ‘ஈரானை அமெரிக்கப் போர்விமானங்கள் தாக்கினால், அவற்றை வீழ்த்துவதோடு அவை புறப்படும் நாடுகளையும் தாக்குவோம்’ என்று கூறியுள்ளது. அதாவது, அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகளும் தாக்கப்படும் என்பதே அந்த எச்சரிக்கை.

இரு நாடுகளின் அடுத்தடுத்த நடவடிக்கைகளும் அறிவிப்புகளும், மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப்பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளன. அவ்வாறு போர் ஏற்படும்பட்சத்தில், அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது இந்தியாதான். மத்திய அரசின் தரவுகளின்படி மத்திய கிழக்கு நாடுகளில் 82 லட்சத்து 83 ஆயிரத்து 865 இந்தியர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அதில் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தமிழர்கள் என்றும் கணக்கிடப்படுகிறது.

அந்த வகையில் 20 லட்சம் தமிழர்களின் பாதுகாப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாகும். அது தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களின் பொருளாதாரத்தையும் பாதிக்கும். அதனால், ‘போர் வேண்டாம், போருக்கான சூழலே உருவாகக் கூடாது’ என்பதே அனைவரின் வேண்டுதலும் விருப்பமுமாக உள்ளது.

1998-ம் ஆண்டு, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஈராக் மீது போர் தொடுக்கும் அரசின் தீர்மானத்தின்மீதான வாக்கெடுப்பு நடந்தது. அதை எதிர்த்துப் பேசிய அன்றைய எம்.பி-யான டோனி பென், ‘‘இன்றைய தலைமுறைக்கு யுத்தம் என்பது ஒரு கம்ப்யூட்டர் கேம்போல் ஆகிவிட்டது. அரசின் முடிவுக்கு ஆதரவாக வாக்களிப்பவர்கள் அனைவருமே போரினால் ஏற்படும் அனைத்து அப்பாவிகளின் உயிர்ப்பலிக்கும் பொறுப்பாவார்கள்’’ என்று பேசியிருந்தார்.

ஈராக்மீது தொடுத்த தாக்குதலின் தவற்றை மேற்குலகம் தற்போதுதான் உணரத் தொடங்கியிருக்கிறது. ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்களில் முதலீடு செய்துள்ள கோடீஸ்வர முதலாளிகளுக்கு வேண்டுமானால் போர் தேவையானதாக இருக்கலாம். ஆனால், மற்றவர்களுக்கு அப்படியல்ல.

‘World war Z’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் ‘Mother nature is a serial killer’ என்ற ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும். அமேசான் தொடங்கி ஆஸ்திரேலியா வரை இயற்கைப் பேரிடர் கருணையின்றி அதன் கோரமுகத்தைக் காட்டி வருகிறது. இயற்கையின்மீது மனிதன் இதுநாள் வரை தொடுத்த தாக்குதலுக்கு, இயற்கை பதிலடி கொடுத்துவருகிறது. இயற்கையை மனிதகுலம் பரிவோடு எதிர்கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலையில், மூன்றாம் உலகப்போர் என தங்களுக்குள் மோதிக்கொண்டு, இயற்கையுடனும் மோதிக்கொண்டிருப்பது பேராபத்து!

அமெரிக்கா – ஈரான் போர்ச்சூழல் உருவாகியிருப்பதால், வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்குப் பாதிப்புகள் ஏற்படுமா... இதைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

இதுகுறித்து சவுதி அரேபியா, துபாய், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் சிலரிடம் பேசினோம். அவர்களில் பலரும் இந்த விஷயத்தை மிகவும் உன்னிப்பாகக் கவனித்துவருவது நன்கு புரிந்தது. ஆனால், கீழ்நிலையில் பணியாற்றும் தொழிலாளர்களில் பலருக்கு இதுபற்றி முழுமையாகத் தெரியவில்லை.

ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது ஏற்பட்ட பாதிப்புகளை ஒப்பிட்டுப்பார்த்து, தங்களுக்குள் இதுபற்றி விவாதிப்பதாக அங்கு உள்ள சிலர் தெரிவித்தனர். ஒட்டுமொத்தமாக அவர்கள் மத்தியில் ஒருவிதமான அச்ச உணர்வு ஏற்பட்டிருப்பதாகவும் சொன்னார்கள். ஒரு சிலர் மட்டும், ‘இங்கெல்லாம் எந்தப் பாதிப்பும் ஏற்படாது’ என்று நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிவோரின் உறவினர்கள் மத்தியில் போர் குறித்த அச்சம் அதிகமாகவே தெரிகிறது!