‘‘அந்தப் பதவியில் அடுத்த வாரத்தில் ஒரு பெண்ணை நியமிக்கப்போகிறேன். ஏனெனில், எனக்கு ஆண்களைவிட பெண்களை மிகவும் பிடிக்கும்’’ - அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஒரு பிரசாரப் பேரணியில் இப்படி உற்சாகமாகச் சொன்னார். கணையப் புற்றுநோயுடன் போராடி, 87 வயதில் மறைந்த அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க் இடத்துக்கு வேறொருவரை நியமிப்பது பற்றியே அவர் இப்படிக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் ஒரு நீதிபதியின் இயற்கை மரணம் என்பது ஓர் அஞ்சலிச் செய்தியுடன் முடிந்துபோகிற விவகாரம். ஆனால், அமெரிக்காவில் அது ஓர் அரசியல் சூறாவளியையே ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு மூன்று காரணங்கள். ஒன்று, பரபரப்பான தேர்தல் நேரத்தில் அவர் இறந்துபோனது. இரண்டு, அந்த காலியிடத்துக்கு இன்னொருவரை நியமிப்பதில் அரசியல் மரபுகள் மீறப்படுவது. மூன்று, ‘அந்த இடத்துக்கு நியமிக்கப்படும் ஒருவர், இன்னும் சில வாரங்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவையே தீர்மானிக்கும் நபராக மாறக்கூடும்’ என்பது!

விசித்திர நீதிமன்றம்!

அமெரிக்க தேர்தல் நடைமுறை பல விசித்திரங்களைக்கொண்டது. அதுபோலவே அமெரிக்க உச்ச நீதிமன்றமும் விசித்திரமானது. அமெரிக்க அரசு நிறைவேற்றும் முக்கியச் சட்டங்கள் குறித்த வழக்குகள், முக்கியத்துவம் வாய்ந்த மேல்முறையீடுகள், மாகாணங்களுக்கும் மைய அரசுக்குமான உரசல்கள் போன்றவற்றை விசாரிக்கும் நீதிமன்றம் இது. எல்லா விஷயங்களிலும் இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதி முடிவாகக் கருதப்படும். ஓர் ஆண்டில் அதிகபட்சம் 100 வழக்குகளுக்கு மேல் இங்கு விசாரிக்கப்படுவதில்லை. இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு, உலகின் பல நாட்டு நீதிமன்றங்களில் உதாரணமாகக் காட்டப்படுவதுண்டு.

நீதிபதிகளில் இரண்டு கோஷ்டி!

அமெரிக்க அதிபரே உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்கும் அதிகாரம் படைத்தவர். அந்த நியமனத்தை அமெரிக்க செனட் சபை அங்கீகரிக்க வேண்டும். மொத்தம் ஒன்பது நீதிபதிகள். ஓய்வு வயது என்று எதுவும் இல்லை. நியமன தேதியிலிருந்து ஆயுட்காலம் முழுக்க அவர்கள் நீதிபதிகளாக இருப்பார்கள். ஒருவர் மறைந்தாலோ, முதுமை காரணமாக பதவி விலகினாலோ, சுயமாக ஓய்வு அறிவித்துக்கொண்டாலோ அந்த இடத்துக்குப் புதியவர் நியமிக்கப்படுவார்.

தங்கள் கட்சியின் கொள்கை சார்புடைய நீதிபதிகளையே நியமிப்பது அதிபர்களின் வழக்கமாக இருக்கிறது. குடியரசுக் கட்சி ஆட்சியில் நியமிக்கப்படும் நீதிபதிகள், ‘பழைமைவாதி’களாக அறியப்படுகிறார்கள். மத நம்பிக்கை மற்றும் தனிமனித சுதந்திரம் சார்ந்த வழக்குகளில் அவர்கள் குடியரசுக் கட்சியின் நிலைப்பாட்டிலிருந்தே தீர்ப்பு சொல்கிறார்கள். ஜனநாயகக் கட்சி ஆட்சியில் நியமிக்கப்படும் நீதிபதிகள், ‘தாராளவாதி’களாக அறியப்படுகிறார்கள். இவர்களின் தீர்ப்புகள் பல புதிய உரிமைகளை அமெரிக்க மக்களுக்குக் கொடுத்திருக்கின்றன.

யாருக்கு செல்வாக்கு?

தற்போது மறைந்த ரூத் பேடர் கின்ஸ்பர்க், ஒரு தாராளவாதியாகவும் இடதுசாரியாகவும் அடையாளம்காணப்பட்டவர். பெண்ணுரிமை சார்ந்து இவர் வழங்கிய பல தீர்ப்புகள், அமெரிக்க மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன. இவர் உயிருடன் இருந்தவரையில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் பழைமைவாதிகள் ஐந்து பேரும், தாராளவாதிகள் நான்கு பேரும் நீதிபதிகளாக இருந்தனர். ட்ரம்ப் தனது ஆட்சிக்காலத்தில் இதுவரை இரண்டு நீதிபதிகளை நியமித்திருக்கிறார். இதனால் பழைமைவாதிகள் மெஜாரிட்டி பெற்றனர். எனினும், முக்கியத்துவம் வாய்ந்த சில தீர்ப்புகளில், பழைமைவாதிகள் தரப்பிலிருந்து ஒருவரோ, இருவரோ அணி மாறி தீர்ப்பளித்தனர்.

இப்போது கின்ஸ்பர்க் இடத்துக்கு ஒரு பழைமைவாதியை ட்ரம்ப் நியமித்தால், நீதிமன்றத்தில் பழைமைவாதிகளின் செல்வாக்கு 6-3 என்ற விகிதத்தில் ஓங்கிவிடும். ‘குறிப்பாக இளம் வயது நீதிபதிகளை நியமிப்பதை ட்ரம்ப் வழக்கமாகவைத்திருக்கிறார். அவர்கள் நீண்டகாலம் பதவியிலிருந்து செல்வாக்கு செலுத்துவார்கள். நீதிமன்றம் நீண்டகாலத்துக்கு ஒரு சார்புள்ளதாக மாறிவிடும்’ என்பது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் வாதம். துப்பாக்கி உரிமம், பெண்கள் வேண்டாத கர்ப்பத்தை கருச்சிதைவு செய்துகொள்வதற்கான அனுமதி போன்ற விவகாரங்களில் விரைவில் தீர்ப்பு வரவிருக்கிறது. இந்த நேரத்தில் நீதிமன்றத்தின் சமநிலை அதிகமாக ஒரு பக்கம் சாய்ந்துவிடக் கூடாது என மனித உரிமை ஆர்வலர்கள் கவலைப்படுகின்றனர்.

மீறப்படும் மரபு!

பராக் ஒபாமாவின் பதவிக் காலம் முடிய 10 மாதங்கள் இருந்தபோது உச்ச நீதிமன்றத்தில் ஒரு காலியிடம் ஏற்பட்டது. ஒபாமா அதற்கு ஒருவரைத் தேர்வு செய்தபோது எதிர்ப்பு எழுந்தது. அப்போது செனட் சபையில் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சிக்கு மெஜாரிட்டி இருந்தது. அந்தக் கட்சியின் செனட் தலைவரான மிட்ச் மெக்கானெல், ‘தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டன. புதிய அதிபர் பதவி ஏற்ற பின் நீதிபதியை நியமிக்கலாம்’ என்று தடுத்துவிட்டார். ஒபாமாவும் அதை ஏற்றுக்கொண்டார்.

இப்போதோ, தேர்தலுக்கு வெறும் 46 நாள்களே இருக்கும்போது காலியிடம் ஏற்பட்டிருக்கிறது. இப்போதும் அதே மிட்ச் மெக்கானெல், குடியரசுக் கட்சியின் செனட் சபைத் தலைவராக இருக்கிறார். ‘ட்ரம்ப் நியமிக்கும் நீதிபதிக்கு செனட் சபை ஒப்புதல் வழங்கும்’ என்று இப்போது மாற்றிப் பேசுகிறார் அவர். 100 உறுப்பினர்கள்கொண்ட செனட் சபையில் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே, தனது நியமனத்துக்கு ஒப்புதல் பெறுவதில் சிக்கல் இருக்காது என ட்ரம்ப் நினைத்தார். ஆனால், அவர் கட்சியிலேயே இதுவரை இரண்டு செனட் உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

செனட் சபைக்கும் இப்போது தேர்தல் நடக்கிறது. பல உறுப்பினர்கள் தோல்வியைத் தழுவும் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் ‘நீதிபதி நியமனத்துக்கு ஒப்புதல் தரும் தார்மிக நிலையில் செனட் இருக்கிறதா...’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதிபர் தேர்தலில் ட்ரம்பை எதிர்க்கும் ஜோ பைடன், ‘முதலில் மக்கள் தங்கள் அதிபரைத் தேர்வு செய்யட்டும். அதன் பிறகு அந்த அதிபர் வந்து நீதிபதியை நியமனம் செய்வார்’ என்கிறார்.

யாருக்கு வாய்ப்பு?

ட்ரம்ப் இப்போது உடனடியாக இந்த நியமனத்தைச் செய்வதன் மூலம், ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கப்பார்க்கிறார். மத நம்பிக்கையுள்ள ஒருவரை நியமிப்பதன் மூலம், பெரும்பான்மை கத்தோலிக்கர்களின் வாக்குகளைப் பெற முடியும். அமி கோனி பார்ரெட், பார்பரா லகோவா ஆகியோர் அவர் பட்டியலில் இருக்கிறார்கள். ‘பார்பராவை நியமித்தால், அவரின் ஃபுளோரிடா மாகாணத்தில் ட்ரம்ப் சுலபமாக ஜெயிக்கலாம்’ என குடியரசுக் கட்சியினர் கூறுகிறார்கள். கருத்துக் கணிப்பில் மிகவும் பின்தங்கியுள்ள ட்ரம்ப், எப்படியாவது வாக்குகளை வாங்கத் துடிக்கிறார்.

இன்னொரு பக்கம், தேர்தல் நடைமுறையையே ட்ரம்ப் குறை சொல்லிவருகிறார். கொரோனா அச்சம் இருப்பதால், நிறைய மாகாணங்களில் தபால் ஓட்டுகளை அனுமதிக்கிறார்கள். சில இடங்களில் முன்கூட்டியே வாக்குகளைச் செலுத்தவும் வசதி செய்துள்ளனர். ‘இதனால் தேர்தலில் மோசடி நிகழும்’ என ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இது தொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் இப்போதே பல வழக்குகள் போடப்பட்டுள்ளன.

‘‘நான் ஜெயிப்பது போன்ற ஒரு முடிவைத் தவிர வேறு எந்த முடிவு வந்தாலும் ஏற்க மாட்டேன்’’ என்று இப்போதே ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். ‘‘தேர்தல் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடும்போது, நாம் நியமித்த நீதிபதிகள் நமக்குத் தேவைப்படும் ‘நியாயத்தை’ வழங்குவார்கள்’’ என ட்ரம்ப் நம்புகிறார்.

நீதியில் அரசியல் கலக்கும்போது எதிர்ப்புகள் எழுவது இயல்புதானே!