Published:Updated:

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரை சுட்டுக்கொன்றது அமெரிக்கா - ஜோ பைடன் அதிகாரபூர்வ தகவல்!

ஜோ பைடன் ( Evan Vucci )

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவரான அபு அல் ஹாசிமி சுட்டுக் கொல்லப்பட்டர் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஈராக் போரின்போது உருவானதாகக் கருதப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, 2004-ம் ஆண்டு முதல் அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் இணைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஈராக்கில் சன்னி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைக் கைப்பற்றி அங்கு கலிஃபா ஆட்சியை நிறுவி, அதை சிரியா முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் செயல்படுவதாக அறியப்பட்டுவந்தது. அல்கொய்தா அமைப்பின் தலைவரான பின் லேடனை கொன்று வீழ்த்திய பிறகு, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு அமெரிக்காவால் குறிவைக்கப்பட்டு வந்தது.

 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு

இந்த நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவரான அபு அல் ஹாசிமி சுட்டுக் கொல்லப்பட்டர் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த ட்விட்டர் பதில், அமெரிக்க ராணுவத்திற்கும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில், அமெரிக்க ராணுவத்தினரால் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபு இப்ராகிம் அல் ஹாசிமி நேற்றிரவு கொல்லப்பட்டார் என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.