Published:Updated:

ஜி-20 மாநாடு: முதன்முறையாகச் சந்தித்துக்கொண்ட பைடன், ஜி ஜின்பிங் - இரு நாட்டு உறவு குறித்துப் பேச்சு

பைடன், ஜி ஜின்பிங் ( Alex Brandon )

இந்தச் சந்திப்பு வளர்ந்துவரும் வேறுபாடுகளைச் சமாளிக்கவும், மோதலைத் தவிர்க்கவும் வழிவகுக்கும் என இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

உலகப் பொருளாதாரத்தில் முதன்மையாக விளங்கும் இரண்டு வல்லரசு நாடுகளின் தலைவர்களும் ஜி- 20 உச்சிமாநாட்டில் சந்தித்துக்கொண்டனர்.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு, தற்போதுதான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் இன்று ஜி-20 உச்சிமாநாட்டில் சந்தித்துக்கொண்டனர். இந்தச் சந்திப்பு வளர்ந்துவரும் வேறுபாடுகளைச் சமாளிக்கவும், மோதலைத் தவிர்க்கவும் வழிவகுக்கும் என இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

ஜி-20 மாநாடு: முதன்முறையாகச் சந்தித்துக்கொண்ட பைடன், ஜி ஜின்பிங் - இரு நாட்டு உறவு குறித்துப் பேச்சு
Alex Brandon

தைவான் உள்ளிட்ட சில பிரச்னைகள் தொடர்பாகப் பல மாதங்களாக இரு நாடுகளுக்குமிடையே பதற்றம் நிலவிய நிலையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஜி-20 உச்சிமாநாடு இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்றது. இன்றைய தினம் உச்சிமாநாடு அமர்வுக்கு முன்பு பைடன், ஜி ஜின்பிங் கைக்குலுக்கிக்கொண்டனர்.

ஜி-20 மாநாடு: முதன்முறையாகச் சந்தித்துக்கொண்ட பைடன், ஜி ஜின்பிங் - இரு நாட்டு உறவு குறித்துப் பேச்சு
Alex Brandon

அதைத் தொடர்ந்து மாநாட்டில் நேர் எதிராக அமர்ந்திருந்த பைடன், ஜி ஜின்பிங்கிடம், ``பீஜிங், வாஷிங்டனில் பொறுப்புகளைப் பகிர வேண்டும். இதன் மூலம் மோதல்களாக உருவெடுக்கும் போட்டிகளைத் தவிர்க்க முடியும்" என்று கூறினார். அதற்கு ஜி ஜின்பிங், ``சீனாவும் அமெரிக்காவும் உறவைச் சரியாகக் கையாளும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன" என்றார்.