Published:Updated:

வெள்ளை மாளிகையில் குடியேறும் அமெரிக்காவின் `ஃபர்ஸ்ட் ஃபேமிலி’ - ஜோ பைடன் குடும்ப உறுப்பினர்கள்!

ஜோ பைடன்
ஜோ பைடன்

ஜோ பைடன் தனது வாழ்க்கை முழுவதிலும், தன் குடும்பத்தினரை முக்கியம் வாய்ந்தவர்களாக மாற்றியிருக்கிறார். மேலும், அவரது 2020 அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, அவர்கள் மீது முழு கவனத்தையும் ஈர்க்கவைத்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றிபெற்றதாக அமெரிக்க நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்ததையடுத்து, வரும் ஜனவரி 20-ம் தேதி, அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவிருக்கிறார்.

ஜோ பைடன் பதவியேற்பதற்குச் சில மணி நேரத்துக்கு முன்னதாகவே டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையை காலி செய்துவிட்டு வாஷிங்டனிலிருந்து விமானம் மூலம் ஃபுளோரிடா செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியது. ஃபுளோரிடாவிலுள்ள மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) என்ற தனது பிரமாண்டமான பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் ட்ரம்ப் குடியேறவிருக்கிறார்.

ஜோ - ஜில் பைடன் தம்பதி
ஜோ - ஜில் பைடன் தம்பதி
Elise Amendola

இந்தநிலையில், அதிபர் பொறுப்பேற்கவிருக்கும் ஜோ பைடனும் அவருடைய மனைவி ஜில் இருவரும், பதவியேற்பு விழா முடிந்தவுடன் வெள்ளை மாளிகையில் வசிக்கவிருக்கும் புதிய குடும்பத்தினராக அமெரிக்காவின் `ஃபர்ஸ்ட் ஃபேமிலி' (First Family) அந்தஸ்தைப் பெறுவார்கள்.

ஜோ பைடன், தனது வாழ்க்கை முழுவதிலும், தன் குடும்பத்தினரை முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக மாற்றியிருக்கிறார். மேலும், சமீபத்திய அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, குடும்ப உறுப்பினர்கள் குறித்துப் பல இடங்களில் குறிப்பிட்டார். அவருடைய குடும்ப உறுப்பினர்களில் சிலர் மீது சர்ச்சைகள் இருந்தாலும், அமெரிக்க மக்களின் மனங்களை அவரது குடும்பத்திலுள்ள மற்றவர்கள் வென்றனர். தற்போது, அவர் வெற்றிபெற்று வெள்ளை மாளிகையில் குடியேறவிருக்கிறார். அவரோடு வெள்ளை மாளிகையில் வசிக்க இருப்பவர்கள் இவர்கள்தான்.

முதல் பெண்மணி (First Lady)

அமெரிக்காவின் முதல் பெண்மணி அந்தஸ்தைப் பெற்று, வெள்ளை மாளிகையில் வசிக்கவிருக்கும் பைடனின் மனைவி ஜில் பைடன் (Jill Biden), ஜோ பைடனின் இரண்டாவது மனைவி. பைடனின் முதல் மனைவியும் அவருடைய மகள்கள் இருவரும் கார் விபத்தில் உயிரிழந்தனர்.

ஜில் பைடன்
ஜில் பைடன்
Evan Vucci

அதையடுத்து, ஜில் என்பவரை 1977-ம் ஆண்டு இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார் ஜோ பைடன். கார் விபத்திலிருந்து தப்பிய பைடனின் மகன்களான ஹன்ட்டர் (Hunter) மற்றும் பியூ (Beau) இருவரையும் ஜில் பைடனே கவனித்துவந்தார். பின்னர், பைடன் மற்றும் ஜில் தம்பதியருக்கு ஆஷ்லே (Ashley) என்ற மகள் பிறந்தார்.

தனது குடும்பத்தைப் பராமரித்துவந்த ​​69 வயதான ஜில் பைடன், இரண்டு மாஸ்டர் பட்டங்களையும், கல்வியில் முனைவர் பட்டமும் பெற்றார்.

ஹன்ட்டர் பைடன்
ஹன்ட்டர் பைடன்
Evan Vucci

ஜில் பைடன், தனது கணவர் மூன்று முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோதும் அவருக்குப் பக்கபலமாக வலுவான துணையாக நின்றார். மேலும், சமீபத்திய தேர்தலின்போது அவருடைய மிகச் சிறந்த வக்கீல்கள் மற்றும் பிரசார வியூகம் வகுப்பதில் வல்லவராக அறியப்படும் ஜிப் பைடனுடன் பயணித்தார் ஜில் பைடன்.

ஜில் பைடன் ஒரு கல்வியாளர் என்பதால், அவர் வெள்ளை மாளிகைக்குள் செல்வதற்கு முன்பே தனது வேலையை மாற்றத் திட்டமிட்டிருக்கிறார். முதல் பெண்மணிகள் பாரம்பர்யமாக சடங்கு, கடமைகளை மட்டுமே நிறைவேற்றுவார்கள், ஆனால், ஜில் பைடன், ஆங்கிலப் பேராசிரியையாகத் தனது முழுநேர வேலையைத் தொடர விரும்புகிறார். முதல் பெண்மணியாக, ஜில் கல்வி விஷயங்களில் பணியாற்றுவார்.

அமெரிக்கா: கமலா ஹாரிஸ், செலினா கவுண்டர், விவேக் மூர்த்தி..! -ஜோ பைடன் அரசில் இந்தியர்கள்

முதல் குழந்தைகள் (First Children)

ஜோ பைடன், தனது மகன்களுடனான தனது உறவு, தனது அரசியல் வாழ்க்கையைக் கட்டியெழுப்பும்போது துக்கத்தைச் சமாளிக்க உதவியது பற்றியும், அதேபோல் இரண்டாவது திருமணம் பற்றி அடிக்கடி பேசியிருக்கிறார். பல ஆண்டுகளாக செனட்டராக பணிபுரிந்தபோது, ​​டெலாவர் - வாஷிங்டன் இடையே இரண்டு மணி நேரம் ரயிலில் பயணம் செய்தார் ஜோ பைடன்.

ஜோ பைடன்
ஜோ பைடன்
Evan Vucci

ஜோ பைடன் மகன் பியூ பைடன், தனது தந்தையின் பொது சேவை நெறிமுறைகளுக்கும், அரசியல் திறன்களுக்கும் வாரிசாகக் கருதப்பட்டார். பியூ, ஈராக்கில் ராணுவத்தில் பணியாற்றினார், பின்னர், டெலாவரின் அட்டர்னி ஜெனரலாகப் பதவிவகித்தார். ஆனால், பியூ 2015-ம் ஆண்டு தன்னுடைய 46 வயதில் புற்றுநோய் கண்டறியப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் உயிரிழந்தார்.

ஜோ பைடனின் மற்றொரு மகன் ஹன்ட்டர் பைடன், கடற்படையில் பணியில் இருந்தார். அவர் மது, போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, பரிசோதனைக்குப் பிறகு 2014-ம் ஆண்டு கடற்படையிலிருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் ஹன்ட்டர் பைடனுக்கு வயது 50. இவர்மீது வணிகரீதியாக சட்டவிரோத முதலீடுகள் தொடர்பாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஹன்ட்டர் மறுத்தார். இந்த விவகாரத்தில், ஜோ பைடன் தனது மகனுக்கு ஆதரவு கொடுக்க மிகவும் யோசிக்கவே செய்கிறார். அதிபர் வேட்பாளர்கள் இடையேயான இறுதி நேரடி விவாதத்தின்போது, ​​ஹன்ட்டரின் போதைப்பொருள் பயன்பாட்டை ட்ரம்ப் கேலி செய்தபோது, ​​ஜோ பைடன், ``நான், என் மகனை நினைத்துப் பெருமைப்படுகிறேன்" என்று பதிலளித்தார்.

முதல் செல்லப்பிராணிகள் (First Pets)

கடந்த நூறாண்டுகளில் வளர்ப்புப் பிராணியாக நாயை வைத்துக்கொள்ளாத முதல் அதிபராக ட்ரம்ப் இருந்தார், தற்போது ஜோ பைடனுடன் வெள்ளை மாளிகையில், அவரது இரண்டு நாய்களும் குடியேறவிருக்கின்றன.

`Champ' ,`Major' என்ற ஜெர்மன் ஷெப்பர்டு ரக நாய்களையும், ஒரு பூனையையும் ஜோ பைடன் வளர்ப்புப் பிராணிகளாக வளர்த்துவருகிறார்.

ஜோ பைடன்
ஜோ பைடன்

2008-ம் ஆண்டு முதல் Champ பைடனுடன் இருந்துவருகிறது. ஜோ பைடனின் குடும்பம், 2018-ம் ஆண்டு Major-ஐத் தத்தெடுத்து வளர்த்துவருகிறது. பைடன் தரப்பினரின் தகவல்படி, Major வெள்ளை மாளிகையில் வசிக்கவிருக்கும் முதல் வளர்ப்பு நாயாக இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு