Published:Updated:

100 பேர் உயிரிழப்பு; 3,000 பேர் படுகாயம்; 540 பேர் கைது - இராக்கில் உச்சத்தை எட்டிய மக்கள் போராட்டம்

அரசின் லஞ்சம், ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இராக் மக்கள் கடந்த ஒரு வாரமாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இராக் போராட்டம்
இராக் போராட்டம் ( AP )

தெற்கு ஆசியாவின் மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு இராக். கச்சா எண்ணெய் உற்பத்திதான் இந்நாட்டின் மிக முக்கியமான பொருளாதார ஆதாரமாக உள்ளது. ஆனால் இராக்கில், சமீபத்தில் வேலையின்மை, பஞ்சம் உள்ளிட்ட பொருளாதாரப் பிரச்னைகள் தலைவிரித்தாடுகின்றன. இதனால் அந்நாட்டு மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

iraq protest
iraq protest
AP

பஞ்சம், வேலையின்மை வரிசையில் உச்சக்கட்ட ஊழலும் அங்கு நிலவுகிறது. இதை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை இராக் தலைநகர், பாக்தாத்தில் உள்ள புகழ்பெற்ற தரீர் சதுக்கத்தை நோக்கிப் பல ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாகச் சென்றனர்.

அமெரிக்க ராணுவத்தை அலெர்ட் செய்த ஏரியா 51 போராட்டம்.. என்ன ஆனது?

அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதை அடுத்து போராட்டக்காரர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கண்ணீர் புகைகுண்டு வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அதையும் மீறி போராட்டக்காரர்கள் முன்னேறியதால் கலவரம் வெடித்தது. ஒருகட்டத்துக்கு மேல் மக்களைக் கட்டுப்படுத்த முடியாத போலீஸார், அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர்.

iraq protest
iraq protest
AP

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் மற்றும் கலவரத்தினால் இதுவரை 100 பேர் இறந்துள்ளனர். 3,000 பேர் வரை காயமடைந்துள்ளனர். கடந்த 5 நாள்களாக இந்தப் போராட்டம் நீடித்து வருகிறது. தரீர் சதுக்கத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தகவல் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இருந்தும் சில போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது நடந்துவரும், அதிபர் பர்ஹம் சாலிஹ் தலைமையிலான ஆட்சி பதவி விலக வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. இதுவரை 540 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அதில் 200 பேர் மனித உரிமைகள் ஆணைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர்.

iraq protest
iraq protest
AP

``உடனடியாக மேஜிக் நடத்தி இங்கு நடக்கும் பொருளாதார பிரச்னைகளை சரிசெய்ய முடியாது. இவை அனைத்தையும் சரிசெய்யச் சிறிது காலம் தேவைப்படும். அதுவரை பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்” என இராக் பிரதமர் மஹ்டி கூறியுள்ளார். இராக்கில் நடக்கும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலுக்கு ஐ.நா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.