Published:Updated:

Video | துப்பாக்கி பழுதானதால் உயிர் தப்பிய துணை அதிபர் - அர்ஜென்டினாவில் அதிர்ச்சி சம்பவம்

அர்ஜென்டினா துணை அதிபரை சுட்டுக்கொல்ல முயற்சி ( ட்விட்டர் )

அர்ஜென்டினா நாட்டின் துணை அதிபரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Video | துப்பாக்கி பழுதானதால் உயிர் தப்பிய துணை அதிபர் - அர்ஜென்டினாவில் அதிர்ச்சி சம்பவம்

அர்ஜென்டினா நாட்டின் துணை அதிபரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
அர்ஜென்டினா துணை அதிபரை சுட்டுக்கொல்ல முயற்சி ( ட்விட்டர் )

அர்ஜென்டினா நாட்டின் துணை அதிபராக இருந்துவருபவர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ். அந்த நாட்டின் அதிபராகப் பதவி வகித்துவந்த காலத்தில் இவர்மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மேலும் இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவரின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த வியாழன் அன்று, இந்த ஊழல் வழக்கு விசாரணைக்காக இவர் கோட்டில் ஆஜரானார். பின்னர், தனது வீட்டுக்குத் திரும்பினார். அப்போது இவரை வரவேற்பதற்காக நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் இவரின் வீட்டுக்கு முன்பு குவிந்தவாறு வரவேற்பு தெரிவித்தனர்.

இவர் காரிலிருந்து இறங்கி வந்து தனது ஆதரவாளர்களிடம் வாழ்த்துகளைப் பெற்றார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர் திடீரென கிறிஸ்டினாவின் முகத்துக்கு அருகே துப்பாக்கியைக் கொண்டுவந்து சுட முயன்றார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் துப்பாக்கி வேலை செய்யவில்லை. இதனால் அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் தப்பினார். இதையடுத்து அவரின் பாதுகாவலர்கள், உடன் இருந்தவர்கள் சுட வந்த நபரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்ததாகத் தெரிகிறது. போலீஸார் இது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கைதுசெய்யப்பட்ட இந்த நபர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது.

ஒரு நாட்டின் துணை அதிபரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி திகிலைக் கிளப்பிவருகிறது.