Published:Updated:

``இது நீங்கள் தொடங்கிய போர்; உங்களால் நிறுத்தவும் முடியும்” - புதினுக்கு அர்னால்டு வைத்த கோரிக்கை

அர்னால்டு

``ரஷ்ய வீரர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் செய்யும் போர் சட்டத்துக்குப் புறம்பான, முறையற்ற போர். உங்களுடைய உயிர், உடல் அனைத்தும் மொத்த உலகமே எதிர்க்கும் அர்த்தமற்ற போரில் வீணடிக்கப்படுகிறது." - அர்னால்டு.

``இது நீங்கள் தொடங்கிய போர்; உங்களால் நிறுத்தவும் முடியும்” - புதினுக்கு அர்னால்டு வைத்த கோரிக்கை

``ரஷ்ய வீரர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் செய்யும் போர் சட்டத்துக்குப் புறம்பான, முறையற்ற போர். உங்களுடைய உயிர், உடல் அனைத்தும் மொத்த உலகமே எதிர்க்கும் அர்த்தமற்ற போரில் வீணடிக்கப்படுகிறது." - அர்னால்டு.

Published:Updated:
அர்னால்டு

பிரபல ஹாலிவுட் நடிகரும், முன்னாள் கலிஃபோர்னியா கவர்னருமான அர்னால்டு, உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் குறித்துப் பேசிய காணொலி ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஒன்பது நிமிடங்களுக்கு இருந்த அந்தக் காணொலியில் போரை நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் புதினிடம் கோரிக்கை வைத்ததோடு, போருக்கு எதிராகப் போராடும் ரஷ்ய மக்களையும் பாராட்டியுள்ளார்.

``இன்று உங்களுடன் நான் பேசுவதற்கான காரணம், இந்த உலகில் தற்போது நடந்துகொண்டிருக்கும், உங்களிடமிருந்து மறைக்கப்படும் உண்மைச் சம்பவங்கள் குறித்துப் பேசுவதற்குத்தான். நீங்கள் உக்ரைனில் நடக்கும் போர் குறித்த உண்மைகளை என்னைக் கூற அனுமதிப்பீர்கள் என நம்புகிறேன். உக்ரைனில் நடக்கும் இந்தப் போர் உண்மையில் ரஷ்ய அதிகாரத்தில் இருப்பவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. இது மக்களுக்கான போர் கிடையாது. இந்த முறையற்ற போரில் ரஷ்யாவின் செயல்களால் உலகின் பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகத் திரும்பியுள்ளன" என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டாம் உலகப் போரில் போர் புரிந்த தன் தந்தையைப் பற்றி நினைவுகூர்ந்ததோடு, "இந்தக் காணொலியைப் பார்க்கும் ரஷ்ய வீரர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் செய்யும் போர் சட்டத்துக்கு புறம்பான, முறையற்ற போர். உங்களுடைய உயிர், உடல் அனைத்தும் மொத்த உலகமே எதிர்க்கும் அர்த்தமற்ற போரில் வீணடிக்கப்படுகிறது" என்றார்.

உக்ரைன்
உக்ரைன்

மேலும் ரஷ்ய அதிபர் புதினுக்கும் ஒரு வேண்டுதல் விடுத்தார். "இது நீங்கள் தொடங்கிய போர், நீங்கள் நடத்திக்கொண்டிருக்கும் போர். நீங்கள் நினைத்தால் இதை நிறுத்தவும் முடியும்" என்றார்.

இறுதியாகப் போரை நிறுத்தவேண்டி அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ரஷ்ய மக்களைப் பாராட்டி,"இந்த உலகமே உங்கள் வீரத்தைப் பார்க்கிறது. நீங்கள்தான் எனது நிஜ ஹீரோக்கள்" எனக் கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism