Published:Updated:

நித்தியானந்தா: `அடுத்த ஆட்டம் ஆரம்பம்!' - கைலாசாவுக்கு வாங்க! பகிரங்க அழைப்பு

நித்தியானந்தா

இந்தியாவில் உள்ள பல மாநில காவல்துறையாலும் தேடப்படும் ஒரு நபர் இவ்வளவு பகிரங்கமாக பரப்புரை செய்துவருகிறார். காவல்துறை என்ன செய்கிறது? என்று வேதனைப்படுகிறார்கள்.

நித்தியானந்தா: `அடுத்த ஆட்டம் ஆரம்பம்!' - கைலாசாவுக்கு வாங்க! பகிரங்க அழைப்பு

இந்தியாவில் உள்ள பல மாநில காவல்துறையாலும் தேடப்படும் ஒரு நபர் இவ்வளவு பகிரங்கமாக பரப்புரை செய்துவருகிறார். காவல்துறை என்ன செய்கிறது? என்று வேதனைப்படுகிறார்கள்.

Published:Updated:
நித்தியானந்தா

நித்தியானந்தா இந்தியாவில் சர்ச்சையாலே பெயர் பெற்ற சாமியார். காவல்துறையால் தேடப்படுபவர். கைலாசா என்கிற தனிநாட்டை உருவாக்கியிருப்பதாக ஐ.நா மன்றம் வரை மனுக்கொடுத்து உலக நாடுகளுக்கே கிலியைக் கொடுத்தவர். இப்போதும் இந்திய உள்துறை அமைச்சகம் இவரைத் தேடிவரும் நிலையில், தனது அடுத்த ஆட்டத்தை அமர்க்களமாக ஆரம்பித்திருக்கிறார் நித்தி.

நித்தியானந்தா
நித்தியானந்தா

சமீபத்தில் மதுரையில் நடந்த சித்திரை திருவிழாவின்போது நித்தியானந்தாவின் கைலாசா குழுவும் அன்னதான நிகழ்வில் பங்கேற்றது. சுடச்சுட அங்கு பரிமாறிய உணவுகளைப் பார்த்து திருவிழாவிற்கு வந்தவர்கள் வாயடைத்துப்போனார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை ஆதினமாக அடிபோட்டவரை மதுரையிலிருந்தே வெளியேறச் செய்தனர். ஆனால் அதே மதுரையில் நித்தியானந்தாவின் உருவப்படத்தோடு அமர்க்களமான விருந்து வைத்தனர் அவரது பக்தகோடிகள். அதோடு அழகர் ஆற்றில் இறங்கும் வைபத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு நித்தியானந்தாவின் அறக்கட்டளை சார்பில் நிதியுதவியைக் கொடுத்து மதுரை மக்களின் மனங்களை கவர ஒரு மூவ் எடுக்கப்ட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மற்றொருபுறம் கைலாசா என்கிற நாட்டின் அதிபராக தன்னைத்தானே அறிவித்துக்கொண்டு, சமூக வலைதளங்கள் மூலம் தனது ஆன்மிகப் பிரசாரத்தை மேற்கொண்டுவந்தார். இந்நிலையில் நித்தியானந்தா ஆஸ்திரேலியா அருகே உள்ள வனாடூ என்கிற தீவில் வசிப்பதாக அவரது சிஷ்யர் ஒருவர் ஆதாரத்தோடு வீடியோ வெளியிட்டார். இருந்தாலும் கைலாஷா நாடு குறித்து எந்தவித தகவலும் நித்தி தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இந்நிலையில்தான் நித்தியானந்தாவிற்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பிலிருந்து செய்திகள் கசிந்தன. அதை மெய்ப்பிப்பதுபோல நித்தியானந்தா கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தாமல் இருந்த பயிற்சி முகாமை மீண்டும் நடத்தப்போவதாகத் தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்தார். இதுபோன்ற பயிற்சி முகாம் மூலமே ஆரம்பத்தில் நித்தியானந்தா தனது நிதி ஆதாரத்தைப் பெருக்கிவந்தார். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 21 நாள் பயிற்சி முகாமை நித்தியானந்தா தொடங்கியிருக்கிறார்.

நித்தியானந்தா- பயிற்சி முகாம்
நித்தியானந்தா- பயிற்சி முகாம்

இந்த பயிற்சி முகாம் முழுவதும் ஆன்லைன் வழியாகவே நடக்க இருக்கிறது. இதற்கான கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் பயிற்சி முகாமில் இணைபவர்களுக்குத் தனியாகத் தெரிவிக்கபட்டது. இந்த பயிற்சி முகாமில் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலிருந்தும் பலர் இணைந்துள்ளனர். இவ்வளவு சர்ச்சைகளில் சிக்கிய பிறகும் இவரது பயிற்சி முகாமிற்கு ஆட்கள் சேர்ந்தது நித்தி தரப்பை உற்சாகமடையச் செய்திருக்கிறது. இதனால் மீண்டும் தனது வேலையை ஆரம்பித்துவிட்டார் நித்தியானந்தா. ஏற்கெனவே இந்தியாவில் உள்ள பிடதி ஆசிரமம் உள்ளிட்ட பல ஆசிரமங்களில் தங்கி வசித்து வந்த சிஷ்யர்களை நித்தியானந்தா கண்டுகொள்ளாமல் விட்டதால் அவர்கள் பலரும் ஆசிரமத்திலிருந்து வெளியேறிவிட்டனர். மேலும் நித்திக்கு பலமாக இருந்த வெளிநாட்டு சிஷ்யர்கள் பலரும் இப்போது அவரிடம் இல்லை. இதனால் நிதி ஆதாரத்தை ஒருபுறம் பெருக்கிக்கொண்டே, மற்றொருபுறம் தனது ஆதரவாளர்களையும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளார் நித்தி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக நித்தியானந்தாவின் கைலாசா சமூக வலைதளம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் “பகவான் நித்தியானந்தாவின் நல்லாசியுடன் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள ஆதினங்களில் முழுநேரமும் சேவையாளராக பணிகள் செய்ய வாய்ப்பு” என்கிற அறிவிப்போடு ஒரு தொலைபேசி எண்ணைப் பதிவிட்டு, அதில் தொடர்புகொள்ளத் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பிட்ட எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்அனுப்பினாலே நித்தியின் ஆட்கள் தொடர்புகொண்டு சுயவிவரங்களைக் கேட்டுக்கொண்டு பிறகு அவரை ஆதினவாசியாக அங்கீகரிப்பார்களாம்.

நித்தியானந்தா ஆசிரமம்
நித்தியானந்தா ஆசிரமம்

இது குறித்து நித்தியானந்தாவிற்கு நெருக்கமானவர்களிடம் கேட்டால் “இப்படித்தான் ஆரம்பத்தில் சேவை என்று மக்களை மூளை சலவை செய்து அழைப்பார்கள். நித்தியானந்தாவின் பிடிக்குள் சென்ற பிறகு அங்கிருந்து நீங்கள் நினைத்தாலும் வெளியே வரமுடியாது. அந்த அளவுக்கு கெடுபிடிகள் இருக்கும். ஆனால் பலரும் அவரது பேச்சை நம்பி அவரது ஆதினத்திற்குள் நுழைந்துவிடுகிறார்கள். பிறகு வெளியே வரமுடியாமல் தவித்து வந்த கதை எல்லாம் நடந்துள்ளது. இப்போது அவர் எந்த ஆதினத்திற்கு ஆட்களை அழைக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை அவர் மறைந்துள்ள தீவுக்குகூட ஆட்களை அழைத்துச் செல்லலாம்.” என்கிறார்கள்.

அதாவது ஆதினவாசியாக சேர்பவர்களில் சிலரை தான் வசிக்கும் தீவுக்கும் அழைத்து செல்லும் திட்டத்திலும் நித்தியானந்தா இருக்கிறார் என்கிறார்கள். இந்தியாவின் காவல்துறையால் தேடப்படும் ஒரு நபர் இவ்வளவு பகரிங்கமாக பரப்புரை செய்துவருகிறார் காவல்துறை என்ன செய்கிறது என்று வேதனைப்படுகிறார்கள் நித்தியானந்தாவினால் பாதிக்கபட்ட அவருடைய முன்னாள் ஆதினவாசிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism