Published:Updated:

உக்கிரமடைந்த உக்ரைன் - ரஷ்யா போர்: இரு நாடுகள் இதுவரை சந்தித்த இழப்புகள்... ஒரு பார்வை!

ரஷ்யா - உக்ரைன் போர்

நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டிருக்கும் இந்தப் போரால் இதுவரை இரு நாடுகளும் சந்தித்த இழப்புகள் என்னென்ன என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்...

உக்கிரமடைந்த உக்ரைன் - ரஷ்யா போர்: இரு நாடுகள் இதுவரை சந்தித்த இழப்புகள்... ஒரு பார்வை!

நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டிருக்கும் இந்தப் போரால் இதுவரை இரு நாடுகளும் சந்தித்த இழப்புகள் என்னென்ன என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்...

Published:Updated:
ரஷ்யா - உக்ரைன் போர்

உக்ரைன் - ரஷ்யாவுக்கும் இடையேயான போர் ஒரு வாரம் கடந்தும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் போன்ற முக்கிய நகரங்களைக் குறிவைத்து, மும்முனைகளிலிருந்தும் துல்லியத் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது ரஷ்யா. இருப்பினும், ரஷ்யாவின் பலம்பொருந்திய தாக்குதலைத் தனித்து நின்று எதிர்கொண்டுவருகிறது உக்ரைன். ரஷ்யாவே எதிர்பாராதபடி, உக்ரைனின் பதிலடித் தாக்குதல் இருப்பதாகவும், இதுவரையில் 9,000 ரஷ்யப் படைவீரர்கள் உக்ரைனின் பதிலடியால் உயிரிழந்திருப்பதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டிருக்கும் இந்தப் போரால் இதுவரை இரு நாடுகளும் சந்தித்த இழப்புகள் என்னென்ன என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்...

ரஷ்யா - உக்ரைன்
ரஷ்யா - உக்ரைன்

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி அதிகாலை உக்ரைன் மீது ரஷ்யா தனது ராணுவத் தாக்குதலைத் தொடங்கியது. போரை எதிர்பார்த்திருந்த உக்ரைனும் தயங்காமல் ரஷ்யப் படையினர் முன்னேறிவருவதைத் தடுக்க தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தியது. முதல்நாள் போரிலேயே சுமார் 137 உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டனர், 316 பேர் காயமடைந்தனர். மேலும், 10,000-க்கும் மேற்பட்டோர் நாட்டைவிட்டு இடம்பெயர்ந்தனர். முதல்நாளிலேயே பேரிழப்பைச் சந்தித்திருந்தாலும் ரஷ்யாவின் ஐந்து போர் விமானங்களையும், ஒரு ஹெலிகாப்டரையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அன்றிரவு நாட்டு மக்களுடன் உரையாடிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ``ரஷ்யாவின் வல்லரசுப் படையை எதிர்த்து உக்ரைன் ராணுவம் தனித்துப் போரிட்டுவருகிறது. உக்ரைனுடன் இணைந்து ரஷ்யாவை எதிர்கொள்ள யாரும் வரவில்லை. ரஷ்யாவை எதிர்கொள்வதில் உக்ரைன் தனித்துவிடப்பட்டுள்ளது. நேட்டோவில் உக்ரைன் உறுப்பினராவதற்கு ஆதரவளிப்பதாகக் கூறியவர்கள் ரஷ்யாவை எதிர்க்க அஞ்சுகின்றனர். எப்படியிருந்தாலும், யார் உதவிக்கு வந்தாலும், வராவிட்டாலும் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் ராணுவம் கடைசிவரைக்கும் போராடும்" என உறுதிபட தெரிவித்தார்.

வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
Efrem Lukatsky

அதைத் தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த நாள் போரில், உக்ரைன் ராணுவத்துக்குச் சொந்தமான 11 விமானப்படைத் தளங்கள் உட்பட 70-க்கும் மேற்பட்ட ராணுவத் தளங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக ரஷ்ய தரப்பு தெரிவித்தது.

 உக்ரைன்
உக்ரைன்
AP

பதிலுக்கு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், ``உக்ரைனில் ரஷ்யா ராணுவ நடவடிக்கை தொடங்கியது முதல் தற்போது வரை சுமார் 800 ரஷ்ய படைவீரர்கள் இறந்திருக்கின்றனர். மேலும், 30-க்கும் மேற்பட்ட டேங்கர்கள், 130 ஆயுதமேந்திய வாகனங்கள் உக்ரைன் ராணுவத்தால் சிதறடிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், ஏழு ராணுவ விமானங்கள், ஆறு ராணுவ ஹெலிகாப்டர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கின்றன"' என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரஷ்யாமீது பொருளாதாரத்தடைகள் விதித்த கையோடு, ரஷ்யாவுக்கு எதிராக தனித்துப் போரிட்டுவரும் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் பெருமளவிலான ஆயுத உதவியை வழங்கின. மேலும், பொருளாதாரரீதியிலும் பல்வேறு நிதியுதவிகளை வழங்கின. அவற்றைப் பெற்றுக்கொண்ட உக்ரைன் இன்னும் வேகமாக ரஷ்யப்படைகளை எதிர்த்து போர்புரிந்தது.

உக்ரைன்
உக்ரைன்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, நான்காவது நாளாகத் தொடர்ந்துவந்த போர் நிலவரம் குறித்துப் பேசிய உக்ரைனின் துணைப் பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார், ``உக்ரைன் நடத்திய பதிலடித் தாக்குதலில், ரஷ்யாவைச் சேர்ந்த 4,300 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும், 26 ஹெலிகாப்டர்கள், 27 போர் விமானங்கள், 146 பீரங்கிகள், 536 ராணுவ கவச வாகனங்கள் தாக்கி அழிக்கப்பட்டிருக்கின்றன" என்று அதிரடியாகத் தெரிவித்தார். மேலும், பல ரஷ்ய வீரர்களை போர்க் கைதிகளாகச் சிறைபிடித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

உக்ரைன் : தாக்குதல் நடைபெற்ற இடம்
உக்ரைன் : தாக்குதல் நடைபெற்ற இடம்

இதைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பெலாரஸ் நாட்டில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்க, மறுபுறம் உக்ரைன் தலைநகரை நோக்கி ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தீவிரப்படுத்த முன்னேறிக்கொண்டிருந்தது. ராணுவ நிலைகள் மட்டுமல்லாமல், பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மீதும் ரஷ்ய ராணுவம் குண்டுமழை பொழிந்தது. பெலாரஸ் பேச்சுவார்த்தையும் போர் நிறுத்தம் தொடர்பான முடிவு எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைய, போரும் தீவிரமடைந்தது.

ஆறாவது நாளாகத் தொடர்ந்தப் போரில், 6,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். இது தொடர்பாகப் பேசிய அவர், ``உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை நினைத்துப் பாருங்கள், கிட்டத்தட்ட 6,000 ரஷ்ய வீரர்கள் இறந்திருக்கின்றனர். எதை அடைவதற்காக இந்த உயிரிழப்பு... உக்ரைனை அடையவா? அது சாத்தியமற்றது! ஏவுகணைகள், குண்டுகள், பீரங்கிகள் என எந்தத் தாக்குதல் கொண்டும் இதை மாற்ற முடியாது. நாங்கள் எங்கள் சொந்த மண்ணில் இருக்கிறோம். ரஷ்யப்படைகளுக்கு எதிராக எங்கள் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கின்றார்கள். உலகமே எங்களைப் பாராட்டிவருகிறது. இன்று உக்ரேனியர்கள் வெல்ல முடியாதவர்களின் அடையாளமாக இருக்கிறார்கள்" எனப் பெருமிதமாகக் கூறினார்.

உக்ரைன்
உக்ரைன்

மேலும், தோல்வி காரணத்தால் உக்ரைன் மக்களை அச்சுறுத்தும்விதமாக மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் ரஷ்ய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டுவருவதாகவும் குற்றம்சாட்டினார். இந்த நிலையில், உக்ரைனுடனான போரில் பலியான தங்கள் வீரர்களின் எண்ணிக்கையை வெளியிடாமல் மௌனம் காத்துவந்த ரஷ்யா, அண்மையில் முதன்முறையாக போரில் இதுவரை 498 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா போர்
Alexander Zemlianichenko Jr

அதேசமயம், உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ``உக்ரைன் - ரஷ்யா இடையேயான மோதலில் இதுவரை 9,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர்" எனத் தெரிவித்தது. இதுமட்டுமல்லாமல், ``உக்ரைன் ராணுவம் நடத்திய பதிலடித் தாக்குதலில் இதுவரை ரஷ்யாவின் 30 போர் விமானங்கள், 31 ஹெலிகாப்டர்கள், 217 பீரங்கிகள், 374 ராணுவ வாகனங்கள், 42 ராக்கெட் ஏவுகணைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன" என்றும் ஆணித்தரமாகக் கூறியது.

இதையடுத்து, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், `` உக்ரைன் ராணுவத்தின் கடுமையான பதிலடியால் ரஷ்ய ராணுவம் அதிருப்தியில் இருக்கிறது. அவர்களால் திட்டமிட்டபடி முன்னேறிச் செல்ல முடியவில்லை; ரஷ்யப் படை எதிர்பாராத பதிலடியை உக்ரைனிடமிருந்து சந்தித்துவருகிறது" என விமர்சித்தது. மேலும், ``இந்தப் பின்னடைவைச் சரிசெய்ய மேலும் தனது படைகளை ரஷ்யா போரில் களமிறக்கும்" எனவும் எச்சரித்தது.

உக்ரைன் அதிபர் - ரஷ்ய அதிபர்
உக்ரைன் அதிபர் - ரஷ்ய அதிபர்

இந்தப் போரில், இரு தரப்புக்கும் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருந்தாலும், உக்ரைனே மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா இழப்பைச் சந்தித்தாலும் முன்னேறிவருகிறது. மேலும், ரஷ்யா தனது படைபலத்தை மேலும் களமிறக்கினால் விளைவுகள் இன்னும் மோசமாக அமையும் என உலக நாடுகள் கவலை தெரிவித்துவருகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism