Published:Updated:

அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவளி லெப்டினன்ட் கவர்னர்! - யார் இந்த அருணா மில்லர்?

அருணா மில்லர் ( Julio Cortez )

அமெரிக்க வரலாற்றில் இந்தியர் ஒருவர் லெப்டினன்ட் கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவளி லெப்டினன்ட் கவர்னர்! - யார் இந்த அருணா மில்லர்?

அமெரிக்க வரலாற்றில் இந்தியர் ஒருவர் லெப்டினன்ட் கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

Published:Updated:
அருணா மில்லர் ( Julio Cortez )

அமெரிக்காவின் தலைநகரை ஒட்டியிருக்கும் மேரிலேண்ட் மாநிலத்தில் நேற்று (8-11-22) நடந்த லெப்டினன்ட் கவர்னர் பதவிக்கான தேர்தலில் வென்றிருக்கிறார் அருணா மில்லர். அமெரிக்க வரலாற்றில் இந்தியர் ஒருவர் லெப்டினன்ட் கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். இந்தியாவின் ஆந்திராவில் பிறந்த அருணா மில்லர், அமெரிக்காவுக்கு தன் பெற்றோருடன் குடிபெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

58 வயதான அருணா மில்லர் மேரிலேண்ட் ஹவுசின் முன்னாள் பிரதிநிதியாக இருந்தவர். வெஸ் மூர் என்பவருடன் இணைந்து அருணா மில்லர் இந்த லெப்டினன்ட் கவர்னர் தேர்தலில் போட்டியிட்டார்.

அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவளி லெப்டினன்ட் கவர்னர்! - யார் இந்த அருணா மில்லர்?

கவர்னர் பதவிக்கு அடுத்தபடியாக, உயர்ந்த பதவி என்பது லெப்டினன்ட் கவர்னர் பதவிதான். அதன்படி, கவர்னருக்கு ஏதேனும் இயலாமை நிலவும் போதோ, அவர் வேறு மாநிலத்தில் இருந்தாலோ அந்தப் பணிகளை லெப்டினன்ட் கவர்னர் மேற்கொள்வார். அதுமட்டுமல்லாமல் கவர்னர் இறந்தாலோ, பதவி விலக நேரிட்டாலோ, ராஜினாமா செய்தாலோ இவர் கவர்னராகப் பதவி ஏற்கலாம்.

அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவளி லெப்டினன்ட் கவர்னர்! - யார் இந்த அருணா மில்லர்?
Julio Cortez

நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன், அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்ட மூரும் மில்லர் கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் மூருக்கும், அருணா மில்லருக்கும் ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தனர்.

அருணா மில்லர் இந்து தேசியவாதிகளுடன் பழகுவதாக அவர்மீது குற்றச்சாட்டு இருந்தது. அதை அவர் மறுத்து வந்தார். இந்த நிலையில், லெப்டினன்ட் கவர்னர் பதவிக்கான தேர்தல் போட்டியில் பல தடைகளைத் தாண்டி, கடைசி நேரத்தில் வெற்றி பெற்றார். இந்த மேரிலேண்ட் தேர்தலில், அமெரிக்காவின் இருபெரும் கட்சிகளைச் சார்ந்தவர்களும் அருணா மில்லருக்கு ஆதரவாக இருந்தனர். ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் அவருக்கு ஆதரவாக நிதி திரட்டியிருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர் ஜஸ்தீப் சிங் ஜஸ்ஸி.

அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவளி லெப்டினன்ட் கவர்னர்! - யார் இந்த அருணா மில்லர்?
Julio Cortez

தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து உரையாற்றிய அருணா மில்லர், ``ஒரு வலிமைமிக்க மாநிலத்தில் ஜனநாயகம் இருந்தால் என்ன செய்ய முடியும் என்பதை இந்த (8-11-22) இரவில் , மேரிலேண்ட் இந்த நாட்டுக்குக் காட்டியிருக்கிறது. நீங்கள் பிரிவினையைவிட ஒற்றுமையைத் தேர்ந்தெடுத்தீர்கள். உரிமைகளை கட்டுப்படுத்துவதைவிட உரிமைகளை விரிவுபடுத்துவதையும், பயத்தைவிட நம்பிக்கையையுமே தேர்ந்தெடுத்தீர்கள். உங்களின் அடுத்த கவனராக மூரையும், அடுத்த லெப்டினன்ட் கவர்னராக என்னையும் தேர்ந்தெடுத்தீர்கள். நாங்கள் உங்களுக்காகப் பணி செய்வோம்" என்றார்.