Published:Updated:

சோமாலியா தலைநகரில் இரட்டை கார் குண்டுவெடிப்பு; 100 பேர் பலி, 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் ( ட்விட்டர் )

இந்த வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சி செய்து வரும் நிலையில், தலைநகர் மொகாதிசுவில் (MOhadishu) அடுத்தடுத்து, இரண்டு கார் குண்டுகள் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்
இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்
ட்விட்டர்

இந்த நிலையில், சோமாலியாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஹசன் ஷேக் முகமது இந்தச் சம்பவத்தை உறுதிபடுத்தியிருக்கிறார். மேலும் சோமாலியாவில் உள்ள அல்-ஷபாப் பயங்கரவாதக் குழுதான் இந்த கொடூர தாக்குதலுக்கு காரணம் எனத் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்னர் மொகாடிஷுவில் 2017-ல் நடந்த லாரி வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 500 பேர் கொல்லப்பட்டனர் எனக் கூறப்படுகிறது. அதன் பிறகான மிக மோசமான குண்டுவெடிப்பு சம்பவம் இது என்று சொல்லப்படுகிறது.

குண்டுவெடிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதால் உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.