Published:Updated:

சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகள்; ரகசிய வாக்கெடுப்பு கோரிய ரஷ்யா! - நிராகரித்த இந்தியா

ரஷ்யா - இந்தியா ( ட்விட்டர் )

ஐநா பொதுச் சபையில் உக்ரைன்மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கைக்கு நிராகரிக்க இந்தியா வாக்களித்திருக்கிறது.

சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகள்; ரகசிய வாக்கெடுப்பு கோரிய ரஷ்யா! - நிராகரித்த இந்தியா

ஐநா பொதுச் சபையில் உக்ரைன்மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கைக்கு நிராகரிக்க இந்தியா வாக்களித்திருக்கிறது.

Published:Updated:
ரஷ்யா - இந்தியா ( ட்விட்டர் )

ரஷ்யா - உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இன்னும் முடியாமல் தொடர்கிறது. இரண்டு நாடுகளும் மோதிக்கொள்ளும் இந்தப் போரில், இதுவரை எவ்வித சமரசமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், உக்ரைன்மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. உக்ரைனிலுள்ள பெரும்பாலான பகுதிகளை ரஷ்ய ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது.

இந்த நிலையில், உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷ்யா சட்டவிரோதமாக இணைத்ததைக் கண்டிக்கும் வரைவுத் தீர்மானத்தின்மீது ஐ.நா பொதுச் சபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரஷ்யா கோரிக்கை வைத்தது. இந்தக் கோரிக்கையை நிராகரிக்க இந்தியா வாக்களித்தது.

இந்தியா ,உக்ரைன்
இந்தியா ,உக்ரைன்
ட்விட்டர்

193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பொதுச் சபையில் நேற்று இது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதன் மூலம் டொனெட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க், ஜபோரிஜியா ஆகிய பகுதிகளை ரஷ்யா சட்டவிரோதமாக இணைப்பதைக் கண்டிக்கும் தீர்மானத்தின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை ரகசிய வாக்கெடுப்பு மூலம் வாக்களிக்க வேண்டும் என்று ரஷ்யா கோரிக்கை விடுத்தது. ஆனால், `பதிவுசெய்யப்பட்ட வாக்கெடுப்புதான் நடத்தவேண்டும்' என்று இந்தியா உட்பட 107 ஐ.நா உறுப்பு நாடுகள் வாக்களித்ததை அடுத்து, ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்புக்கு ஆதரவாக 13 நாடுகள் மட்டுமே வாக்களித்த நிலையில், 39 நாடுகள் வாக்களிக்கவில்லை. ரஷ்யாவும், சீனாவும் வாக்களிக்காத நாடுகளில் அடங்கும்.

ஐநா
ஐநா

ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பிறகு, இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரஷ்யா கோரிக்கை விடுத்தது. ஆனால், ரஷ்யாவின் இந்த கோரிக்கை மறுபரிசீலனை செய்யப்படவில்லை. இந்தியா உட்பட 100 நாடுகள் 'மறுபரிசீலனைக்கு' எதிராக வாக்களித்தன. 16 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன, 34 நாடுகள் வாக்களிக்கவில்லை.

மேலும் ரஷ்யா - உக்ரைன் மோதலை இந்தியா இதுவரை கண்டிக்கவில்லை. நடுநிலையாகவே பேசி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.