Published:Updated:

`சீக்கியர்களின் குருத்வாராவில் தீவிரவாதத் தாக்குதல்!’ - 11 பேர் பலி; பொறுப்பேற்றது ஐ.எஸ்

குருத்வாரா தாக்குதல்
குருத்வாரா தாக்குதல்

உலகமே கொரோனா வைரஸுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையிலும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மையப்பகுதியில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்துவாரா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகமே கொரோனா வைரஸுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையிலும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

குருத்துவாரா
குருத்துவாரா
Rahmat Gul

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 8 மணி அளவில் பஜார் பகுதியில் புகுந்த தீவிரவாதிகள் சுமார் 150 சீக்கியர்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த குருத்வாராவுக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்தனர். பின்னர் அங்கிருந்த பக்தர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

உடனடியாக போலீஸார் அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்து தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 11 குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருத்துவாரா
குருத்துவாரா

இது தொடர்பாக அந்நாட்டின் சீக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் நரிந்தர சிங், தனக்கு காலையில் குருத்வாராவுக்குள் இருக்கும் ஒருவர் நாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும் உடனே உதவும்படியும் போன் செய்தார். உடனடியாக காவலர்கள் அங்கு விரைந்து தீவிரவாதிகளை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர் எனத் தெரிவித்தார்.

தாக்குதல் நடைபெற்ற உடனே எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தாலிபான் அமைப்பு தானாகவே முன்வந்து, இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என அறிவித்தது. கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் சிறுபான்மையினராக வாழும் சீக்கியர்கள், இந்துக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ஐ.எஸ் எனும் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அதைப் பின்னர் ஐ.எஸ் அமைப்பு உறுதியும் செய்தது.

குருத்துவாரா
குருத்துவாரா

ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினச் சமூகத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. அமெரிக்க - ஆப்கான் படைகளால் ஐ.எஸ் அமைப்பு தொடர்ச்சியான தாக்குதலுக்கும் கண்காணிப்புக்கும் ஆளானாலும் அவ்வப்போது இதுபோன்று தாக்குதல் நடத்தி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயல்வதாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அடுத்த கட்டுரைக்கு