Published:Updated:

குஜராத் கலவரம் பற்றி ஆவணப் படம் வெளியிட்ட பிபிசி... தடை விதித்த மத்திய அரசு - முழுப் பின்னணி என்ன?!


பிபிசி ஆவணப்படம்
News
பிபிசி ஆவணப்படம்

குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படம் தயாரித்திருந்தது பிபிசி. அதற்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. அதன் பின்னணி என்ன?

குஜராத் கலவரம் பற்றி ஆவணப் படம் வெளியிட்ட பிபிசி... தடை விதித்த மத்திய அரசு - முழுப் பின்னணி என்ன?!

குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படம் தயாரித்திருந்தது பிபிசி. அதற்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. அதன் பின்னணி என்ன?

Published:Updated:

பிபிசி ஆவணப்படம்
News
பிபிசி ஆவணப்படம்

இங்கிலாந்தின் பிரபல தனியார் ஊடக நிறுவனமான பிபிசி, இந்தியாவில் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றி ரகசிய விசாரணை நடத்தி ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. இதில் இந்த கலவரம் நடக்க அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியும் காரணம் என கூறியிருப்பதாக தகவல் வெளியானது பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியிருக்கிறது. `இந்தியா-மோடிக்கான கேள்விகள்’ என்னும் தலைப்பில் வெளியாகிய இதற்கு பல்வேறு தரப்பினரிடையே ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. இந்த நிலையில், அந்த ஆவணப்படத்துக்கு இந்திய அரசு தடைவிதித்திருக்கிறது.                                                           

குஜராத் கலவரம்
பிபிசி
ஆவணப்படம்
குஜராத் கலவரம் பிபிசி ஆவணப்படம்

2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி கோத்ரா ரயில் எரிப்பு சம்பத்தில் 59 பேர் உயிரிழந்தனர். இதை அடிப்படையாக வைத்துதான் குஜராத்தில் கலவரம் வெடித்து. இந்தக் கலவரத்தின் முடிவில் 790 இஸ்லாமியர்கள், 254 இந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், 223 பேர் காணாமல் போனதாகவும், 2,500 பேர் படுகாயமடைந்ததாகவும் 2005-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கூறியதையும் தன் ஆவணப்படத்தில்  கூறியிருக்கிறது பிபிசி.

மோடி
மோடி

2001-2006-ம் ஆண்டு வரை இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜெயிக்க ஸ்ட்ரா அப்போது இந்தக் கலவரம் குறித்து பேசியதும் இடம்பெற்றிருக்கிறது. மேலும், மோடி பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியும்  அதில் இணைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆவணப்படம் வெளியானதைத் தொடர்ந்து இது குறித்த விவாதங்கள் முன்னெடுக்க தொடங்கியது. குறிப்பாக, மத்திய அரசின் வெளியுறவுதுறை செய்தித் தொடர்பாளர் இதுபற்றி கருத்து கூறியிருக்கிறார். அவர், `இந்தியாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் நோக்கில் இந்த ஆவணப்படம் உருவாகியிருப்பதாகவும், இது ஆவணப்படத்தை இயக்கிய நிறுவனத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது’ என  விமர்சித்திருந்தார். இந்தியாவில் இதன் பிறகு சமூக வலைதளத்தில் இது தொடர்பான விவாதங்கள் அனல் பறந்தன. குறிப்பாக, `Who is BBC?  என்னும் ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆனது.

பிபிசி
ஆவணப்படம்
பிபிசி ஆவணப்படம்

மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை செயலா் அபூா்வா சந்திரா, தகவல் தொழில்நுட்ப விதிகளின் (2021) கீழ் சில வலியுறுத்தல்களை வழங்கியிருக்கிறார். இது தொடா்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ``பிபிசி ஆவணப்படத்தை ஆய்வு செய்ததில் அதன் கருத்துகள், உச்ச நீதிமன்றத்தின் நம்பகத்தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் இந்தியாவில் பல்வேறு சமூகத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கின்றன. எனவே, இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் இதை சமூகவலைதளத்திலிருந்து நீக்க கோரியிருக்கிறோம்” என்கிறார்கள். இதனால், இந்த வீடியோ இடம்பெற்றிருந்த ட்விட்டர், யூடியூப் கணக்குகளிலிலிருந்து அவற்றை நீக்க மத்திய ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கோரிக்கை வைத்தது. அதை ஏற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அதை நீக்கியிருக்கிறது என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ஆவணப்படத்தின் இரண்டாவது பாகம் இந்தவாரம் வெளியாகவிருக்கிற நிலையில், அந்த ஆவணப்படம் இந்திய அரசால் தடை செய்யப்பட்டிருக்கிறது. அதே வேளையில், விரிவான ஆய்வுக்குப் பிறகே ஆவணப்படம் உருவாக்கப்பட்டதாக பிபிசி நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில் பேசியதாவது, ``பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தில் புதிதாக எதுவும் இல்லை. ஏற்கெனவே வெளியான தகவல்கள்தான். இதற்கு முன்பும் இந்தக் கலவரத்துக்கு காரணம் மோடி எனப் பலர் பேசியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தற்போது உயிரோடு இருக்க மாட்டார்கள். அப்படி இருந்தால் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள். தற்போது வந்திருக்கும் இந்த ஆவணப்படம் இங்கிலாந்தைச் சேர்ந்த பிபிசி நிறுவனம் விசாரித்து, கள ஆய்வுகளைச் செய்து தயாரித்த ஆய்வறிக்கை. இது உண்மை என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். அதை அவர்கள் தயாரித்து அறிக்கை வாயிலாக தெரிவித்திருக்கின்றனர்.

எனவே, இது ஒரு இனப்படுகொலை நடந்ததற்கான சான்று என்பது என் பார்வை. இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவை எப்படி எண்ணுகிறோமோ, அப்படித்தான்  இந்த இனப்படுகொலையும். எனவே, அவர்கள் காண்பித்ததில் எந்தத் தவறும் இல்லை. இந்தக் கலவரம் நடந்த 20 ஆண்டுக்காலத்தில், இதற்கு காரணமாக இருக்கும் நரேந்திர மோடி ஒரு முறை கூட வருத்தம் தெரிவிக்கவில்லை என்பதே  வரலாற்று உண்மை. அதை யாராலும் மறுக்க முடியாது’’ என்றார்.

சசிகாந்த் செந்தில்
சசிகாந்த் செந்தில்

மேலும் தொடர்ந்த அவர், ``குஜராத் கலவரம் மனித  உரிமை மீறிய செயல் என இங்கிலாந்து தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, மோடி, `மனித உரிமைகள் பற்றி நீங்கள் கற்றுத்தர தேவையில்லை’ என கூறியதை வைத்து, சிலர் சமூகவலைதளத்தில் ஆங்கிலேயர் இந்தியாவில் செய்த அடக்குமுறை, நிறுவனத்தின் பின்னணி குறித்து பேசி தப்பிப்பது வாதப் பிழை (Argumentative Fallacies). இந்தக் குற்றம் ஏன் நிகழ்ந்தது எனக் கேள்வி கேட்டால், அதற்குப் பதில் சொல்ல வேண்டும். அதிலிருந்து தப்பிக்க மற்றொரு குற்றத்தைப் பேசக் கூடாது.

குஜராத் கலவரம்
குஜராத் கலவரம்

ஆனால், பெரும்பாலான பாஜக-வைச் சேர்ந்தவர்கள் இப்படியான வாதத்தைத்தான் முன்வைக்கிறார்கள். 3000 உயிர்களைக் கேள்விக்குறியாக்கிவிட்டு அதற்காக மனம் வருந்துவதுதானே மனித இயல்பு. ஆனால், அந்த நிகழ்வின்போது மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவருக்கு பன்மடங்கு வருத்தம் இருந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு ஒரு வருத்தம் கூட  தெரிவிக்காத நபரை இந்த நிகழ்வுக்கு அவர் காரணமில்லை என்று கூறி எப்படி ஒதுக்க முடியும்?” என்றார்.

இது குறித்து தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பேசியதாவது, ``குஜராத் கலவரம் அந்த மாநிலத்தின் எல்லைப் பகுதியில் நடந்தது. இந்தக் கலவரத்தைத் தடுக்க மற்ற  மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிராவின் காவல் படை தேவை என உதவி கேட்டபோது ஆளும் காங்கிரஸ் செய்ய மறுத்துவிட்டது. ஆகவே, இந்தக் கலவரம் நிகழக் காரணமாக இருந்தது, அந்த மூன்று மாநிலத்தை ஆட்சிசெய்த காங்கிரஸ் என்பதே உண்மை. ஆனாலும், குஜராத் கலவரம் நடந்தது வருத்தம் அளிக்கிறது எனக்கூறி, இந்தியாவிலேயே முதன்முதலில் நேரலையில் பேசியவர் அப்போது முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி. இதையெல்லாம் மறைத்த ஊடகங்கள், உலகப் புகழ் பெற்றுவரும் நரேந்திர மோடி மீது குற்றச்சாட்டு வைப்பது சரியல்ல.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

அதேபோல், ஊடகங்களில் சொல்வதெல்லாம் உண்மையல்ல. மேலும், செய்தி நிறுவனங்கள் தவறு செய்யாது என்ற மாயை அழிக்கப்பட வேண்டும். குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் கூறிய பின்பும், வேண்டுமென்றே குற்றவாளிகளைப் போல் தலைவர்களைச் சித்திரிப்பதை அனுமதிக்க முடியாது. இந்தியா சட்டத்தின்படி நடக்கிறதே தவிர, ஊடகங்கள்படி  அல்ல. எனவே, நீதிமன்றத்துக்கு மேலாக நாங்கள் இருப்பதாக எண்ணிக் கொள்கிறார்கள். அது தவறு என்பதை ஆவணப்படத்தைத் தடை செய்து நிரூபித்திருக்கிறார்கள்” என்றார்