Published:Updated:

ராணி எலிசபெத் உருவம் பதித்த பணத்தாள்கள்.. மாற்றப்படுமா இல்லையா; இங்கிலாந்து வங்கி சொல்வதென்ன?

எலிசபெத் ராணி

நாட்டிற்குத் தேவையான ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இங்கிலாந்து வங்கிக்கும், நாணயங்களைத் தயாரிக்கும் ராயல் மின்ட் நிறுவனத்துக்கும், புழக்கத்தில் உள்ள பணத்தை நீக்கி, மூன்றாம் சார்லஸின் உருவப்படத்தை வைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

எலிசபெத் மகாராணியின் மறைவினால் அந்நாடு எதிர்கொள்ள விருக்கும் சவால்களில் ஒன்று, மகாராணியின் உருவப்படம் பதித்த பணத்தாள்கள், தபால் தலைகள் மற்றும் நாணயங்களை அடுத்து அரியணை ஏறவிருக்கும் மகாராஜாவின் உருவப்படத்தைக் கொண்டு மாற்றுவது தான். இந்நிலையில், அங்கு வசிக்கும் மக்களின் மிகப்பெரிய கேள்வி, தற்போது அச்சிடப்பட்டிருக்கும் மகாராணியின் உருவப்படம் தொடர்ந்து நீடிக்குமா, அந்த பணம் சட்டப்படி ஏற்கப்படுமா என்பதே. 

ராணி எலிசபெத் உருவம் பதித்த பணத்தாள்கள்.. மாற்றப்படுமா இல்லையா; இங்கிலாந்து வங்கி சொல்வதென்ன?
pixabay

``மகாராணியின் உருவம் பதித்த பணத்தாள்கள் மற்றும் நாணயங்கள் சட்டப்படி செல்லுபடியாகும். அதோடு பணத்தாள் குறித்த கூடுதல் அறிவிப்பு மகாராணியின் இறுதிச் சடங்கு முடிந்த ஏழு நாட்களுக்குப் பிறகு வெளியிடப்படும் ’’ என பேங்க் ஆஃப் இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாட்டிற்குத் தேவையான ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இங்கிலாந்து வங்கிக்கும், நாணயங்களைத் தயாரிக்கும் ராயல் மின்ட் நிறுவனத்துக்கும், புழக்கத்தில் உள்ள பணத்தை நீக்கி, மூன்றாம் சார்லஸின் உருவப்படத்தை வைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

ராணி இரண்டாம் எலிசபெத்
ராணி இரண்டாம் எலிசபெத்

இங்கிலாந்தில் 82 பில்லியன் பவுண்டுகள், 4.7 மில்லியன் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. ராயல் மிண்ட் அறிவிப்பின் படி, மகாராணியின் உருவப்படம் கொண்ட  29 பில்லியன் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளது.

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு செப்டம்பர் 19 திங்கள் அன்று நடைபெற உள்ளது.