உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கார்கிவ் நகரிலும், கீவ் நகரிலும் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்திவருகிறது. இந்தப் போர் சூழலால் உக்ரைன் குடிமக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றுக்கொண்டிருக்கின்றனர்.
ஏற்கெனவே ரஷ்யாவுக்கு ஆதரவான கருத்துகளைக் கூறிவந்த பெலாரஸ் சமீபத்தில் கூட உக்ரைன் ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், பெலாரஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரஷ்யா - உக்ரைன் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த சூழலில், நேட்டோ அமைப்பு உக்ரைனுக்கு உதவுவதாக நேற்று அறிவித்தது. இது ரஷ்யாவை மேலும் கொதிப்படையை செய்தது. நேட்டோவின் இந்த முடிவானது மோசமான விளைவை ஏற்படுத்தும் என ரஷ்யா நேற்று கருத்து தெரிவித்திருந்தது!
இந்த நிலையில், ரஷ்யாவை இன்னும் பலப்படுத்தும் விதமாக ரஷ்யாவுக்கு அண்மை நாடான பெலாரஸ் தற்போது உக்ரைனுக்குள் நுழைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இது தொடர்பாக உக்ரைன் நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் ``தற்போது உக்ரைனின் வடக்குப்பகுதி வழியாக உக்ரைனுக்குள் பெலாரஸ் நாட்டின் படை நுழைந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
