Published:Updated:

உக்ரைன் விவகாரம்: ``எங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால்..." - எச்சரிக்கும் பெலாரஸ்!

ராணுவம் ( AP )

`எங்களது போட்டியாளர்களும், எதிரிகளும் ஏதாவது முட்டாள்தனமான நடவடிக்கைகளை முன்னெடுத்தால், எங்கள் நாட்டை பாதுகாக்க நாங்கள் அணு ஆயுதங்கள் மட்டுமல்லாது சூப்பர் நியூக்ளியர் ஆயுதங்களையும் பயன்படுத்துவோம்.' - பெலாரஸ்

உக்ரைன் - ரஷ்யா இடையே போர்ப் பதற்றம் நிலவி வருவதால், இந்த விவகாரத்தை உலக நாடுகள் உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, உக்ரைன் விவகாரத்தில் தங்கள் நாட்டிற்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் எந்த மாதிரியான நடவடிக்கைகளை பெலாரஸ் மேற்கொள்ளும் என்பது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

ராணுவ போர்
ராணுவ போர்

அதில் பேசிய அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ``உக்ரைன் விவகாரத்தில் எங்களது போட்டியாளர்களும், எதிரிகளும் ஏதாவது முட்டாள்தனமான நடவடிக்கைகளை முன்னெடுத்தால், எங்கள் நாட்டை பாதுகாக்க நாங்கள் அணு ஆயுதங்கள் மட்டுமல்லாது சூப்பர் நியூக்ளியர் ஆயுதங்களையும் பயன்படுத்துவோம். நட்புறவில்லாத நாடுகளிடம் இருந்து அச்சுறுத்தல்கள் ஏதும் ஏற்படாத பட்சத்தில் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இங்கு அணு ஆயுதங்கள் தேவைப்படாது" என்று கூறியிருக்கிறார்.

பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!