Election bannerElection banner
Published:Updated:

`அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி!' - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

பைடன்
பைடன் ( Susan Walsh )

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து சான்றிதழ் அளித்தனர்.

கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தலில் அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இதேபோல் துணை அதிபர் பதவிக்கு ட்ரம்ப் கட்சி சார்பில் மைக் பென்ஸ், ஜோ பைடன் கட்சியில் கமலா ஹாரிஸ் ஆகியோரும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில், ஜோ பைடன் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருந்த நிலையில், அதிபர் டொனால்டு ட்ரம்ப், தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து, அதிபர் தேர்தலில் மோசடி நடைபெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டிவந்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் அமெரிக்காவில் பதற்றமான அரசியல் சூழலை உருவாக்க, ட்ரம்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, தாக்குதல்கள் நடத்திவந்தனர். அமெரிக்க கேபிட்டலையும் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் தாக்கினர்.

அமெரிக்க தேர்தல்
அமெரிக்க தேர்தல்
J. Scott Applewhite

இந்தநிலையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து சான்றிதழ் அளித்தனர். ஜனவரி 20-ம் தேதி அன்று அவர் பதவியேற்பதற்கான வழிமுறைகளையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

பைடன்
பைடன்

பதவியிலிருந்து வெளியேறும் குடியரசுக் கட்சியின் அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு ஆதரவாக 232 வாக்குகளும், ஜனநாயகக் கட்சியின் பைடனுக்கு ஆதரவாக 306 வாக்குகளும் பதிவாகியிருப்பதாக உறுப்பினர்களின் வாக்கு எண்ணிக்கையை சான்றளித்திருக்கிறார் குடியரசுக் கட்சியின் துணைத் தலைவர் மைக் பென்ஸ்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு