Published:Updated:

பிரிட்டன்: ரயில்வே ஊழியர்களின் பெரும் வேலைநிறுத்த போராட்டம் - எச்சரிக்கும் பொருளாதார வல்லுநர்கள்

வேலைநிறுத்த போராட்டம் ( ட்விட்டர் )

பிரிட்டனில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் ஊதியம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்துள்ளனர்.

பிரிட்டன்: ரயில்வே ஊழியர்களின் பெரும் வேலைநிறுத்த போராட்டம் - எச்சரிக்கும் பொருளாதார வல்லுநர்கள்

பிரிட்டனில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் ஊதியம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்துள்ளனர்.

Published:Updated:
வேலைநிறுத்த போராட்டம் ( ட்விட்டர் )

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பிரிட்டன் பொருளாதார ரீதியில் சில சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாரத்தின் 3 நாள்கள் (செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை) வேலைநிறுத்தம் செய்ய 40,000 க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் சிலர் நேற்று முந்தினம் விடியற்காலையிலிருந்து ரயில் பாதைகளில் கூடி மறியல் செய்ய தொடங்கினர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்ததுள்ளது. முக்கிய ரயில் நிலையங்கள் வெறிச்சோடி விட்டன. வேலைநிறுத்தம் காரணமாக லண்டன் அண்டர்கிரவுண்ட் மெட்ரோக்களின் பெரும்பகுதி மூடப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தப் போராட்டம்
வேலை நிறுத்தப் போராட்டம்
ட்விட்டர்

இந்த போராட்டம் தொடர்பாக ரயில்வே, கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் (RMT) பொதுச் செயலாளர் மிக் லிஞ்ச் கூறும்போது, "பிரிட்டன் தொழிலாளிகளுக்கு ஊதிய உயர்வு, அவர்களுக்கு வேலைப் பாதுகாப்பு, நடுநிலையான மற்றும் பொதுவான ஒரு ஒப்பந்தம் ஆகியவை தேவை. அதை அரசு கொடுத்தால், பிரிட்டன் பொருளாதாரத்தில் இப்போது இருக்கும் இடையூறுகள் இருக்காது. நாடு முழுவதும் உள்ள வணிகங்கள் மற்றும் பொதுமக்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்த வேலைநிறுத்த முடிவை அரசு தான் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போராட்டம்
போராட்டம்
ட்விட்டர்

இதைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதம மந்திரி போரிஸ் ஜான்சன், ``கொரோனா தொற்றால் கடுமையான பொருளாதார பாதிப்பை எதிர்கொள்ளும் பிரிட்டிஷ், ஏற்கெனவே பல பொருளாதார சிக்கலைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தொழில்துறை ஊழியர்களின் இந்த நடவடிக்கை, பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டு வரும் வணிகங்களுக்குத் மேலும் ஆபத்தை விளைவிக்கும்" என்றார்.

வெறிச்சோடிய ரயில் நிலையம்
வெறிச்சோடிய ரயில் நிலையம்
ட்விட்டர்

இதற்கு முன் 1978-79 ல் இதே போன்ற ஊதிய உயர்வு சிக்கலால் பரவலான தொழிலாளர் வேலைநிறுத்தங்களைப் பிரிட்டன் அரசு எதிர்கொண்டது. அதை ஒப்பிடும் போது, 30 ஆண்டுகளில் பிரிட்டன் சந்தித்திருக்கும் இந்த மிகப்பெரிய வேலைநிறுத்தம், பிரிட்டனுக்கு பெரும் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism