Published:Updated:

ஆப்கானிஸ்தான்: மதவழிபாட்டுத் தலத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு... 50-க்கும் மேற்பட்டோர் பலி?!

ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தானின் காபூலில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 50 பேருக்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான்: மதவழிபாட்டுத் தலத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு... 50-க்கும் மேற்பட்டோர் பலி?!

ஆப்கானிஸ்தானின் காபூலில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 50 பேருக்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Published:Updated:
ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தானில் ஷியா - சன்னி பிரிவுகளுக்கிடையே தொடர்ந்து விரோதப்போக்கு நீடித்துவருகிறது. இதனால் அடிக்கடி அங்கு குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள கலீஃபா சாஹிப் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை அதிகாலை தொழுகைக்குப் பிறகு 50-க்கும் மேற்பட்ட சன்னி முஸ்லிம்கள் ஒன்று கூடி அமர்ந்து திக்ரு எனும் இறை தியானத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது சக்திவாய்ந்த குண்டு வெடித்திருக்கிறது. 

ஆப்கானிஸ்தான்  குண்டு வெடிப்பு
ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு

இது தொடர்பாக அந்தப் பள்ளிவாசலின் தலைவர் சையத் ஃபாசில் ஆகா கூறுகையில், "தற்கொலைப்படையைச் சேர்ந்தவர் என நாங்கள் நம்பும் ஒருவர், அந்த தியான சபையில் கலந்துகொண்டார். அவர்தான் அந்த குண்டை வெடிக்கச் செய்திருக்க வேண்டும். குண்டு வெடிப்புக்குப் பிறகு எங்கும் மனித உடல்கள் சிதறிக்கிடந்தன. இந்தத் தாக்குதலில் எனது இரு மருமகன்களையும் இழந்துவிட்டேன்" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் பெஸ்முல்லா ஹபீப், "சக்திவாய்ந்த இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் வரை இறந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்" என்று அதிகாரபூர்வ தகவலாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தான்  குண்டு வெடிப்பு
ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு
Ebrahim Noroozi

இந்தத் தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த குண்டு வெடிப்பு சம்பவம் துரதிஷ்டமானது. விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், காபூல் நகர சுகாதாரத்துறை வட்டாரம் மருத்துவமனைகளில் இதுவரை 66 பேர் இறந்திருப்பதாகவும், 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தான்  குண்டு வெடிப்பு
ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு

மேலும், இந்தத் தாக்குதல் சம்பவத்தை அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகளின் தூதரகமும் கடுமையாகக் கண்டித்துள்ளன. இது தொடர்பாக ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா பொதுச்செயலாளரின் துணை சிறப்புப் பிரதிநிதி மெட் நுட்சன், "இந்த இழிவான செயலை கண்டிக்க வார்த்தைகள் போதுமானதாக இல்லை" என்று கூறியிருக்கிறார்.

இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில், குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism