Election bannerElection banner
Published:Updated:

சீரான உடல்நிலை; செயற்கை சுவாசம் - ஐ.சி.யூவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்

கொரோனா தாக்கிய போரிஸ் ஜான்சன் செயற்கை சுவாசம் பெற்று வருகிறார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனையும் கொரோனா தாக்கியது. கடந்த 10 நாள்களாகத் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவரின் உடலில் காய்ச்சல், சளி, இருமல் குறையவில்லை. உடல்நிலை மோசமானதையடுத்து, மத்திய லண்டனில் உள்ள தாமஸ் மருந்துவமனைக்கு அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்டார். ஐ.சி.யூ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள ,அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.

கொரோனா  வைரஸ்
கொரோனா வைரஸ்

ஆனாலும், கடந்த 24 மணி நேரத்தில் அவரின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொன்னதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. சிறந்த அனுபவம் கொண்ட மருத்துவக்குழு, போரிஸ் ஜான்சனின் உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

தற்போது வரை, போரிஸ் ஜான்சன் சுயநினைவுடன்தான் இருக்கிறார். ஒருவேளை மயக்கமடைந்தால், அவருக்குப் பதிலாக வெளியுறவுத்துறைச் செயலர் டொமினிப் ராப் , போரிஸ் ஜான்சனின் அலுவல் பணிகளைக் கவனிப்பார். தற்போது 55 வயதான போரிஸ் ஜான்சனுக்குக் கடந்த மார்ச் 26-ந் தேதி கொரோனா பாதித்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, லண்டனின் 10, டவுனிங் தெருவில் உள்ள இங்கிலாந்து பிரதமர் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார்.

கொரோனாவுக்கு சிகிச்சை
கொரோனாவுக்கு சிகிச்சை
Claudio Furlan/LaPresse

போரிஸ் ஜான்சனின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், போரிஸ் ஜான்சனுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதை ஒப்புக்கொண்டார். எனினும், அவருக்கு நிமோனியா காய்ச்சல் உள்ளதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

`2 முறை தொடர்புகொண்டோம்; யாரும் வரவில்லை!’ - தாயின் உடலை வாங்க மறுத்த மகன் #Corona

இதற்கிடையே, கோவிட் 19 வைரஸைக் கட்டுப்படுத்துவது குறித்த பிரிட்டன் அமைச்சரவைக் கூட்டம் டொமினிக் ராப் தலைமையிலேயே நடைபெற்றது. போரிஸ் ஜான்சனின் உடல் நிலை இங்கிலாந்து மக்களைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது. ஐ.சி.யூவில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக இங்கிலாந்து அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு