Published:Updated:

பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்... அடுத்த பிரதமர் இந்திய வம்சாவளியா?

போரிஸ் ஜான்சன் ( Manish Swarup )

பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து தான் விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்திருக்கிறார்.

பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்... அடுத்த பிரதமர் இந்திய வம்சாவளியா?

பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து தான் விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்திருக்கிறார்.

Published:Updated:
போரிஸ் ஜான்சன் ( Manish Swarup )

இங்கிலாந்தில் தற்போது அசாதாரண அரசியல் சூழல் நிலவி வருகிறது. போரிஸ் ஜான்சன் 2019-ம் ஆண்டு பிரிட்டனின் பிரதமராகப் பதவியேற்றார். அப்போதிலிருந்தே அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. அண்மையில் அவர் அமைச்சரவையிலிருந்து ரிஷி சுனக், சஜித் ஜாவத் உள்ளிட்டோர் போரிஸ் ஜான்சனைக் கண்டித்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

கடந்த சில தினங்களில் மட்டும் சுமார் 50 அமைச்சர்கள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். அதன் காரணமாக பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்

இந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து தான் விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்திருக்கிறார். மேலும் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை இடைக்கால பிரதமராக பதவியில் நீடிப்பார் என்றும் கூறியிருக்கிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் அடுத்த பிரதமராக வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகளை திருமணம் செய்திருக்கும் ரிஷி சுனக் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!