Published:Updated:

கொரோனா தடுப்பூசி: மோடிக்கு நன்றி சொன்ன பிரேசில் பிரதமர்- கவனம் ஈர்த்த ஹனுமான் ரெஃபரன்ஸ்!

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ
News
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ

இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட 20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகள் பிரேசில் சென்றடைந்தன.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி தயாரிப்பதில் பல்வேறுகட்ட சோதனைகளை மேற்கொண்டுவருகின்றன. தடுப்பூசியின் இறுதிக்கட்ட ஆராய்ச்சி நடைபெற்றுவந்தாலும், சில நாடுகளில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

இந்தநிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் வர்த்தகரீதியிலான கொரோனா தடுப்பூசி மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கும் அரசு அனுமதி அளித்திருக்கிறாது. அதன்படி முதல் ஏற்றுமதியாக பிரேசில், மொராக்கோ நாடுகளுக்கு விமானம் மூலம் மருந்துகள் அனுப்பிவைக்கப்பட்டன. பிரேசில் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட 20 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் பிரேசில் சென்றடைந்தன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்து பிரேசிலுக்கு அனுப்பிவைத்ததற்காக பிரேசில் பிரதமர் ஜெய்ர் போல்சனாரோ (Jair M.Bolsonaro) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இது குறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், ஹனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்தது போன்ற படத்தைப் போட்டு அவர் நன்றி தெரிவித்திருக்கிறார். ராமாயணப் போரில் காயமடைந்த ராமரின் சகோதரரான லஷ்மணனை குணப்படுத்த ஹனுமன் மூலிகையைக் கொண்டு வரச் சென்ற போது, அவர் சஞ்சீவினி மலையையே பெயர்த்து எடுத்துவந்தார். அந்தக் காட்சியை விவரிக்கும் படத்தைப் பதிவிட்டு, அதில் ஹனுமன் கையிலிருக்கும் மலைக்கு மேல் கொரோனா தடுப்பூசி இருப்பது போன்ற படங்களை பதிவிட்டிருக்கிறார் பிரேசில் பிரதமர் போல்சனாரோ. மேலும், `தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் தடுப்பூசி வழங்கியதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், அவரின் ட்விட்டர் பதிவில், `பிரேசில் நாட்டுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்து உதவிய இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றி’ என்றும், உலகளாவிய நெருக்கடியைச் சமாளிக்க, சிறந்த நட்பு நாட்டை பிரேசில் பெற்றிருப்பது பெருமைக்குரியது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

`கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பிரேசிலுடன் இணைந்து பணியாற்றுவது பெருமைக்குரியது’ என்று பிரதமர் மோடியும் ட்வீட் செய்திருக்கிறார்.

பூட்டான், மாலத்தீவு, நேபாளம், வங்கதேசம், மியான்மர், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு மானிய உதவியின் கீழ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இந்தியா அனுப்பியிருப்பதாக வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியிருந்தார்.