Published:Updated:

`நிதியைப் பெற்றுக்கொள்கிறோம், ஆனால்..!’ - ஜி7 அறிவிப்புக்கு பிரேசில் அதிபரின் நிபந்தனைகள்

சத்யா கோபாலன்

பூமிக்கு 20 சதவிகித ஆக்ஸிஜனை வழங்கும் அமேசான் காடுகளைக் காக்க வேண்டும் என உலகம் முழுவதிலும் இருந்து குரல்கள் ஒலித்துவருகின்றன.

amazon fire
amazon fire

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகளில், கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக தீ பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. அமேசானில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ பிரேசிலை மட்டுமில்லாது உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கும் என்பதால், அங்கு எரிந்துவரும் தீயை உடனடியாக அணைக்க வேண்டும் எனப் பல நாட்டுத் தலைவர்களும் பிரபலங்களும் கோரிக்கை வைத்தனர்.

Brazilian president
Brazilian president

இதற்கிடையே, பிரான்ஸில் நடந்த ஜி7 மாநாட்டில் அமேசான் விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவில் அமேசானில் எரிந்துவரும் தீயை அணைக்க 20 மில்லியன் டாலர் வழங்குவதற்கு அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. முதலில், அந்த நிதியை வேண்டாம் என மறுத்த பிரேசில் அதிபர், தற்போது சில நிபந்தனைகளுடன் அதைப் பெற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளார்.

`இது அரசியலால் எரியும் தீ!' தப்பிப்பிழைக்குமா அமேசான்?

இதுபற்றி பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro) கூறியுள்ளதாவது, “ பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் என்னை அவமதித்ததை திரும்பப் பெற வேண்டும். அதற்காக அவர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். முதலில், அவர் என்னை ’பொய்யர்’ எனக் கூறினார். பின்னர், அமேசான் மீது தங்களது இறையாண்மை என்பது வெளிப்படையானது எனவும் கூறியுள்ளார். இந்த அனைத்து கருத்துகளையும் திரும்பப் பெற்றால் மட்டுமே பிராஸுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

French President
French President

சமீபத்தில், இமானுவேல் மேக்ரான் தன் ட்விட்டர் பக்கத்தில், “ பிரேசிலில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, சர்வதேச பிரச்னை. இதை ஜி7 மாநாட்டில் தலையாய பிரச்னையாக எடுத்து விவாதிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இவரின் கருத்துக்கு பதில் அளித்திருந்த பிரேசில் அதிபர், ‘ மேக்ரானின் பேச்சு காலனியாதிக்க மனோபாவத்தையே காட்டுகிறது’ எனக் கொதித்தார். இதையடுத்து, அமேசான் விவகாரத்தில் இந்த இரு நாடுகளுக்கும் இடையே உரசல் போக்கு நிலவிவருகிறது.