Published:Updated:

`ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைனின் ராணுவ நடவடிக்கைக்கு 100 மில்லியன் டாலர் நிதி' - பிரிட்டன் அறிவிப்பு

பிரிட்டன் பிரதமர் ( AP )

பிரிட்டன் தற்போது கூடுதலாக 100 மில்லியன் அமெரிக்க டாலரை உக்ரைனுக்கு வழங்கவிருப்பதாக லண்டனின் `டவுனிங் ஸ்ட்ரீட்' தெரிவித்திருக்கிறது.

`ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைனின் ராணுவ நடவடிக்கைக்கு 100 மில்லியன் டாலர் நிதி' - பிரிட்டன் அறிவிப்பு

பிரிட்டன் தற்போது கூடுதலாக 100 மில்லியன் அமெரிக்க டாலரை உக்ரைனுக்கு வழங்கவிருப்பதாக லண்டனின் `டவுனிங் ஸ்ட்ரீட்' தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
பிரிட்டன் பிரதமர் ( AP )

உக்ரைன் நேட்டோவில் இணைய முயல்வதைக் கண்டித்து, ரஷ்யா கடந்த மாதம் 24-ம் தேதி முதல் உக்ரைனில் போர் நடத்திவருகிறது. இதில் ரஷ்யப் படைகள், முக்கியமாக உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களைக் குறிவைத்துத் தாக்கிவருகின்றன. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாமீது பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் உலக வங்கியும் உக்ரைனுக்கு உதவும் வகையில் 300 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி திரட்டிவருவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்த நிலையில், பிரிட்டன் தற்போது கூடுதலாக 100 மில்லியன் அமெரிக்க டாலரை உக்ரைனுக்கு வழங்கவிருப்பதாக லண்டனின் `டவுனிங் ஸ்ட்ரீட்' தெரிவித்திருக்கிறது.

ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர்

இது தொடர்பாக டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ``ரஷ்யாவின் படையெடுப்பால் பாதிப்புகளைச் சந்தித்துவரும் உக்ரைனுக்கு மேலும் சில உதவிகளைச் செய்ய முடிவெடுத்திருக்கிறோம். உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளைச் செய்ய முன்வந்திருக்கிறோம். பொருளாதாரச் சீர்திருத்தம் மற்றும் சுமார் 22,000 ராணுவ வீரர்களுக்குப் பயிற்சியளிக்க ஏதுவாக நிதி மற்றும் பொருளுதவி செய்யவிருக்கிறோம். அதேபோல, 2,000 ஏவுகணைகளையும் வழங்கிவிருக்கிறோம். மேலும், பிரிட்டன் அரசின் அறிவிப்பின்படி, இந்த நிதி மற்றும் பொருளுதவிகள் உலக வங்கி மூலமாக உக்ரைனுக்கு வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism