Published:Updated:

``சுதந்திரத்துக்காகப் போராடுவது என்றால் என்ன என்பது பிரிட்டனுக்குத் தெரியும்..!" - ரிஷி சுனக்

ரிஷி சுனக் ( Tolga Akmen )

கீவ் நகரில் இரு தலைவர்களின் சந்திப்பின்போது, `ரஷ்யாவுக்கு எதிரான இந்தப் போரில் பிரிட்டன் எப்போதும் உக்ரைனுடன் துணை நிற்கும்' என ரிஷி சுனக் கூறினார்.

``சுதந்திரத்துக்காகப் போராடுவது என்றால் என்ன என்பது பிரிட்டனுக்குத் தெரியும்..!" - ரிஷி சுனக்

கீவ் நகரில் இரு தலைவர்களின் சந்திப்பின்போது, `ரஷ்யாவுக்கு எதிரான இந்தப் போரில் பிரிட்டன் எப்போதும் உக்ரைனுடன் துணை நிற்கும்' என ரிஷி சுனக் கூறினார்.

Published:Updated:
ரிஷி சுனக் ( Tolga Akmen )

பிரிட்டன் பிரதமராகப் பதிவியேற்றப் பிறகு, ரிஷி சுனக் முதன்முறையாக நேற்று (19-11-22) உக்ரைன் தலைநகர் கீவுக்குச் சென்றார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான ரிஷி சுனக் பிரதமராகப் பதவியேற்றதற்குப் பின், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்தது இதுவே முதன்முறையாகும். கீவ் நகரில் இரு தலைவர்களின் சந்திப்பின்போது, `ரஷ்யாவுக்கு எதிரான இந்தப் போரில் பிரிட்டன் எப்போதும் உக்ரைனுடன் துணை நிற்கும்' என ரிஷி சுனக் கூறினார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, நேற்று ரிஷி சுனக் தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ``சுதந்திரத்துக்காகப் போராடுவது என்றால் என்ன என்பது பிரிட்டனுக்குத் தெரியும். நாங்கள் என்றும் உங்களுக்குத் துணை நிற்போம்" என உக்ரைனுக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளார்.

உக்ரைன் அதிபர்
உக்ரைன் அதிபர்

இதற்குப் பதில் கூறும் வகையில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ``நன்றி ரிஷி. உங்களைப் போன்ற நண்பர்கள் எங்கள் பக்கத்தில் இருப்பதால்தான் எங்கள் வெற்றியில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். சுதந்திரத்திற்காக நிற்பது என்றால் என்ன என்பது நம் இரு நாடுகளுக்கும் தெரியும்" என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரிஷி சுனக், உக்ரைனின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனின் இந்த உறுதியான எதிர்ப்பைப் பாராட்டியும், பிரிட்டன் என்றும் ஆதரவு அளிக்கும் என்பதைக் குறிப்பிட்டும் ஒரு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில், "ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகத் தொடர்ந்து தைரியமாக எதிர்த்துப் போராடும் உக்ரைனின் இந்த செயல், உலகத்தில் அமைதி மற்றும் சுதந்திரத்தை விரும்பும் ஒவ்வொரு மக்களுக்கும் நம்பிக்கை அளிக்கிறது.

ரிஷி சுனக்
ரிஷி சுனக்

அதோடு, இதுபோன்ற மோதல்களில் ஈடுபடுபவர்களுக்கு எத்தனை சாதகமான சூழ்நிலைகள் வந்தாலும், அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். இது சர்வாதிகாரத்தை முன்னெடுப்பவர்களுக்கான செய்தி. மேலும், உக்ரைனின் வீரர்களுக்குத் தொடர்ந்து உதவுவதுடன், உக்ரைன் மக்களுக்கு உணவு மற்றும் மருந்து கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் பிரிட்டன் மனிதாபிமான முறையில் செயல்படும்" என்று எழுதியிருந்தார்.

மேலும், தான் பிரிட்டனுக்கு ஒரு வாழ்நாள் நண்பராக என்றும் இருப்பதாகவும், உக்ரைனை ஒரு வளமான, லட்சியமிக்க முன்னோக்கு நாடாக மீண்டும் உருவாக்க உதவுவதாகவும் ரிஷி சுனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.