Published:Updated:

“சம்பளம் பத்தலை பாஸ்!” - புலம்பும் பிரதமர்

போரிஸ் ஜான்சன்
பிரீமியம் ஸ்டோரி
போரிஸ் ஜான்சன்

தற்போது கொரோனாவிலிருந்து நாட்டைக் காக்கும் முயற்சிகளை எடுத்து வரும் போரிஸும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மீண்டு வந்தார்.

“சம்பளம் பத்தலை பாஸ்!” - புலம்பும் பிரதமர்

தற்போது கொரோனாவிலிருந்து நாட்டைக் காக்கும் முயற்சிகளை எடுத்து வரும் போரிஸும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மீண்டு வந்தார்.

Published:Updated:
போரிஸ் ஜான்சன்
பிரீமியம் ஸ்டோரி
போரிஸ் ஜான்சன்
“சம்பளம் கட்டுப்படியாகவில்லை, பிரதமர் வேலையை விடப்போகிறேன்” என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தன் இரண்டு எம்.பி.க்களிடம் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வாசிக்கின்றன. அடிக்கடி எதையாவது பேசிவிட்டு சர்ச்சையிலும் கேலிக் கிண்டலிலும் சிக்குவது வலதுசாரி அரசுகளின் ஸ்டைல் என்றாகிவிட்டது. போரிஸின் இந்த ‘ஷாக்கிங்’ முடிவுக்குக் காரணம் என்ன? போரிஸின் அரசியல் பின்னணிதான் என்ன?
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

47 வருடங்களாகப் பொருளாதார ரீதியாகவும் பணமுறையிலும் ஐரோப்பிய யூனியனின் ஓர் அங்கமாக இருந்த இங்கிலாந்து, கடந்த 31 ஜனவரி 2020 அன்று அதிலிருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டது. இதற்கான நிலைமாற்ற காலம் 31 டிசம்பர் 2020 வரை நீடிக்கிறது. இங்கிலாந்தின் இந்த வெளியேறுதலுக்குப் பின்னால் இருக்கும் மிக முக்கியமான முகம் போரிஸ் ஜான்சனுடையது. பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல்வாதி எனப் பன்முகம்கொண்ட போரிஸ் ஜான்சன் 2015-ம் ஆண்டு ‘Brexit’-ஐ முன்வைத்து பல்வேறு பிரசாரங்கள் செய்து தலைப்புச் செய்தியானார். பின்னர் 2016-19 ஆட்சிக் கட்டிலிலிருந்த தெரசா மே அரசவையில் வெளியுறவு செயலாளராக இருந்தார். அவரும் பழைமைவாதக் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் ‘Brexit’ தொடர்பான அவரின் நிலைப்பாட்டில் போரிஸுக்கு உடன்பாடு இல்லை என்பதால் தன் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவரே பழைமைவாதக் கட்சியின் தலைவராகப் பிரதமர் நாற்காலியையும் பிடித்தார். 2019 பொதுத் தேர்தலில் பழைமைவாத கட்சி ஒரு தனிப்பெரும் கட்சியாகவே 43.6% ஓட்டுக்களைப் பெற்று வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. இதைச் சாத்தியமாகியது ‘Brexit’ பிரசாரம். பிரதமரானதும் சொன்னதைச் செய்தார் போரிஸ். இங்கிலாந்து ஐரோப்பா யூனியனில் இருந்து வெளியேறியது.

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்

தற்போது கொரோனாவிலிருந்து நாட்டைக் காக்கும் முயற்சிகளை எடுத்து வரும் போரிஸும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மீண்டு வந்தார். ஒரு வருடத்துக்கு போரிஸ் ஜான்சனின் சம்பளம் 150,402 பவுண்டுகள். இது இந்திய மதிப்பில் ரூ.1,44.86,760. போரிஸின் கவலையெல்லாம் தான் பிரதமர் ஆவதற்கு முன்னர் இதைவிட அதிகமாகச் சம்பாதித்தோமே என்பதுதான். ஆம், பிரதமர் ஆவதற்குச் சில காலம் முன்புவரைகூட ‘தி டெலிகிராப்’ பத்திரிகைக்கு எழுதி மாதம் 23,000 பவுண்டுகளைச் சம்பாதித்து வந்தார். இது இந்திய மதிப்பில் ரூ.22,15,366.

இதுபோக போரிஸ் கூட்டம் என்று எங்கேயும் பேசப்போனால் பல லட்சங்களை அள்ளிவிடுவார். குறிப்பாக ஒரு மாதத்தில் இரண்டு கூட்டங்களில் மட்டுமே பேசி 160,000 பவுண்டுகள் (ரூ.1,54,11,242) வரைகூட சம்பாதித்து இருந்தார். ஆனால் பிரதமர் ஆனபிறகோ அந்தளவு வருமானம் இல்லையாம்.

போரிஸ் தற்போது பணம் போதவில்லை என விரக்தியடையக் காரணம் அவருக்கு 6 குழந்தைகள். அதில் ஒரு மகனான வில்ஃப்ரெட்டின் கல்லூரிக் கட்டணம் மட்டும் வருடத்துக்கு 42,500 பவுண்டுகள் (ரூ.40,93,611) என்கிறார்கள். இதைத் தாண்டி போரிஸின் கழுத்தை நெறிக்கும் மிகப்பெரிய செலவு விவாகரத்து பெற்ற தன் முன்னாள் மனைவி மெரினா வீலருக்கு மாதந்தோறும் செட்டில் செய்யவேண்டிய விவாகரத்து ஒப்பந்தத் தொகை. எனவேதான் ‘சம்பளம் பத்தலை பாஸ்’ என்று புலம்புகிறார் போரிஸ்.

“சம்பளம் பத்தலை பாஸ்!” - புலம்பும் பிரதமர்

ஆனால், போரிஸ் நினைத்தாலும் அவரால் இப்போது ராஜினாமா செய்ய முடியாது. அதற்கு அவர் குறைந்தபட்சம் ஆறு மாதங்களேனும் காத்திருக்க வேண்டும். பிரெக்ஸிட்டின் நிலைமாற்ற காலம் முடியவேண்டும். குறிப்பாக கொரோனா பாதிப்புகள் குறையவேண்டும். அதுவரை போரிஸ் காத்திருக்க வேண்டும். இது குறித்து அதிகாரப்பூர்வமாக போரிஸ் ஜான்சன் எதுவும் அறிவிக்கவில்லை என்றாலும் இது நடந்தால் அடுத்த பிரதமராகும் ரேஸில் முன்னணியில் இருப்பது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தற்போதைய எம்.பி ரிஷி சுனக் என்கிறார்கள். அது சரி பிரதமரே யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக பேப்பர் போட்டா என்ன செய்யறது?

பிரதமரே பேப்பர் போடலாமா ?