Published:Updated:

`மோசமான உடல்நிலை; பொறுப்பேற்ற மூத்த அமைச்சர்’ - தீவிர சிகிச்சைப் பிரிவில் இங்கிலாந்து பிரதமர்!

இங்கிலாந்து பிரதமர் ( AP )

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து பிரதமர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

`மோசமான உடல்நிலை; பொறுப்பேற்ற மூத்த அமைச்சர்’ - தீவிர சிகிச்சைப் பிரிவில் இங்கிலாந்து பிரதமர்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து பிரதமர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Published:Updated:
இங்கிலாந்து பிரதமர் ( AP )

மொத்த மனிதக் குலத்தையும் அச்சத்தின் பிடியில் ஆட்டுவித்து வீடுகளுக்குள் முடங்கவைத்துள்ளது கொரோனா வைரஸ். கடந்த நான்கு மாதங்களாக உலகத்தைத் தவிக்கவிடும் இந்த வைரஸால் பல்வேறு நாடுகளில் பிரபலங்கள், தலைவர்கள், சாதாரண மக்கள், பெரும் தொழிலதிபர் போன்ற பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி கடந்த பத்து நாள்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்
AP

இவருக்கு வைரஸ் தொற்று உறுதியானதும் தன் வீட்டிலேயே மருத்துவ உதவிகள் பெற்று தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார். அப்போதும் தொடர்ந்து அரசாங்கப் பணிகளில் ஈடுபட்டு, வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவந்தார். தினமும் ட்விட்டர் பக்கத்தில் தன் உடல்நிலை குறித்தும் இங்கிலாந்தின் நிலை குறித்தும் கருத்துகளைத் தெரிவித்துவந்தார். அப்போது, `எனக்கு மிகவும் லேசான வைரஸ் தொற்று மட்டுமே ஏற்பட்டுள்ளது, அதனால் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன்’ எனக் கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து இரண்டு வாரங்கள் சிகிச்சை பெற்ற பிறகு கடந்த ஞாயிற்றுக் கிழமை மீண்டும் அவருக்கு வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிலும் கொரோனா பாசிடிவ் என முடிவுகள் வந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதே நாள் இரவு லண்டன், செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது போரிஸ் ஜான்சனின் உடல் நிலை பற்றிப் பேசிய இங்கிலாந்து பிரதமர் அலுவலகச் செய்தி தொடர்பாளர், ``மருத்துவரின் ஆலோசனைப்படி பரிசோதனைக்காக மட்டுமே பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பத்து நாள்கள் ஆன நிலையிலும் வைரஸ் பாசிட்டிவ் என முடிவுகள் வந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்” எனக் குறிப்பிட்டார். தான் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் முதல் நாள் இரவு மருத்துவமனையில் சிறப்பாக கழிந்ததாகவும் பிரதமர் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

தாமஸ் மருத்துவமனை
தாமஸ் மருத்துவமனை
AP

ஆனால், திடீரென தற்போது இங்கிலாந்து பிரதமரின் உடல்நிலை சற்று மோசமாக இருப்பதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. போரிஸ் ஜான்சன் பற்றிய இந்தச் செய்தி மொத்த இங்கிலாந்துக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. பிரதமரின் உடல் நிலை குறித்து மீண்டும் தகவல் தெரிவித்துள்ள அவரது அலுவலக செய்தி தொடர்பாளர், ``திங்கள் கிழமை பிற்பகலுக்கு மேல் பிரதமரின் உடல்நிலை திடீரென மோசமடைந்துள்ளது. அவரது மருத்துவக் குழுவின் ஆலோசனையின் பேரில் மாலை 7 மணிக்கு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்.

போரிஸ் ஜான்சனின் உடல் தற்போதுவரை சீராக உள்ளது. அவர் நல்ல சுய நினைவுடன் உள்ளார். அவருக்கு ஒருவேளை வென்டிலேட்டர் உதவிகள் தேவைப்படலாம் என்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பிரதமர் அலுவலக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தின் மிக மூத்த அமைச்சரும், முதல் வெளியுறவுச் செயலருமான டொமினிக் ராப்பை தன் இடத்திலிருந்து அனைத்து அரசு வேலைகளையும் கவனித்துக்கொள்ளுமாறு ஜான்சன் கூறியுள்ளார். பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று இங்கிலாந்தில் நடந்த வழக்கமான கொரோனா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கும் ராப் தான் தலைமை தாங்கி நாட்டு நிலவரம் குறித்து ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டார்.

டொமினிக் ராப்
டொமினிக் ராப்
AP

அதில், `மக்களுக்கான அரசின் பணி எப்போதும்போல் தொடரும். பிரதமர் அனுமதிக்கப்பட்டுள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் ஒரு சிறந்த மருத்துவக் குழுவுடன் பிரதமர் பாதுகாப்பாக இருக்கிறார். அவரின் அறிவுரைப்படி நாம் நடந்தாலே கொரோனா வைரஸை தோற்கடிக்க முடியும். நாட்டுக்குத் தேவையான திட்டங்களை உறுதி செய்வதிலேயே அரசாங்கத்தின் கவனம் தொடர்ந்து இருக்கும்’ என ராப் குறிப்பிட்டுள்ளார்.