Published:Updated:

பக்தாதியை வேட்டையாடிய நாய்... பின்லேடனைப் பிடித்த கெய்ரோ! `catch' கதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பின்லேடனைப் பிடிக்க உதவிய கெய்ரோ
பின்லேடனைப் பிடிக்க உதவிய கெய்ரோ

பின்லேடனைக் கொன்றதையடுத்து, வாஷிங்டனில் நேவி சீல் வீரர்களுக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தச் சமயத்தில் கெய்ரோவை சந்தித்தார்.

ஐ.எஸ் இயக்கத் தலைவர் பக்தாதியை வேட்டையாடியபோது காயமடைந்த நாய் தற்போது பணிக்குத் திரும்பியுள்ளது. சிரியாவில் இட்லீப் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை இரவு, அமெரிக்க அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலுக்கு பயந்து ஐ.எஸ் இயக்கத் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தில் குழந்தைகள், 4 பெண்கள் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலியாகினர். பக்தாதியைக் கொல்லும் பணியில் 4 நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன. பக்தாதி பதுங்கியிருந்த வீட்டை அமெரிக்க படைகள் தாக்கியபோது, பாக்தாதி, தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சுரங்கத்துக்குள் ஓடியுள்ளார்.

Conan
Conan
Photo: Twitter / Donald Trump
3 ஆண்டு தேடுதல்.. ஒருவழிப்பாதை குகை.. ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அல் பக்தாதி கொல்லப்பட்டது எப்படி?

பக்தாதியைப் பின்னாடியே துரத்திச் சென்ற ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாய், கடித்துக் குதறுவதுக்குப் பாய்ந்தது. நாய்க்கு அஞ்சிய பக்தாதி சுரங்கத்துக்குள் நுழைந்துகொண்டார். தொடர்ந்து அமெரிக்கப் படையினர் தாக்க, பயந்து அஞ்சிய பக்தாதி, வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து இறந்தார். இந்தச் சமயத்தில் அந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்கும் லேசான காயம் ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த நாயைத்தான் `ஹீரோ டாக், திறமை மிக்க நாய்' என்று தன் ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளியிருந்தார். தற்போது, காயமடைந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளதாக பென்டகனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளளது. பாதுகாப்பு கருதி நாயின் பெயர் முதலில் வெளியிடப்படவில்லை. ஆனால், பின்னர் ட்ரம்ப் ட்விட்டரில் `Conan' என வெளிப்படையாகவே ட்விட்டரில் அறிவித்துவிட்டார்.

அதோடு, பென்டகன் பக்தாதி வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளது அமெரிக்கா.

பொதுவாகவே, காலங்காலமாக ராணுவங்களில் நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிரடிப்படையில் இதுபோன்று எந்தச் சூழலையும் சமாளிக்கக்கூடிய திறமைமிக்க 50 நாய்கள் உள்ளன. இவை, ராணுவத் தாக்குதலுக்கு உதவியாகவும் பேரிடர் காலங்களில் மனித உயிர்களை மீட்கவும் ரகசிய இடங்கள், பதுங்குக்குழிகளை கண்டுபிடிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் பின்லேடனைப் பிடிக்கும் பணியிலும் ஒரு நாய் பயன்படுத்தப்பட்டது. அதன் பெயர் கெய்ரோ. இந்த நாய் பெல்ஜியன் மிலினாய்ஸ் ரகத்தைச் சேர்ந்தது. அமெரிக்கப் படையில் இந்த நாய்களுக்கு K9 officers என்று பெயர்.

பக்தாதி
பக்தாதி
ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி சுட்டுக்கொலை?

புல்லட் ப்ரூப் ஆடைகள், நவீன கேமராக்கள், ரேடியோக்கள், இரவிலும் தெளிவாகப் பார்க்கக்கூடிய லென்ஸ்கள் ஆகியவை இவற்றின் உடலில் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு நாயின் உடலில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், உபகரணங்களின் மதிப்பு மட்டும் ரூ. 2 கோடிக்கு மேல் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். தண்ணீர் நிறைந்த பகுதிகளிலும் இந்த நாய்கள் மின்னல் வேகத்தில் செயல்படக்கூடியவை. பாராசூட்டில் இருந்தும் வீரர்களுடன் சேர்ந்து குதிக்கும் வகையில் பழக்கப்படுத்தப்பட்டிருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்லேடனைக் கொன்றது அமெரிக்காவின் `நேவி சீல்' பிரிவைச் சேர்ந்த வீரர்கள். பாகிஸ்தானில் பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டுக்குள் அதிரடிப்படையினர் நுழைந்தபோது, கெய்ரோ வெடிகுண்டுகளைக் கண்டுபிடிப்பது, ரகசிய இடங்களை அறிவது என பெரும் உதவியாக இருந்தது.

அதிரடிப்படை நாய்கள்
அதிரடிப்படை நாய்கள்

பின்லேடனைக் கொன்றதையடுத்து, வாஷிங்டனில் நேவி சீல் வீரர்களுக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தச் சமயத்தில் கெய்ரோவை சந்தித்தார். ஒபாமாவும் `ஹீரோ டாக்' என்று கூறி கெய்ரோவை கொஞ்சினார். 2011-ம் ஆண்டு டைம் இதழ், `உலகின் மதிப்புமிக்க விலங்கு' என்ற விருதை கெய்ரோவுக்கு அளித்து கௌரவித்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு