Published:Updated:

ஐ.எஸ். அமைப்பின் அல் பக்தாதி காலூன்றிய மொசூல் நகரம் இன்று எப்படி இருக்கிறது தெரியுமா?

மொசூல் நகரை அங்கு வசித்த மக்கள் வந்து பார்த்துச் செல்கிறார்கள். ஆனால், மீண்டும் குடியேறி வசிப்பது தற்போது இயலாத காரியம். ஏனென்றால், ஐ.எஸ் இயக்கம் நகரை சின்னாபின்னமாக்கிவிட்டது.

ஐ.எஸ். அமைப்பின் அல் பக்தாதி காலூன்றிய மொசூல் நகரம் இன்று எப்படி இருக்கிறது தெரியுமா?

மொசூல் நகரை அங்கு வசித்த மக்கள் வந்து பார்த்துச் செல்கிறார்கள். ஆனால், மீண்டும் குடியேறி வசிப்பது தற்போது இயலாத காரியம். ஏனென்றால், ஐ.எஸ் இயக்கம் நகரை சின்னாபின்னமாக்கிவிட்டது.

Published:Updated:

ஐ.எஸ் இயக்கத் தலைவர் பக்தாதி கொல்லப்பட்டு விட்டார். அந்த இயக்கத்தின் போர் வெறிக்குச் சான்றாக நிற்கிறது, வட இராக்கில் உள்ள பழம் பெருமை வாய்ந்த மொசூல் நகரம். சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வைத்துக் கொல்லப்பட்ட அல் பக்தாதி கடைசியாக தோற்கடிக்கப்பட்டது இந்த மொசூலில்தான். அதற்குப் பிறகே, தன் இருப்பிடத்தை பக்தாதி மாற்றிக்கொண்டே இருக்க நேரிட்டது. இராக்கின் இரண்டாவது பெரிய நகரமான இது, அழகிய டைகரீஸ் நதியின் மடியில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 18 லட்சம் மக்கள் தொகை கொண்டது. மசூதிகள், ஆலயங்கள் நிறைந்து காணப்படும் இந்த நகரம் இராக் நாட்டின் கலாசார மையமாகவும் கருதப்பட்டது. ஷியா, சன்னி முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள், ஆர்மீனிய மக்கள் எனப் பல இனக்குழுக்களும் ஒற்றுமையுடன் இங்கே வசித்தனர். இதுவெல்லாம் ஐ.எஸ் வரும் வரைதான்!

உடைந்து கிடக்கும் அல் நூரி மசூதி
உடைந்து கிடக்கும் அல் நூரி மசூதி
AP

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியாவைப் போல பன்முகத்தன்மை கொண்ட மக்கள் வாழும் நகரமாக இராக்கில் மொசூல் அறியப்பட்டிருந்தது. மக்களும் ரொம்பவே ஃப்ரெண்ட்லியானவர்கள். இந்தியர்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்கள். `எங்கள் நகரமும் இந்தியா போலத்தான் ஒரு காலத்தில் இருந்தது' என்று இப்போது ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள். மொசூல் நகரின் பெரும்பாலான மக்கள் இந்தியாவுக்குச் சுற்றுலா வருவதை லட்சியமாக வைத்துள்ளார்கள். மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்தவர்களும் அதிகம். இந்தியாவுக்கு விசிட் அடித்த மொசூல்வாசிகள் கண்களில், இந்தியர்கள் தென்பட்டு விட்டால் மிகவும் அன்பு காட்டுவார்களாம். இந்தியாவில் இருந்த காலத்தையும் நினைவுகளையும் அவர்களிடத்தில் அன்போடு பகிர்ந்து கொள்வார்களாம். இத்தகையை, அன்பு நிறைந்த மக்கள் வாழ்ந்த அழகிய மொசூல் நகரத்தை, குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல ஐ.எஸ் இயக்கம் உருக்குலைத்தது. விளைவாக... துப்பாக்கி தோட்டா துளைக்காத சுவரை இங்கே பார்ப்பதே அரிது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த 2014-ம் ஆண்டு ஐ.எஸ் இயக்கம் இந்த நகரைக் கைப்பற்றியது. மொசூலைப் பிடித்ததும் ஐ.எஸ் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? பள்ளிக் குழந்தைகளுக்கான பாடத்திட்டங்களை மாற்றச் சொன்னதுதான். ஐ.எஸ் கொள்கைகள்தான் புதிய பாடங்கள். குழந்தைகளுக்கு ஆயுதப் பயிற்சியும் கொடுக்கச் சொன்னது ஐ.எஸ். இதனால், பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதையே நிறுத்தி விட்டனர். கடந்த 2017- ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மீண்டும் இராக்கியப் படைகள் மொசூல் நகரைப் பிடித்தன. அதற்குப் பிறகே மீண்டும் பள்ளிகள் செயல்படத் தொடங்கின.

ஐ.எஸ் இயக்கத்தினர்
ஐ.எஸ் இயக்கத்தினர்

ஓல்டு மொசூல்தான் இந்த நகரத்தின் இதயம் போன்றது. ஐ.எஸ் இயக்கத்தினர் கடைசியாக இங்கு வைத்துத்தான் தோற்கடிக்கப்பட்டனர். இராக்கின் அடையாளங்களுள் ஒன்றாகக் கருதப்படும் பழைமையான அல் நூரி மசூதி இங்கே இருக்கிறது. இராக்கியப் படைகள் மொசூலைப் பிடித்ததும் ஐ.எஸ் இயக்கத்தினர் தலிபான்கள் பாமியான் புத்தர் சிலைகளைத் தகர்த்தது போல, அல் நூரி மசூதியையும் தகர்த்தனர். 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அல் நூரி மசூதியைச் சீரமைக்க, அமீரக அரசு 50 லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்கவுள்ளது. இந்த மசூதியின் முன் நின்றுதான் அபுபக்கர் அல் பக்தாதி தன்னை `கலீபா' என்று அறிவித்துக் கொண்டார்.

சிதிலமடைந்த கட்டடங்கள், தகர்ந்து போன சாலைகள், குவிந்து கிடக்கும் செங்கற்கள், தோட்டாக்கள் துளைத்த சுவர்கள் இவைதான் இப்போதையை மொசூல் நகரின் அடையாளங்கள். வெடிக்காத வெடிகுண்டுகள் கற்குவியல்களுக்குள் கண்ணிவெடி போலக் குவியல் குவியலாக இருக்கின்றன. இதனால், `சந்தேகத்துக்கிடமான எந்தப் பொருள்களையும் தொட வேண்டாம்' என்று எச்சரிக்கை பலகைகள் மொசூல் நகரில் வைக்கப்பட்டுள்ளன. மின்சாரம் கிடையாது, குடிநீர் சப்ளை இல்லை, கடைகள் இல்லை, மருத்துவமனைகள் செயல்படுவதில்லை. மொத்தத்தில் வாழ முடியாத நகரமாக மொசூலை ஐ.எஸ் மாற்றிவிட்டது. கட்டடங்களின் இடிபாடுகளுக்கிடையே குவிந்து கிடக்கும், வெடிபொருள்களை அகற்றவே 10 ஆண்டுகள் பிடிக்குமாம். இது தவிர, நகரம் முழுவதுமே எலும்புக்கூடுகளும் இறைந்து கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்துவதும் சவாலாக இருக்கிறது.

மொசூல் நகரம்
மொசூல் நகரம்
AP

மொசூல் நகரைப் புனரமைக்கக் கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாய் தேவை என்று அனுமானிக்கப்பட்டுள்ளது. ஐ.நா சபையும் இராக் அரசுக்கு முடிந்தளவு உதவி வருகிறது. வளைகுடா நாடுகள் இராக் மீது கொஞ்சம் கரிசனம் காட்டத் தொடங்கியுள்ளன. வளைகுடா நாடுகள் நிதி அளித்தால், மொசூல் நகரை விரைவில் சீரமைத்து விடலாம்.

நகரை விட்டு வெளியேறிய மக்கள் அவ்வப்போது, தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பி,எப்படி இருக்கிறது என்று பார்த்துச் செல்கிறார்கள். எப்போது, தங்கள் நகரில் மீண்டும் வாழ்வோம் என்ற ஏக்கம் அவர்களின் முகத்தில் பார்க்க முடிகிறது!