Published:Updated:

India-China Face-Off: `கல்வான் இழப்பை ஏற்க மறுக்கும் சீனா!’ - அமெரிக்க உளவுத்துறை தகவல்

மோடி - ஜின்பிங்
மோடி - ஜின்பிங்

இந்தியாவுடனான மோதலில் ஏற்பட்ட இழப்பை, சீன அரசு ஏற்க மறுப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியா - சீனாவின் எல்லைப் பகுதியான கல்வானில் சில மாதங்களாக இந்தியத் தரப்பு சாலைகள், பாலங்கள் மற்றும் பிற வசதிகளை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. இதனால் உருவான பிரச்னை கடந்த மாதம் 15-ம் தேதி பெரிதானதால் இரு தரப்பினரும் மாறி மாறி கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இந்தத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்களும் சீனாவைச் சேர்ந்த 30-க்கும் அதிகமான வீரர்களும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வான் பகுதி
கல்வான் பகுதி

இந்தியத் தரப்பு வீரர்கள் உயிரிழந்ததை மத்திய அரசு வெளிப்படையாக அறிவித்து அவர்களுக்கு உரிய மரியாதையுடன் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. `இறந்த வீரர்கள் அனைவரும் ஹீரோக்கள், அவர்கள் குடும்பத்தினரின் தியாகம் போற்றத்தக்கது’ எனப் பிரதமர் மோடியும் புகழ்ந்திருந்தார். இந்தச் சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையில் இன்னும் தங்கள் தரப்பில் எத்தனை வீரர்கள் உயிரிழந்தனர் என்பதை சீனா வெளியிடவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நான்காவது கட்டமாக இன்று ராணுவ அதிகாரிகளின் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

India-China Face-Off:`மே மாதம் முதலே பதற்றம்... காரணம் சீனா!' -இந்திய வெளியுறவுத்துறை

இந்நிலையில், கல்வான் மோதலில் தங்கள் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பை சீனா ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை என அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்தான் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை ஏற்க சீனா மறுக்கிறது. மேலும், தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடல்களையும் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய அந்நாட்டு அரசு விரும்பவில்லை.

அமெரிக்கா
அமெரிக்கா

தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் மோசமாக நடத்தப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பரவலைக் காரணம் காட்டி இறந்தவர்களுக்கு, அவர்கள் குடும்பத்தினர் செய்யும் பாரம்பர்ய மரியாதைகளையும் செய்யக் கூடாது, உறவினர்கள் தொலைவிலிருந்துதான் வீரர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும் என சீன அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, ராணுவ வீரர்களின் இறப்பு அவர்களுக்கு மரியாதை வழங்கப்படாதது ஆகியவற்றை வீரர்களின் குடும்பத்தினர் வெளியில் சொல்லாத வண்ணம், அரசு மக்களை அமைதியாக்க முயல்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு