Published:Updated:

``நெருப்பை வைத்து விளையாடினால் சூடுதான்படும்” - தைவான் விவகாரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்

பைடன் - ஜி ஜின்பிங் ( Alex Brandon, Eraldo Peres )

ஜோ பைடன் பிரதமர் ஆன பிறகு சீன நாட்டின் அதிபரோடு ஐந்தாவது முறையாகத் தொலைபேசி மூலம் உரையாடினார்.

``நெருப்பை வைத்து விளையாடினால் சூடுதான்படும்” - தைவான் விவகாரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்

ஜோ பைடன் பிரதமர் ஆன பிறகு சீன நாட்டின் அதிபரோடு ஐந்தாவது முறையாகத் தொலைபேசி மூலம் உரையாடினார்.

Published:Updated:
பைடன் - ஜி ஜின்பிங் ( Alex Brandon, Eraldo Peres )

அமெரிக்கா, சீனா இடையில் இருக்கும் அரசியல் பிரச்னைகள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங் -ம் தொலைபேசி மூலம் உரையாடினர். கடந்த வியாழனன்று நடைபெற்ற இந்த உரையாடல் இரண்டு மணி நேரங்களுக்கு மேல் நீடித்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஜோ பைடன் பிரதமர் ஆன பிறகு சீன நாட்டின் அதிபரோடு ஐந்தாவது முறையாகத் தொலைபேசி மூலம் உரையாடினார். இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்தும் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஜோ பைடன் | Joe Biden
ஜோ பைடன் | Joe Biden
Andrew Harnik

தைவானில் நிலவி வரும் பிரச்னைகள் குறித்தும் இந்த உரையாடலில் பேசியுள்ளனர். தைவான் தன்னைத் தானே சுயமாக ஆட்சி செய்யும் நாடாகக் கூறிவருகிறது. தைவானுக்கு மறைமுகமாக அமெரிக்கா பல வழிகளில் உதவி செய்துவருகிறது. ஆனால் சீன அரசோ தைவான், சீன நாட்டைச் சேர்ந்த ஒரு பகுதியே எனக் கூறிவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தைச் சேர்ந்த நான்சி பெலோசி தைவானுக்குப் பயணம் மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டது.

இந்தப் பயணத் திட்டமே தற்போதைய சீனாவின் அதிருப்திக்கு காரணமாகத் தெரிகிறது. இது போன்ற ஒரு பயணம் அச்சுறுத்தலாகவே கருதப்படும் என சீன அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இந்தப் பயணம் உறுதி செய்யப்பட்டால் அதற்கேற்ற விளைவுகளை அமெரிக்கா சந்திக்கவேண்டி வரும் என சீன அரசு கடந்த புதன்கிழமை தெரிவித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜி ஜின்பிங்
ஜி ஜின்பிங்

தைவான் விவகாரம் பற்றி பைடனிடம் பேசிய சீன அதிபர் ஜின்பிங், "நெருப்பைவைத்து விளையாடுபவர்கள் கையில் கண்டிப்பாக சூடு ஏற்படும். இதை அமெரிக்கத் தரப்பு புரிந்துகொள்ளும் என நினைக்கிறேன். தைவான் விஷயத்தில் சீன அரசு மற்றும் மக்களின் நிலைப்பாடு உறுதியாக இருக்கிறது. சீனாவின் 1.4 பில்லியன் மக்கள் சீனாவின் தேசிய இறையாண்மை மற்றும் ஒற்றுமையைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளனர்" எனக் கூறினார்.