Published:Updated:

`ஜீன் தோற்றம் வெளியிட்ட ஆராய்ச்சியாளர்; ஆய்வகத்தை மூடிய சீனா’ - வெள்ளை மாளிகை பகிரங்க குற்றச்சாட்டு

வெள்ளை மாளிகை

கொரோனா உருவான இடம் மற்றும் அதன் தோற்றம் தொடர்பான விவகாரங்களில் சீனா உண்மைகளை மறைப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை குற்றம்சாட்டியுள்ளது.

`ஜீன் தோற்றம் வெளியிட்ட ஆராய்ச்சியாளர்; ஆய்வகத்தை மூடிய சீனா’ - வெள்ளை மாளிகை பகிரங்க குற்றச்சாட்டு

கொரோனா உருவான இடம் மற்றும் அதன் தோற்றம் தொடர்பான விவகாரங்களில் சீனா உண்மைகளை மறைப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை குற்றம்சாட்டியுள்ளது.

Published:Updated:
வெள்ளை மாளிகை

சீனாவில் வைரஸ் உறுதிசெய்யப்பட்டு இதுவரை 5 மாதங்கள் ஆன நிலையில், இன்னும் கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மொத்த மனிதகுலமும் வீட்டுக்குள் சிறைவைக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மனிதனின் இயல்பு வாழ்க்கை முதல் நாட்டின் பொருளாதாரம் வரை என அனைத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

சீனா
சீனா

இதற்கிடையில், கொரோனாவை முன்வைத்து அமெரிக்காவும் சீனாவும் பனிப்போர் நடத்தும் சம்பவமும் தொடர்ந்து அரங்கேறிவருகிறது. கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. முதலில் சீனாவில் உள்ள வுகான் நகரின் இறைச்சி சந்தையிலிருந்து வைரஸ் உருவானதாகக் கூறப்பட்டது. ஆனால், அதற்கான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

பின்னர் அதே வுகானில் இருக்கும் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டு வந்த கொரோனா வைரஸ் தெரியாமல் அங்கு பணியாற்றியவரிடம் தொற்றிருக்கலாம், அவர் இறைச்சி சந்தைக்குச் சென்றபோது அங்கிருந்து பிறருக்குப் பரவியிருக்கலாம் என ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்னர் வுகான் ஆய்வகத்திலிருந்துதான் வைரஸ் பரவியது என்பதை தான் முழுவதும் நம்புவதாகவும் அதற்கு தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் அதைத் தற்போது கூற முடியாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த வெள்ளை மாளிகையின் புதிய செய்தி செயலாளர் கெய்லி மெக்னானி, ட்ரம்ப் கூறிய கருத்து தொடர்பாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் பேசும்போது, ``கொரோனா வைரஸ் தொடர்பாக சீனாவைத் தண்டிக்க வரிவிதிப்பை அதிகப்படுத்தலாம் என்று அதிபர் பரிந்துரைத்துள்ளார். இதனால் பங்குச் சந்தைகள் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளன.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

அதிபர் கூற நினைக்கும் விஷயங்களை அவரே உங்களுக்குத் தெரிவிப்பார். அவருக்கு முன் நான் எந்தக் கருத்தையும் கூறமாட்டேன். ஆனால், கொரோனா விவகாரத்தில் சீனா மீது அதிபரின் அதிருப்தியை நான் எதிரொலிப்பேன். கொரோனா விஷயத்தை சீனா முறையாகக் கையாளவில்லை. இது அனைவருக்குமே தெரியும். அதற்கான மொத்த ஆதாரத்தையும் விரைவில் அதிபர் வெளியிடுவார். அதற்கு முன்னர் ஒரு எடுத்துக்காட்டை மட்டும் நான் கூறுகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீனாவில் கொரோனா வைரஸ் உறுதியானது முதல் தற்போது வரை வைரஸின் ஜீன் தோற்றத்தை சீன அரசு வெளியிடவில்லை. அதை சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் ஆராய்ச்சி மருத்துவர்தான் முதன்முதலில் வெளியிட்டார். அவர் ஜீன் தோற்றத்தை வெளியிட்ட அடுத்த நாளே அவரின் ஆராய்ச்சி மையத்தை சீன அரசு மூடிவிட்டது.

மெக்னானி
மெக்னானி
AP

தற்போது சீனாவின் எண்ணம் உங்களுக்குப் புரியும். உலகம் ஆபத்தில் உள்ள மிக முக்கியமான நேரத்தில் கொரோனா பற்றி விசாரணை நடத்த உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கப் புலனாய்வுத் துறை போன்ற யாரையும் சீனா தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. எனவே, சீனாவின் நடவடிக்கைகளில் நாங்கள் அதிருப்தி அடைகிறோம்” என மெக்னானி தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism