Published:Updated:

தைவானைச் சுற்றி சீன ராணுவம் போர்ப் பயிற்சி - அதிகரிக்கும் பதற்றம்; விமான சேவை பாதிக்கும் அபாயம்!

போர் விமானம்

போர்ப் பயிற்சிக்காக தைவான் தீவைச் சுற்றியுள்ள கரையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், ஆறு முக்கியப் பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தைவானைச் சுற்றி சீன ராணுவம் போர்ப் பயிற்சி - அதிகரிக்கும் பதற்றம்; விமான சேவை பாதிக்கும் அபாயம்!

போர்ப் பயிற்சிக்காக தைவான் தீவைச் சுற்றியுள்ள கரையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், ஆறு முக்கியப் பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Published:Updated:
போர் விமானம்

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி மலேசியா, தைவான் உட்பட நான்கு ஆசிய நாடுகளுக்கு விஜயம் செய்யும்விதமாக, கடந்த திங்களன்று தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். இதில் தைவானைச் சொந்தம் கொண்டாடும் சீனா, நான்சி பெலோசி தைவானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவைக் கடுமையாக எச்சரித்தது. இருப்பினும் சீனாவின் எச்சரிக்கைகளை மீறி, நான்சி பெலோசி தைவானுக்குச் சென்று மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பிவிட்டார்.

கடந்த 25 ஆண்டுகளில் தைவானுக்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க அதிகாரி நான்சி பெலோசி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தைவானைச் சுற்றி முக்கியமான சர்வதேச கப்பல் பாதைகளில், சீனாவின் மிகப்பெரிய ராணுவப் பயிற்சியை இன்று தொடங்கியதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

சீனா - தைவான்
சீனா - தைவான்

மேலும், இந்த போர்ப் பயிற்சிக்காகத் தைவான் தீவைச் சுற்றியுள்ள கரையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், ஆறு முக்கியப் பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பயிற்சி காலகட்டத்தில், நீர் மற்றும் வான்வெளிகளுக்குள் கப்பல்கள் மற்றும் விமானங்கள் நுழையக் கூடாது எனவும் கூறப்பட்டிருக்கிறது. தைவான் அமைச்சரவை தைவானின் விமான தகவல் மண்டலத்தின் (எஃப்ஐஆர்) வழியாகச் செல்லும் 18 சர்வதேச வழித்தடங்களை இந்தப் பயிற்சி சீர்குலைக்கும் என்றும், அதனால் தைவான் பாதுகாப்பு அமைச்சகம், சீனாவின் இந்தப் பயிற்சிகளை உன்னிப்பாகக் கவனித்துவருவதாகத் தெரிவித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யாபோல அடுத்து தைவான் - சீனா இடையே போர் சூழல் ஏற்படுமோ என உலக நாடுகள் அச்சம் தெரிவித்துவருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!