Published:Updated:

சீன கம்யூனிஸ்ட் மாநாடு: வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முன்னாள் அதிபர்! - அதிர்ச்சி வீடியோ

வலுகட்டாயமாக வெளியேற்றப்படும் முன்னாள் அதிபர் ( ட்விட்டர் )

சீனா அதிபர் தேர்வுக்கான மாநாட்டில் சீன முன்னாள் அதிபர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் மாநாடு: வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முன்னாள் அதிபர்! - அதிர்ச்சி வீடியோ

சீனா அதிபர் தேர்வுக்கான மாநாட்டில் சீன முன்னாள் அதிபர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
வலுகட்டாயமாக வெளியேற்றப்படும் முன்னாள் அதிபர் ( ட்விட்டர் )

சீனாவில் ஒற்றை ஆட்சி முறை அமலில் இருக்கிறது. இதனால் அங்கு மாற்று கட்சிகளும் இல்லை, தேர்தலும் இல்லை. பல ஆண்டுகளாக அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தே சீன அதிபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடைபெறும். அதன் அடிப்படையில், இந்த மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மொத்தம் ஆறு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது.

வலுகட்டாயமாக வெளியேற்றப்படும் முன்னாள் அதிபர்
வலுகட்டாயமாக வெளியேற்றப்படும் முன்னாள் அதிபர்
AFP

இன்று தான் பொலிட்பீரோ உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் மூலம் அதிபர் தேந்தெடுக்கப்படுவார். இந்த முறையும், அதிபராக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சீனாவின் முன்னாள் அதிபர் ஹூ ஜின்டாவோ இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டார். இவருக்கு ஜி ஜின்பிங் அருகில் இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. எனினும் மாநாடு தொடங்கிய சிறிது நேரத்திலேயே வலுகட்டாயமாக ஹூ ஜின்டாவோவெளியேற்றப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பான வீடியோவுன் வெளியாகி பல்வேறு விமர்சனங்களுடன் வேகமாகப் பகிரப்படுகிறது. கடந்த ஒரு வார கால மாநாடு நிகழ்வில் பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இறுதி நாளான இன்று தகவல்கள் சேகரிக்க பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து இந்த வீடியோ வெளியாகியிருக்கிறது.

ஹூ ஜின்டாவோ-வின் வெளியேற்றத்திற்கு அரசு அதிகாரிகள் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை. ஜி ஜின்பிங் கட்சிக்குள் இருந்த, தனது ஆட்சிக்கு எதிரானவர்களை, அவரது போட்டியாளர்களை, ஊழல் வழக்கில் சிறையில் அடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த நிகழ்வு நடந்திருக்கிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.