Published:Updated:

இதுதான் அந்த கார்..!- சீன அதிபர் பயன்படுத்தும் ஹன்கோவில் அப்படி என்ன விசேஷம்?

சீன அதிபர்கள் தங்கள் பயன்பாட்டுக்குப் பெரும்பாலும் உள்நாட்டு தயாரிப்பு கார்களையே பயன்படுத்துகிறார்கள்.

ஹன்கோ கார்
ஹன்கோ கார்

சீன அதிபர்கள் தங்கள் பயன்பாட்டுக்குப் பெரும்பாலும் உள்நாட்டு தயாரிப்பு கார்களையே பயன்படுத்துகிறார்கள். சென்னைக்கு வருகை தரும் சீன அதிபரின் பயன்பாட்டுக்காக 4 ஹன்கோ ரக கார்கள் சென்னை வந்துள்ளன. சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு 7 மணிக்கு வந்திறங்கிய சீன அரசுக்குச் சொந்தமான பி- 747 ரக விமானத்தில் இந்த கார்கள் வந்திறங்கின. வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு சீன அதிபர் சென்னை வருகிறார்.

ஹன்கோ காரில் சீன அதிபர்
ஹன்கோ காரில் சீன அதிபர்

விமான நிலையத்தில் இருந்தே அவர் ஹன்கோ கார்தான் பயன்படுத்துகிறார். விமான நிலையத்திலிருந்து கிண்டியில் உள்ள சோழா கிராண்ட் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். சீன அதிபர் பயன்படுத்தும் காரின் வலது புறத்தில் சீனக் கொடி பறக்கும். 18 அடி நீளமும் 6.5 அகலமும் கொண்ட இந்த கார் 5 அடி உயரமும் கொண்டது. சுமார் 3,152 கிலோ எடை கொண்ட இந்த கார் 8 விநாடிகளில் 100 கிலோ மீட்டர் ஸ்பீடை எட்டும் திறன் கொண்டது. மெர்சிடஸ் பென்ஸ் காரின் அதிகபட்ச எடை 2,390 தான்.

பத்மினியின் நடனத்தை ரசித்த சீன அதிபர்!- இது ஹிஸ்ட்ரி சுவாரஸ்யம்

சீன அதிபர்கள், அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் பயன்பாட்டுக்காகவே இந்த ரக கார்கள் தயாரிக்கப்படுகிறது. ஹன்கோ என்றால் `சிவப்புக்கொடி' என்று அர்த்தம். ஷாங்சூவான் நகரத்தில் ஹன்கோ ரக கார்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைந்துள்ளது. 1958-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. FAW கார் தயாரிப்பு நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் ஹன்கோ.

ஹன்கோ காரின் உட்புறத் தோற்றம்
ஹன்கோ காரின் உட்புறத் தோற்றம்

சீன அரசு அதிகாரிகள் தங்களின் தகுதிக்கேற்ப ஹன்கோ ரக கார்களை வாங்கலாம். சீன ராணுவமும் இந்த ரக கார்களை ஏராளமாக வாங்குகிறது. சீன அதிபர் பயன்படுத்தும் ஹன்கோ எல் -5 ரக கார்கள் சீனாவிலேயே விலை உயர்ந்தது. இதன் விலை கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய். இந்த ரக கார்களைவிட, விலை உயர்ந்த கார்கள் இருந்தாலும் ஹன்கோ கார்களுக்கு என்று தனி மவுசு உண்டு. முன்பெல்லாம், சீன அதிபர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டால், சம்பந்தப்பட்ட நாடுகள் அளிக்கும் கார்களையே பயன்படுத்திக்கொண்டிருந்தனர். சீன அதிபராக ஜின்பிங் பதவியேற்ற பிறகு அந்த நடைமுறையை மாற்றினார்.

மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜின்பிங்! - பிரதமரோடு பேசப் போகும் விஷயங்கள் என்னென்ன?