Published:Updated:

`கொரோனா எங்கள் பலவீனத்தை உணர்த்திவிட்டது’ - தங்கள் பிழையை ஒப்புக்கொண்ட சீனா

சீனா
News
சீனா

சீனாவின் பொதுச் சுகாதார அமைப்பின் பலவீனத்தை அறிய இந்தக் கொரோனா வைரஸ் உதவியுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று மொத்த மனிதக்குலத்தையும் ஆட்டிப்படைத்து கொடூரம் நிகழ்த்தி வருகிறது. தற்போதுவரை சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனைத் தாண்டிவிட்டது. அதேபோல் வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,80,000 -ஆக உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. அதே நேரம் வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் சர்வதேசப் பொருளாதாரம் பெரும் சரிவடைந்துள்ளது.

சீனா
சீனா
AP

இந்த மொத்த பாதிப்புக்கும் சீனாதான் காரணம் எனப் பல நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றன. சீனாவில் முதன்முதலில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டபோதே அதை முறையாகக் கையாளாமல் அலட்சியமாகச் செயல்பட்டதற்குத் தற்போது உலகம் பெரும் விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது என சீனாவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அரசு தங்களுக்குத் தேவையான சிகிச்சைகளை முறையாக வழங்கவில்லை, வைரஸ் பரவியதற்கு அரசுதான் காரணம் என சீன மக்களும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மீது குறை கூறி வருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில், கொரோனா காலத்தில் தங்கள் நாட்டின் சுகாதார அமைப்பின் பலவீனம் வெளிப்பட்டதாகச் சீனாவின் தேசிய சுகாதார மையத்தின் துணை இயக்குநர் லி பின் (Li Bin) தெரிவித்துள்ளார். கொரோனா பரவத்தொடங்கியது முதல் வைரஸ் தொடர்பான அனைத்து விஷயங்களையும் உலக சுகாதார அமைப்புடனும், பிற நாடுகளுடனும் உடனுக்குடன் முறையாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டு வருவதாக சீனா கூறிவருகிறது. ஆனால் இவை அனைத்துக்கும் மாறாக தங்கள் அரசின் பலவீனத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார் லி பின். சீனா மிகவும் அரிதாகவே தங்கள் பிழைகளை ஒப்புக்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.

சீனா
சீனா
AP

சீன தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த லி பின், “கொரோனா வைரஸ் பரவல் நம் நாட்டின் ஆளும் திறனுக்குப் பெரும் சோதனையாக அமைந்துவிட்டது. இது, நாம் பொதுச் சுகாதார அமைப்புகளில் எந்த அளவுக்குப் பலவீனமாக இருக்கிறோம் என்பதைக் கண்டறிய உதவியுள்ளது. நம் நாடு, சுகாதாரம் மற்றும் அவசர நிலைக்குப் பதிலளிக்கும் பிற அம்சங்களில் இன்னும் குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்பதை கொரோனா வெளிப்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வரும் காலத்தில் சீனாவின் பொதுச்சுகாதார அமைப்பு ஒரு மையப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த மற்றும் திறமையான அமைப்பை உருவாக்கும். எதிர்காலத்தில் எந்தவொரு பொது சுகாதார நெருக்கடிக்கும் விரைவாகவும் திறமையாகவும் பதிலளிக்கும் வகையில் இது உருவாக்கப்படும். மேலும் இந்த அமைப்பு மூலம் நோய்த்தடுப்பு, பொதுச் சுகாதாரம், தரவுகளைத் திரட்டுதல், செயற்கை நுண்ணறிவு, நோய்த் தடுப்பை எவ்வாறு நவீனமயமாக்குவது, நோய் வெடிப்புகளை இன்னும் துல்லியமாகக் கணிப்பது ஆகிய விஷயங்கள் மேம்படுத்தப்படும்” எனப் பேசியுள்ளார்.

சீனா
சீனா
AP

சீன சுகாதாரத்துறை மூத்த அதிகாரியின் பேச்சு சர்வதேச தலைவர்களுக்குப் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டனர். இருந்தும் அவ்வப்போது சிலர் அறிகுறி இல்லாமல் வைரஸால் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் கடந்த 24 நாள்களாக வைரஸால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.