Published:Updated:

`முதலையாகக்கூட மாறலாம்; தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன்!' - பிரேசில் அதிபர் சர்ச்சை பேச்சு

பிரேசில் அதிபர்

`ஃபைசர் ஒப்பந்தத்தில் `எந்தவொரு பக்கவிளைவுகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல’ என்று மிகவும் தெளிவாக இருக்கிறது. நீங்கள் ஒரு முதலையாக மாறினால், அது உங்கள் பிரச்னை” என்று பிரேசில் ஜனாதிபதி கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

`முதலையாகக்கூட மாறலாம்; தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன்!' - பிரேசில் அதிபர் சர்ச்சை பேச்சு

`ஃபைசர் ஒப்பந்தத்தில் `எந்தவொரு பக்கவிளைவுகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல’ என்று மிகவும் தெளிவாக இருக்கிறது. நீங்கள் ஒரு முதலையாக மாறினால், அது உங்கள் பிரச்னை” என்று பிரேசில் ஜனாதிபதி கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

Published:Updated:
பிரேசில் அதிபர்

அமெரிக்க நிறுவனம் ஃபைசர், ஜெர்மனியின் பயோ-என்-டெக் நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் அனுமதித்துள்ளன. எனவே, முதற்கட்ட தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருக்கிறது.

பிரேசில் 7.1 மில்லியனுக்கும் அதிகமான பாதிப்பையும், கிட்டத்தட்ட 1,85,000 இறப்புகளையும் கோவிட் -19 காரணமாக பதிவு செய்திருக்கிறது. இது, மரணங்களின் எண்ணிக்கையில் உலகின் இரண்டாவது மிக உயர்ந்த எண்ணிக்கை. இந்தநிலையில் தடுப்பூசி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பிரேசில் தடுப்பூசியின் சோதனைக்களமாகவும் இருந்துவருகிறது.

பிரேசில் ஜனாதிபதி
பிரேசில் ஜனாதிபதி

2021-ம் ஆண்டில் 350 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வாங்க அந்த அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இதில் 210 மில்லியன் ஆக்ஸ்ஃபோர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியில் பெரும்பாலானவை, பிரேசிலின் ஃபியோகிரூஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில், 70 மில்லியன் ஃபைசரின் தடுப்பூசி மற்றும் சர்வதேசக் கூட்டு நிறுவனமான கோவாஸ் தயாரித்த 42 மில்லியன் தடுப்பூசிகளும் அடங்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தநிலையில், பிரேசில் அதிபர் போல்சனாரோ புதன்கிழமை (16.12.20) அன்று ஒரு வெகுஜன நோய்த்தடுப்புப் பிரசாரத்தை தொடங்கினார். 16 மாதங்களுக்குள் 70 சதவிகித மக்களுக்குத் தடுப்பூசி போடுவதை நோக்கமாகக்கொண்டது அது. ஆனால், அதிபர் தனது சொந்தத் திட்டத்தை பலமுறை நாசப்படுத்தியிருப்பதாக விமர்சிக்கப்பட்டார். இந்தநிலையில் வியாழன் (17.12.20) அன்று பிரேசில் நாட்டுக்கு தடுப்பூசி வாங்க 20 பில்லியன் ரைஸை (3.9 பில்லியன் டாலர்) ஒதுக்குவதாக போல்சனாரோ செய்தி வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய போல்சனாரோ, ` `இந்தத் தடுப்பூசியால் ஏற்படும் எந்தவொரு பக்கவிளைவுக்கும் நாங்கள் பொறுப்பல்ல’ என்று ஃபைசர் நிறுவன ஒப்பந்தம் தெரிவிக்கிறது. அந்தத் தடுப்பூசியால் நீங்கள் தனித்துவமான மனிதராக மாறினால், ஒரு பெண்ணுக்கு தாடி வளர தொடங்கினால் அல்லது ஓர் ஆண் ஒரு பெண் குரலில் பேச ஆரம்பித்தால், அவர்களுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது. நீங்கள் ஒரு முதலையாக மாறினால், அது உங்கள் பிரச்னை. இது பெரும் பின்விளைவைக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது' என்று மருந்து உற்பத்தியாளர்களைச் சாடி கருத்து தெரிவித்திருக்கிறார்.

போல்சனாரோ
போல்சனாரோ

இந்தச் செய்தி வெளியான தினம் அங்கு 1,000 உயிரிழப்புகள் பதிவாகின. இது செப்டம்பர் மாதத்திலிருந்து கண்டிராத அதிகபட்ச எண்ணிக்கை. இன்னும் தடுப்பூசிகள் வாங்கப்படாத, விநியோகிக்கப்படாத நிலையிலும் அதிபரின் இந்தக் கருத்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

டேட்டாஃபோஹாவின் (Datafolha) கருத்து கணிப்பின்படி, கோவிட் -19 தடுப்பூசி போடத் தயாராக இருப்பவர்களின் எண்ணிக்கை ஆகஸ்டில் இருந்த 89 சதவிகிதத்திலிருந்து 73 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது.

மேலும், புதன்கிழமை நோய்த்தடுப்பு பிரசாரத்தைத் தொடங்கும்போது, ​​போல்சனாரோ, ``இந்தத் தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும். ஆனால் கட்டாயமில்லை' என்று கூறினார். ஆனால், வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் ``தடுப்பூசி கட்டாயமானது. இருப்பினும், அதை மக்கள்மீது திணிக்கக் கூடாது. அதாவது, அதிகாரிகள் தடுப்பூசி போடாததற்காக மக்களைச் சில பொது இடங்களிலிருந்து தடை செய்யலாம். ஆனால் அதை எடுத்துக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தக் கூடாது” என்று தீர்ப்பளித்தது.

பிரேசில்
பிரேசில்
Silvia Izquierdo

இதற்கிடையே அதிபர், `நான் இந்தத் தடுப்பூசியை போட மாட்டேன்' என்று கூறியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. அதற்கு பதிலளித்த போல்சனாரோ, `நான் மக்களுக்கு ஒரு மோசமான உதாரணமாக இருக்கிறேன் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அப்படிச் சொல்பவர்களுக்கு, நான் ஜூலை மாதமே வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருக்கிறேன். எனக்கு எதிர்ப்புசக்தி இருக்கிறது. எனவே, நான் ஏன் தடுப்பூசி போட வேண்டும்?' என்று விளக்கமளித்தார்.

தொற்று வந்து மீண்ட ஒரு மனிதருக்கு எவ்வளவு காலத்துக்கு எதிர்ப்பு சக்தி இருக்கும், மீண்டும் வரும் வாய்ப்புகள் எவ்வளவு, அதிலிருந்து மீளும் திறன் எவ்வளவு, தடுப்பூசிகள் எவ்வளவு பலனலிக்கும் என்று எதுவுமே நிலையாகச் சொல்ல முடியாத நிலையில் போல்சனாரோ அளித்திருக்கும் பதில்கள் பிரேசில் மக்களிடையே பதற்றத்தையும், அவர் மீதான சர்ச்சையையும் அவநம்பிக்கையுமே ஏற்படுத்தியிருக்கின்றன.