Published:Updated:

`கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது' - விஞ்ஞானி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

கொரோனா வைரஸ்
News
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

`கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது' - விஞ்ஞானி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கொரோனா வைரஸ்
News
கொரோனா வைரஸ்

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்தது. கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

இந்த நிலையில், சீனாவின் வூஹான் மாகாணத்தில் இயங்கும் `வூஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி' என்னும் ஆய்வுக் கூடத்திலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் கசிந்திருக்கிறது என்று அமெரிக்க விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹஃப் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு பணியாற்றிய முக்கிய விஞ்ஞானிகளில் அவரும் ஒருவராவார்.

`கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது' - விஞ்ஞானி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஹஃப் என்ற விஞ்ஞானி சீனாவின் வூஹான் வைராலஜி மையத்தில் சிறிது காலம் பணியாற்றியிருக்கிறார். இவர் `The Truth About Wuhan’ (தி ட்ரூத் அபவுட் வூஹான்) என்ற புத்தகத்தில் கொரோனா தொடர்பாகவும், வூஹான் வைராலஜி மையம் தொடர்பாகவும் பல முக்கியத் தகவல்களை தெரிவித்திருக்கிறார். இவர் EcoHealth Alliance என்ற அமைப்பின் துணைத் தலைவராக இருந்திருக்கிறார். இந்த அமைப்பு தொற்று பாதிப்புகள் தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தின் சில பகுதிகள் பிரிட்டன் ஊடகங்களில் வெளியாகி உலக அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

ஹஃப் எழுதிய ( The Truth About Wuhan) என்னும் புத்தகத்தில், ``வூஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா வைரஸ் கசிந்தது. 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வகையான கொரோனா வைரஸ்களை வைத்து இந்த வூஹான் ஆய்வு மையம் ஆய்வு செய்துவருகிறது. வைரஸ் ஆராய்ச்சி பற்றிய சோதனைகள் போதிய பாதுகாப்பின்றி நடைபெற்றன. இத்தகைய வெளிநாட்டு ஆய்வகங்களில் போதுமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லை. கொரோனா வைரஸ் இரண்டு வருடங்களுக்கு முன்பு மனிதனால் உருவாக்கப்பட்டது.

`கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது' - விஞ்ஞானி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அரசின் நிதியுதவியைக்கொண்டே, இந்த கிருமி சீனாவிலுள்ள ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டது. இத்தகைய ஆபத்தான 'உயிரி தொழில்நுட்பத்தை' சீனர்களுக்கு மாற்றியதற்கு அமெரிக்க அரசாங்கமே காரணம்'' எனத் தெரிவித்திருக்கிறார். சமீபத்திய விசாரணைகளின் அடிப்படையில், வூஹான் மாகாணத்தில் அமைந்துள்ள ஆய்வுக்கூடம் ஆபத்தான கொரோனா தொற்றுக்குத் தாயகமாக விளங்குவதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.