Published:Updated:

‘ஃபிடல் காஸ்ட்ரோவின் மந்திரம்; உலகைக் காக்கும் மருத்துவர்கள்’ -கியூபாவின் தலைசிறந்த சேவை! #Corona

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பல நாடுகளுக்குத் தன்னார்வமாகச் சென்று கியூபா மருத்துவர்கள் உதவி செய்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

‘கொரோனா’ வருங்காலத்தில் இந்தப் பெயரை யார் கூறினாலும் உலக மக்கள் அனைவரும் ஒரு சில விநாடிகள் அச்சம் கொள்வார்கள். கண்ணுக்கே தெரியாத மிகச் சிறிய உயிரினமான வைரஸ் அணுகுண்டை விட மிகவும் மோசமாகச் செயல்பட்டு இன்று உலகம் முழுவதிலும் சுமார் 27,000 -க்கும் அதிகமான மக்களை பலி கொண்டுவிட்டது. கோவிட் -19 வைரஸால் மொத்த மனிதகுலமும் நிலைகுலைந்து நிற்கிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் அங்கு 3,292 பேரை பலி கொண்டுவிட்டுத் தற்போது பிற நாடுகளை ஆட்டம் காண வைத்து வருகிறது.

இத்தாலி
இத்தாலி
AP

கொரோனா வைரஸால் அதிகம் உயிரிழப்புகளைச் சந்தித்த நாடாக இத்தாலி உள்ளது. இந்த வைரஸ் கடுமையான சுவாசப் பிரச்னையை உருவாக்குகிறது. எனவே இதனால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் அதிகமாக உயிரிழக்கிறார்கள். உலகிலேயே அதிக முதியவர்களைக் கொண்ட இரண்டாவது நாடாக இத்தாலி உள்ளது. அங்கு கொரோனா உயிரிழப்புகள் 9,000 - த்தைக் கடந்தத்துக்கு இதுவும் ஒரு பெரும் காரணம். இத்தாலியின் மோசமான நிலையைக் கண்டு அனைத்து நாடுகளும் அஞ்சி நடுங்கின. ஆனால், கியூபா அரசு மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த தன்னார்வ மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் இத்தாலிக்குச் சென்று அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்தனர்.

`இங்கு நாய் வளர்ப்போர் அதிர்ஷ்டசாலிகள்..!'- இத்தாலி லாக் டவுன் குறித்து தமிழரின் நேரடி ரிப்போர்ட்

கியூபா மருத்துவர்கள் இத்தாலிக்குச் சென்றதும் அங்கு உயிரிழப்புகள் சற்று குறையத் தொடங்கியதாகக் கூறப்பட்டது. கியூபா மருத்துவர்களின் வருகை இத்தாலி மருத்துவர்கள் மற்றும் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை அளித்தது. ‘இதை வெற்றி எனக் கூற முடியாது இருந்தும் சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் தெரிவதைப் போல உள்ளது’ என உயிரிழப்புகள் குறைந்த பிறகு இத்தாலி மருத்துவர் ஒருவர் இவ்வாறு கூறியிருந்தார்.

மிகவும் சிறிய நாடான கியூபாவிலிருந்து வந்து மருத்துவர்கள் செய்த அதிசயம் அனைத்து நாடுகளையும் ஆச்சர்யப்பட வைத்தது. தற்போது வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் கியூபா மருத்துவர்களின் உதவியை நாடியுள்ளனர். ஆனால், இதுபோன்ற பேரிடர் காலங்களில் கியூபா பிற நாடுகளுக்கு உதவுவது இது முதல்முறையல்ல.

இத்தாலி
இத்தாலி
AP

ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபா!

கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான கியூபாவில் சுமார் 49 ஆண்டுகள் தொடர்ந்து தனி மனிதராக ஆட்சி செய்தார் பொதுவுடைமை புரட்சியாளரான ஃபிடல் காஸ்ட்ரோ. ‘தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளுங்கள், தெரிந்தவர்கள் கற்றுக்கொடுங்கள்’ என்பது காஸ்ட்ரோவின் மிகப்பெரும் தாரக மந்திரம். அதன் படியே கியூபா முழுவதும் அனைவருக்கும் இலவசக் கல்வி மற்றும் இலவச மருத்துவ வசதி ஆகிய நடைமுறைகளைக் கட்டாயப்படுத்தினார். இதன் விளைவாக ஒரே ஆண்டில் அந்நாட்டில் படிக்க மற்றும் எழுதத் தெரிந்தவர்களின் அளவு 98.2% - ஆக உயர்ந்தது. இது மட்டுமல்லாமல் தன் நாட்டு மருத்துவக் குழு உலகளாவிய சுகாதாரத்துக்கு உதவவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் காஸ்ட்ரோ.

`இத்தாலியில் கியூபா டாக்டர்கள்!' - படிப்படியாகக் குறையும் கொரோனா இறப்பு விகிதம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கியூபாவில் இரண்டு வகையான மருத்துவர்கள் உள்ளனர். ஒரு குழுவைச் சேர்ந்த மருத்துவர்கள் கியூபாவில் மட்டும் வேலை செய்வார்கள் மற்றொரு குழுவைச் சேர்ந்த மருத்துவர்கள் கியூபாவைத் தாண்டி அனைத்து நாடுகளுக்கும் சென்று சேவை செய்வார்கள். பிற நாடுகளில் பேரிடர் ஏற்படும்போது கியூபா தன்னார்வ மருத்துவர்கள் அங்கு சென்று மக்களுக்கு உதவுவார்கள். இதற்குப் பலனாக அந்த நாடு பணம், பொருள் எது கொடுத்தாலும் பெற்றுக்கொள்வார்கள். கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது அதை எதிர்த்துப் போராடவும் மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணித்து வேலை செய்து வருகிறார்கள். கடந்த 60 ஆண்டுகளாக கியூபா நாட்டு அரசு அனைத்து உலக நாடுகளுக்கும் மருத்துவர்களை அனுப்பி வருகிறது.

கியூபா மருத்துவர்கள்
கியூபா மருத்துவர்கள்
AP

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் இத்தாலி கடுமையாகச் சிக்கித்தவித்த போது கியூபா 52 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அந்நாட்டுக்கு அனுப்பிவைத்தது. கியூபா மருத்துவர்களின் சிறந்த பயிற்சியும் ஆபத்தான மற்றும் மிகக் கடுமையான சூழ்நிலைகளில் பணியாற்றி அவர்கள் பழகிவிட்டார்கள் என்பது இத்தாலிய மக்களுக்குப் பெரும் ஆதரவாக இருந்தது. இத்தாலி இல்லாமல் மேலும் ஐந்து நாடுகளில் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குக் கியூபா மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்த போது இத்தாலியும் அமெரிக்காவின் பக்கம் நின்றது. ஆனால் அதைக் கருத்தில் கொள்ளாத கியூபா இன்று இத்தாலியில் எதிர்பார்ப்பு இல்லாமல் சேவை செய்து வருகிறது. கியூபாவிலும் வைரஸ் பரவல் உள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த 80 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் குணமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு