Published:Updated:

`ரஷ்யா எங்கள் பாதுகாப்புத்துறை இணையதளத்தை ஹேக் செய்துவிட்டது...' - உக்ரைன் அரசுத் தகவல்!

சைபர் தாக்குதல்

உக்ரைன் நாட்டின் பாதுகாப்புத்துறை இணையதளம் மற்றும் வங்கிகளின் இணையதளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

உக்ரைன் எல்லையில் கடந்த சில நாள்களாகவே போர்ப் பதற்றம் நிலவிவருகிறது. நேற்றைய தினம், ரஷ்யா தன் படைகளில் ஒரு பகுதியைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும், போர் செய்வதற்கு விரும்பவில்லை என்றும் தகவல் தெரிவித்தது.

உக்ரைன் ராணுவம்
உக்ரைன் ராணுவம்
AP

இந்த நிலையில், உக்ரைனின் தகவல் பாதுகாப்பு மையம் இது குறித்துக் கூறியதாவது, ``ரஷ்யாவைச் சேர்ந்த சைபர் குழு உக்ரைனின் பெரிய இரண்டு அரசு வங்கிகள் உட்பட குறைந்தது 10 இணையதளங்களை ஹேக் செய்துள்ளது. உக்ரைன் அரசுக்குச் சொந்தமான மிகப்பெரிய வங்கிகளான `Privatbank' மற்றும் `Sberbank' ஆகியவற்றில் ஆன்லைன் கட்டணங்கள் செலுத்துவது மற்றும் வங்கி பயன்பாடுகளில் சிக்கல் இருப்பதாக வங்கி பயனாளர்கள் புகாரளித்துள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் முடக்கப்பட்ட இணையதளத்தைத் மீட்க அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!