Published:Updated:

ஆப்கானிஸ்தான் போர்: `71,344 பொதுமக்கள்; 7,792 குழந்தைகள்' - கலவர பூமியில் பழிவாங்கப்பட்ட அப்பாவிகள்!

ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போரில் ஏராளாமான அப்பாவிகள் பழிவாங்கப்பட்டிருப்பதாகத் தரவுகள் சொல்கின்றன!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒருமாத காலமாகவே சர்வதேச தலைப்புச் செய்தியாக இருந்துவருவது தாலிபனும், ஆப்கானிஸ்தானும்தான்! தாலிபன்கள், ஆப்கனைக் கைப்பற்றிய பிறகு லட்சக்கணக்கான மக்கள் அந்த நாட்டைவிட்டு வெளியே செல்ல முயன்ற காட்சிகளை நாம் அனைவருமே பார்த்தோம். ஆனால், அதற்கு முன்பாகவே ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் ஆப்கனைவிட்டு வெளியேறியதாகத் தரவுகள் சொல்கின்றன. முடிவுறாத போரும், வன்முறையும், அதன் காரணமாக ஏற்பட்ட பஞ்சமும்தான் மக்கள் ஆப்கனைவிட்டு வெளியேறக் காரணமாக இருந்திருக்கிறது.

ஆப்கன்
ஆப்கன்
Vikatan Infographics
ஆப்கானிஸ்தான்: தாலிபன் அரசில் முக்கியப் பொறுப்புகளில் யார் யார்? - அதிரவைக்கும் பின்னணி!

ஆப்கன் உள்நாட்டுப் போரில் ஏராளமான அப்பாவிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 2010-2020 காலகட்டத்தில், அதிக அளவிலான குழந்தைகள் ஆப்கன் மண்ணில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த 10 ஆண்டுகளில், சுமார் 7,792 குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பள்ளிகளில் நிகழ்த்தப்படும் தாக்குதல் காரணமாகவும், பஞ்சத்தால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகவும் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றனர்.

அகதிகள்
அதிகபட்சமாக 14.48 லட்சம் ஆப்கன் மக்கள், பாகிஸ்தான் மண்ணில் அகதிகளாக வாழ்ந்துவருகின்றனர்!

ஆப்கன் மண்ணில் அமெரிக்கா கால்பதித்த 2001 முதல் 2021 ஏப்ரல் வரையிலும் 71,344 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதே காலகட்டத்தில், அரசுக்கு எதிராகச் சண்டையிட்ட தாலிபன் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 84,191 பேரும், ஆப்கன் ராணுவம், காவல்துறையைச் சேர்ந்த 78,314 பேரும் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளில், அமெரிக்கா, நேட்டோ நாடுகளின் வீரர்கள் 3,586 பேரும், பத்திரிகையாளர்கள் 136 பேரும் ஆப்கன் மண்ணில் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

கலவர பூமியான ஆப்கன் குறித்த மேலும் சில தரவுகளைக் கீழுள்ள இன்ஃபோகிராபிக்ஸில் காணலாம்..!
ஆப்கன் போர்
ஆப்கன் போர்
Vikatan Infographics
வீடு வீடாகப் பெண்களைத் தேடும் தாலிபன்கள்... ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது?!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு