Published:Updated:

இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தாவூத் இப்ராகிம் - பாகிஸ்தான் பெண்ணை மணந்தார்!

தாவூத் இப்ராகிம்
News
தாவூத் இப்ராகிம்

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான் பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.

இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தாவூத் இப்ராகிம் - பாகிஸ்தான் பெண்ணை மணந்தார்!

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான் பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.

Published:Updated:
தாவூத் இப்ராகிம்
News
தாவூத் இப்ராகிம்

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவரும் தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தானில் பதுங்கியிருக்கிறார். `தாவூத் தங்களது நாட்டில் இல்லை’ என்று பாகிஸ்தான் கூறிக்கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசியப் புலனாய்வு ஏஜென்சி மும்பையில் தாவூத் இப்ராகிமுக்கு வேண்டப்பட்டவர்களின் வீடு, அலுவலகத்தில் ரெய்டு நடத்தியது. இதில் தாவூத் இப்ராகிம் சகோதரி கசீனா பார்கர் மகன் அலி ஷாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது தவிர தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படும் சோட்டா சகீல் உறவினர் புரூட்வாலா என்பவரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தாவூத் இப்ராகிம் - பாகிஸ்தான் பெண்ணை மணந்தார்!

இது தொடர்பாக தேசியப் புலனாய்வு ஏஜென்சி, சோட்டா சகீல் உட்பட தாவூத் கூட்டாளிகள் நான்கு பேர் மீது சர்வதேச அளவில் தீவிரவாதச் செயலில் ஈடுபட்டதாக மும்பை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. அதில் அலி ஷா கொடுத்திருக்கிற வாக்குமூலம் இடம்பெற்றிருக்கிறது. தாவூத் இப்ராகிம் இரண்டாவதாக பாகிஸ்தான் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறது. அதேசமயம் தாவூத் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

முதல் மனைவி மீதான விசாரணை ஏஜென்சியின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்தில் தாவூத் இரண்டாவது திருமணம் செய்திருக்கலாம் என்று கருதுவதாகவும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் துபாயில் தாவூத்தின் முதல் மனைவியைப் பார்த்ததாகவும், இந்தச் சந்திப்பின்போதுதான் இரண்டாவது திருமணம் குறித்து தனக்கு தெரியவந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறது. தாவூத்தின் முதல் மனைவி இந்தியாவிலுள்ள தாவூத் உறவினர்களுடன் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலம் தொடர்பில் இருப்பதாகவும், தாவூத் இப்ராகிம் கராச்சியில் இருப்பதாகவும் அலி ஷா தெரிவித்ததாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.