Published:Updated:

இங்கிலாந்து: ரிஷி சுனக்-லிஸ் ட்ரஸ் கலந்துகொண்ட விவாத நிகழ்ச்சி... திடீரென மயங்கி விழுந்த தொகுப்பாளர்

ரிஷி சுனக்-லிஸ் ட்ரஸ் கலந்துகொண்ட விவாத நிகழ்ச்சி ( ட்விட்டர் )

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பெண் தொகுப்பாளர் கேத் மெக்கான் திடீரென மயங்கி விழுந்தார். இதைக் கண்டதும் சுனக் தொகுப்பாளரை நோக்கி விரைந்து ஓடினார்.

இங்கிலாந்து: ரிஷி சுனக்-லிஸ் ட்ரஸ் கலந்துகொண்ட விவாத நிகழ்ச்சி... திடீரென மயங்கி விழுந்த தொகுப்பாளர்

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பெண் தொகுப்பாளர் கேத் மெக்கான் திடீரென மயங்கி விழுந்தார். இதைக் கண்டதும் சுனக் தொகுப்பாளரை நோக்கி விரைந்து ஓடினார்.

Published:Updated:
ரிஷி சுனக்-லிஸ் ட்ரஸ் கலந்துகொண்ட விவாத நிகழ்ச்சி ( ட்விட்டர் )

கடந்த ஜூலை 7-ம் தேதி, பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய போரிஸ் ஜான்சன், ``இந்த அரசாங்கத்தின் சாதனைகளுக்காகப் பெருமிதம்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

போரிஸ் ஜான்சனின் பதவி விலகலைத் தொடர்ந்து, புதிய பிரதமரைத் தேர்வுசெய்யும் பணியில், ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி தீவிரமாக இறங்கியிருக்கிறது. இந்தத் தேர்தலில், இந்திய வம்சாவளியான ரிஷி சுனக், வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் உட்பட சில எம்.பி-க்கள் போட்டியிட்டனர். இதில் பல்வேறு சுற்றுகளின் முடிவில் ஒவ்வொரு எம்.பி-யாக வெளியேற ஆரம்பித்தனர். தொடக்கம் முதலே அதிக வாக்குகளுடன் ஆதிக்கம் செலுத்திவந்த ரிஷி சுனக் - லிஸ் ட்ரஸ் ஆகியோர் தற்போது இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரிஷி சுனக் - லிஸ் டிரஸ் இருவரும் பங்கேற்று விவாதித்துக்கொண்டிருந்தனர். அப்போது, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பெண் தொகுப்பாளர் கேத் மெக்கான் திடீரென மயங்கி விழுந்தார். இதைக் கண்டதும் சுனக் தொகுப்பாளரை நோக்கி விரைந்து ஓடினார். அவரைத் தொடர்ந்து, ட்ரஸ்ஸும் பதறிப்போய் பெண் தொகுப்பாளர் அருகில் சென்று அவரைப் பரிசோதித்தனர். அதன் பிறகு, அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, நிகழ்ச்சி பாதியில் முடிந்து, நேரடி ஒளிபரப்பு ரத்துசெய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது பெண் தொகுப்பாளர் கேத் மெக்கான் நலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!