Published:Updated:

ரஷ்யா - இந்தியா விவகாரம்: ``ஆழ்ந்த ஏமாற்றமளிக்கிறது!" - அமெரிக்க வர்த்தக செயலாளர்

அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ ( twitter )

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் மோடியை சந்திக்க இந்தியா வரவிருக்கும் நிலையில், உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடுகள் ஆழ்ந்த ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது.

ரஷ்யா - இந்தியா விவகாரம்: ``ஆழ்ந்த ஏமாற்றமளிக்கிறது!" - அமெரிக்க வர்த்தக செயலாளர்

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் மோடியை சந்திக்க இந்தியா வரவிருக்கும் நிலையில், உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடுகள் ஆழ்ந்த ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது.

Published:Updated:
அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ ( twitter )

36 நாள்களாக உக்ரைனில் போர் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergei Lavrov) இரண்டு நாள் பயணமாக (மார்ச் 31, ஏப்ரல் 1) பிரதமர் மோடியை சந்திக்க இந்தியா வருகிறார். ஏற்கெனவே ரஷ்யா-உக்ரைன் விவாகரத்தில் இந்தியா, ரஷ்யாவுக்குக் கண்டனம் எதுவும் தெரிவிக்காததாலும், ஐ.நா சபையில் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை புறக்கணித்ததாலும் அமெரிக்கா பலமுறை இந்தியாவை மறைமுகமாக விமர்சித்து வந்தது. குறிப்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ``ரஷ்யாவுக்கு எதிராக முடிவெடுப்பதில் இந்தியா சற்று நடுங்குகிறது" என்று வெளிப்படையாகவே இந்தியாவைப் பற்றி கூறியிருந்தார். மேலும் இந்தியா ரஷ்யாவுடன் ராணுவத் தளவாடங்கள், கச்சா எண்ணெய் வாங்குவதில் நட்புறவில் இருப்பதால்தான், உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கிறது என பலரும் கூறிவருகின்றனர். இந்த நிலையில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியா வருவது பற்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்தியாவை விமர்சிக்கும் விதமாகப் பேசியுள்ளன.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியா வருகை
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியா வருகை

நேற்று வாஷிங்டனில் செய்தியாளர்களிடத்தில் உக்ரைன் விவகாரம் குறித்துப் பேசிய அமெரிக்காவின் வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ (Gina Raimondo), ``வரலாற்றின் வலது பக்கத்தில் நிற்பதற்கான நேரம் இது. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து, சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் இறையாண்மைக்காக உக்ரைன் மக்களுடன் நிற்க வேண்டும். மேலும், அதிபர் புதினின் போருக்கு நிதியளித்தல், எரிபொருள் வழங்குதல் கூடாது" எனக் குறிப்பிட்டு, ``இந்தியாவின் ஏற்பாட்டு அறிக்கைகள் ஆழ்ந்த ஏமாற்றம் அளிக்கிறது" என்று ரஷ்ய அமைச்சரின் இந்தியா வருகை குறித்து கவலை தெரிவித்தார்.

இவரைத்தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் டான் டெஹான்(Dan Tehan), "இரணடாம் உலகப் போருக்குப் பிறகு நாங்கள் கொண்டிருந்த விதிகள் அடிப்படையிலான அணுகுமுறையை வைத்திருக்க ஜனநாயகங்கள் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம்" என்று பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism